காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

உதிரிப்பூக்கள் – டிசம்பர் 21, 2010

December 21, 2010

யானைக்குட்டி


கோவை வனச்சரகத்தில் பிறந்த சில மணிநேரங்களிலேயே யானைக்குட்டி ஒன்று கைவிடப் பட்டுள்ளதாம்..  அதை அதன் தாயுடன் சேர்க்க நடந்த முயற்சிகள் (மனித வாசனை பட்டால், யானைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், யானையின் சாணத்தை பூசிக்கொண்டு, அந்த குட்டியை பராமரித்துள்ளார்கள்) தோல்வியடைந்து, அந்த குட்டி வண்டலூரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது..

இது எல்லாருக்கும் தெரிஞ்ச செய்திதான்… ஆனால் எனக்கு எரிச்சல் வந்தது தினமலர் பாத்து தான். அந்த யானை குட்டி ‘சொகுசாக’ காரில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டதாம். என்ன ‘சொகுசு’!!! தாயை பிரிந்து, வாழ போராடும் ஒரு குட்டி, வண்டியில் ஏற்றி அனுப்பபட்டால், அதுக்கு பேரு சொகுசா???

விஜயகுமார், வனிதா நியூஸ் கவர் பண்றதைக் காட்டிலும், இந்த மாதிரி செய்திகளையாவது இந்த பத்திரிக்கைகள் அதிகம் போடலாம்… அந்த வகையில ஹிந்து பத்திரிக்கை பரவாயில்லை…
-----------------------------------------------------------------------------------------------------------------------------
வந்தார்கள் வென்றார்கள்


மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ படித்தேன். நல்லாயிருந்தது. (1995ல வந்த புத்தகம். இப்பத்தான் படிக்கமுடிஞ்சது… இவ்வளவு நாளா எப்படித்தான் மிஸ் செய்தேனோ!!!)

பெட்டி செய்திகள் ஸ்வாரஸ்யமாக இருந்தது…
அரச பதவிக்கு போட்டியாக இருப்பவர்களின் கண்களை நோண்டியெடுப்பார்களாம்… இல்லைன்னா பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பிய கண்ல விட்டு கண்ணைக் குருடாக்குவார்களாம் என்ன கொடுமை சார் அது?

அதில் போரில் வென்ற பின், பிடிபட்ட ஆயிரக்கணக்கான கைதிகளை பார்த்து தைமூர் சொல்லும் ஒரு டயலாக்…
‘இதில் கட்டடக் கலைஞர்களையும், ஓவியர்களையும், சிற்பிகளையும் நம்முடன் கொண்டு செல்வோம். எதற்கும் உபயோகமில்லாத 
க(ம)ற்றவர்கள் தலைகள் வழக்கம்போல் சீவப்படலாம்’

அந்த காலத்தில் அவர்களுக்கு தான் மவுஸ்… இந்த காலத்தில் ஓவியர்களையும், சிற்பிகளையும் நாம் மதிப்பதேயில்லை…

-------------------------------------------------------------------------------------------------------------------------------

தெளிவு, திறமை, நேர்மை ஆகியவற்றின் மொத்த உருவமாக பிரதமர் மன்மோகன் சிங் இருக்கிறார்
 --- இப்படி இந்த வார காமெடியை சிரிக்காமல் சீரியசாக சொல்லியிருப்பவர் வேறு யாருமில்லை… சோனியா காந்தி தான்..

-------------------------------------------------------------------------------------------------------------------------------


மன்னன் படத்தின் இந்தி பதிப்பு பார்த்தேன். தனுஷ், ஜெயம் ரவி மட்டும் இல்லை, ரஜினி, கமல், MGR, சிவாஜி ஆகியோரின் படங்களும் பெரும்பாலும் காப்பி தான். என்ன ஹிந்தியில இருந்து இருக்கும். 
கொஞ்சம் ZEE cinema, Star Gold சேனல்கள் பார்த்தால் தெரிந்துபோய்விடும்.

என்னதான் ஸீன் பை ஸீன் எடுத்திருந்தாலும் ஒருவர் செய்ததை இன்னோருவரால் செய்யவே முடிவதில்லை…

எங்க வீட்டுபிள்ளை படம் கன்னடத்தில் விஷ்ணு வர்த்தன் செய்திருப்பார். அவர் நல்ல நடிகர் தான். சந்தேகமில்லை. ஆனால் அந்த சாட்டையை சுழற்றிக்கொண்டு MGR பாடும் ‘நான் ஆணையிட்டால்’ பாட்டை நின்ற இடத்திலேயே நின்று கொண்டு விஷ்ணு வர்த்தன் செய்யும் போது, கை தன்னியல்பாக சேனலை மாற்றவே செய்யும்.

Back to மன்னன் ஹிந்தி பதிப்பு.. ஸ்ரீதேவி தான் விஜயசாந்தி கேரக்டரில். அந்த மிடுக்கும், அகங்காரமும் ஸ்ரீதேவிக்கு வரவில்லை… கண்ணில் கோபம் வந்தாலும், body language சரியாக வரவில்லை அவருக்கு…

ரஜினியை அப்பாயிண்ட் செய்யும் சீனில்
‘நீங்க ஜிஜிபாய் கம்பெனில வேலை பாத்தீங்களோ, இல்லை பாஜிபாய் கம்பெனில வேலை பாத்தீங்களோ எனக்கு கவலையில்லை என்று ஆரம்பித்து நெத்தியில பட்டை, உத்திராட்ச கொட்டை’ என்று instruction கொடுப்பதாகட்டும், செக்ரட்டரி எங்கே என்று கேட்கும் ரஜினியிடம் கை சொடுக்குவதாகட்டும், இல்லை தியேட்டரில் ரஜினிக்கும் கவுண்டமணிக்கும் மோதிரத்தையும், செயினையும் அப்படி அலட்சியமாக கொடுக்கும் (போடும்) ஸீனாகட்டும் விஜயசாந்தி தான் டாப்பு.. சான்சேயில்லை அவ்வளவு நல்லா செய்திருக்கிறார்..





Read more...

திருக்கடையூர் – திருக்கோவில் பயணம்

December 16, 2010

 திருக்கடையூர். பெயர் கேட்டதும், திருக்கடையூர் அபிராமி என்று பெரும்பாலும் சொல்லிவிடுவோம். முன்ன பின்ன நாம அந்த கோவிலுக்கு போகலின்னாலும், மார்கழி மாத பஜனை பாடல்களில் நமக்கு நல்ல பரிச்சயமான கோவில் தான்.

கோவிலின் அம்மை - திருக்கடையூர் அபிராமி
கோவிலின் ஈசன் – அமிர்த்தகடேஸ்வரர்

மயிலாடுதுறையில் இருந்து டவுன் பஸ் போகிறது. ஆனால் 1 மணி நேரம் ஆகின்றது… (டவுன் பஸ்.. அதுவும் அரசு பஸ்.. வேகத்துக்கு கேக்கவா வேணும்!!!!) கும்பகோணம் தான் போக்குவரத்து கழகத்தின்  zonal ஆஃபிஸ். அதனால் தானோ என்னவோ, கும்பகோணம், மயிலாடுதுறையில் பஸ்கள் அனைத்தும் பரிதாபகரமான நிலையில் இருக்கின்றன… காயலான் கடைக்கு எடுத்து போனால் உடைத்துப்போட நம்மிடமே காசு கேட்பார்கள் என்ற சொற்றொடர் இந்த பஸ்களை பார்த்து தான் வந்திருக்கும் போல!!!!

கோவிலின் முகப்பு

இந்த கோவிலில் 60ம் திருமணங்கள் தான் மிகவும் விசேஷம்… கல்யாணங்களை போன்றே அவைகளும் மிக விசேஷமாய், ஆடம்பரமாய் நடத்தப்படுகின்றன… கோவிலெங்கும் , திருமண கோலமாய் இருக்கின்றது. சொந்தபந்தம் அனைத்தையும் அழைத்து, எல்லா சம்பிரதாயங்களை (ரூ4000, ரூ 8000) செய்பவர்களும் இருக்கின்றார்கள், அர்ச்சனை மட்டும் (ரூ 96, அர்ச்சகருக்கு 200) செய்து கொண்டு தாலி கட்டிக் கொள்பவர்களும் இருக்கின்றார்கள்.

வாக்கிங் போகும் யானை
நாமெல்லாம் வாக்கிங் போனால் காலையில் இல்லேன்னா மாலையில் போவோம், ஆனால் இந்த கோவில் யானை நாள் முழுவதும் வாக்கிங் போகின்றது…  அதாவது கல்யாணத்துக்கு சீர் வரிசை எடுத்து வருபவர்களை கோவிலின் நுழைவாயிலில் இருந்து கொடிமரம் வரை அழைத்து வருகின்றது… (ஆசை தோசை… அப்பள வடை…  சும்மா வருமா… அதுக்கு தனியா டப்பு தரணும்…).  ஒரு  செட்டு வந்ததும் இன்னோரு செட்டு ரெடியா இருக்கு… பாவம் யானைக்கு தான் அந்த கோவில்ல ஓய்வேயில்ல…

யானையுடன் சீர் வரிசை கொண்டுவருவோர்


அங்க அர்ச்சகர்கள் எல்லாம் பயங்கர பிசி (கவுண்டமணி மாதிரி இல்ல.. நிஜமாவே பிசி தான்…) ஆளாளுக்கு கையில செல்போஃன் வெச்சு நல்லா கல்லா கட்டறாங்க… ஒரே சன்னிதியில் அத்தனை அர்ச்சகர்களும் எப்படித்தான் அர்ச்சனை செய்யறாங்களோ!!!! (அடடே ஆச்சர்யக்குறி!!!)… ஒரே ஆச்சர்யம் தான்…


அம்மன் சன்னிதியில் வாயில் காக்கும் மகளிரணி

கோவில் நல்லா பெரிசாவே இருக்கு… கோவில்ல என்னைக் கவர்ந்த இன்னோரு விஷயம், அங்கயிருந்த ரெண்டு பெரிய குத்துவிளக்குகள்… ஆளுயரத்துக்கு இல்லை இல்லை…. ஓர் ஆளை விடவும் உயரமாக இருந்தன அவை… (பக்கத்தில் இருக்கும் சின்ன அகல்விளக்கை பார்த்தால், அந்த விளக்குகளின் பிரம்மாண்டம் புரியும்… )
பிரம்மாண்டமான குத்துவிளக்குகள்

 ஆக மொத்தத்தில் இந்த முறை  terror விசிட்டாக இல்லாமல், நல்லதொரு பயணமாகவே அமைந்தது… 

Read more...

காதலும் கத்திரிக்காயும்

December 3, 2010

‘சுபத்ராம்மா…’
‘பேஃன் ரிப்பேர் பண்ணியாச்சும்மா’
‘செக் பண்ணிக்கோங்க’
‘இதோ வர்றேன்… ப்பா..’
‘சீக்கிரம்மா.. இன்னும் ரெண்டு வீட்டுக்கு போகணும்மா.. நீங்க அவசரமா சரி செய்யணும்ன்னு கூப்பட்டதால தான் வந்தேன்..’
‘இதோ ஆச்சுப்பா… ஐயா இன்னிக்கு ஊர்லிருந்து வந்துருவாரு.. அதான் அவசரமா சரி செய்ய சொன்னேன். சரி நல்லா ஒடுது.. ஓகேப்பா..’
‘சரி வரேம்மா…’


அப்பா… பேஃன் ரிப்பேர் பாத்தாச்சு.. பாவம்… ஒரு வாரம் ஆபிஸ் விஷயமா டூர் போயிட்டு இன்னைக்குத்தான் அவர் வர்றார்.. வந்ததும் கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா டிவி பாப்பாரு.. அப்ப போயி பேஃன் ஓடலன்னா.. அதான் எப்படியோ ஆளைக் கூப்பிட்டு சரி செஞ்சாச்சு…

ஐய்யயோ!!! அடுப்புல தீயுதே!!!

வெண்டைக்காய் பொறியல்ன்னா ரொம்ப இஷ்ட்டம் அவருக்கு.. ஆனா இப்படி சட்டிய தீச்சிட்டமே… சரி வேற பாத்திரத்தில் செய்வோம்..
அப்படியே கொஞ்சம் கொள்ளு ரசமும் வைப்போம்.. அவருக்கும் பெரியவ திவ்யாவுக்கும் புடிச்ச ஐட்டம்..

பாவம் மனுசன்… ஒரு வாரமா ஹோட்டல் சாப்பாடு சாப்ட்டு அலுத்து போயிருப்பாரு.. ஒரு புடி பிடிக்கறமாதிரி செஞ்சு வெக்கணும்..

--------
சீக்கிரம் சமையலை முடிச்சிட்டு வீட்டை க்ளீன் செஞ்சு
வைக்கணும்.. நியூஸ் பேப்பர்ல்லாம் எடுத்து வெக்கணும்.. ஒரு வாரத்துக்கும் சேர்த்து ஏதோ எக்ஸாமுக்கு படிக்கறாப்ல பேப்பர படி படின்னு படிப்பாரு..

வீட்ல பேப்பர் படிக்கறத தவிர வேற ஒண்ணும் செய்யறதில்லைன்னாலும், இன்னிக்கு அவர ஒண்ணுமே சொல்லக்கூடாது.. 

நமக்கும் வாய் கொஞ்சம் நீளம் தான்.. டக்குன்னு டக்குன்னு சண்டை போடறேன்.. பாவம் அவரு..



ரெண்டு மணிக்கு வரேன்னு சொன்னாரே.. மணி மூன்றை ஆச்சே.. இன்னும் காணமே…
போஃன் பண்ணி பாப்பமா…
வெளியில போன மனுசன் வீடு வந்து சேர்ற வரைக்கும் பயமாத்தான் இருக்கு.. தினமும் நியூஸ் பேப்பர் பாத்தாலே டென்ஷனாகுது…
காலிங்பெல் சப்தம் கேட்குதே.. வந்துட்டாரு போல..

‘சுபா’
‘ஏங்க… இவ்வளவு லேட்டு..?’
‘பஸ் கிடைக்கலம்மா…’
'வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதாங்க?'
'ம்.. ஆச்சும்மா'
‘இந்தா.. இதை உள்ள வை..’
‘என்னங்க இது…?’
பிள்ளைங்களுக்கு ஸ்நாக்ஸா?
‘இல்லை மா.. வர்ற வழியில கத்திரிக்காய் வித்துட்டு இருந்தான்.. நல்லாயிருந்துச்சு.. அதான் ஒரு கிலோ வாங்கினேன்’
‘ஏங்க.. எதுக்கு இப்ப கத்திரிக்காய் வாங்கிட்டு வந்திருக்கீங்க.. ?’

‘ஏற்கனவே பிஃரிட்ஜ்ல அரை கிலோ கத்திரிக்காய் இருக்கு.. ஒரு வாரம் கழிச்சு வர்றீங்களே!!! பிள்ளைங்களுக்கு சாப்பிட ஒண்ணும் வாங்கிட்டு வராம… இத வாங்கிட்டு வந்திருக்கீங்களே!!!’
‘எப்படித்தான், இப்படி ஏற்கனவே இருக்கற காயா கரெக்ட்டா பாத்து வாங்கிட்டு வருவீங்களோ!!!!’
‘கொஞ்சமாச்சும்………………….’
‘---------------------------------------‘
‘------------------------------------------------------------------------------‘
‘-----------------------------------------------------------------------------------'
(Thanks to Ifood.tv for the image)

Read more...

கும்பகோணம் கோவில்கள் - ஒரு terror பயணம்

November 21, 2010

திருப்பதியில தடுக்கி விழுந்தா மொட்டைகள்...
கும்பகோணத்துல தடுக்கி விழுந்தா கோவில்கள்... 

ஏகப்பட்ட கோவில்கள்... ஏற்கனவே ரெண்டொரு முறை சென்றிருக்கிறேன்... எல்லாம் பரிகார பூஜைகளுக்காகத்தான்...

இந்த முறை சென்றது திருநாகேஷ்வரம்.... அதுவும் ஞாயிறு ராகுகால பூஜைக்கு...  நாக கன்னிக்கு பாலபிஷேகம் செய்யணும்ன்னு (வேற யாரு., ஜோசியர் தான்) சொல்லிட்டதால, பெத்தவங்க அதை நம்பறதால... escape ஆகவே முடியல(நான் அவ்வளவு நல்ல பொண்ணு... பெத்தவங்க  சொன்னா அப்படியே கேப்பேன்...  ஆனா எப்ப கேப்பேன்னு தான் ... ஹி... ஹி.. )


ஏகப்பட்ட ஞாயிறு escape ஆகிட்டேன்.  இப்படியே போனா இவ இந்த ஜென்மத்துல போகமாட்டான்னு தெரிஞ்சுக்கிட்டவங்க, போன ஞாயிறு  கட்டியிழுக்காத குறையா கூட்டிட்டு போயிட்டாங்க... ஆனாலும் வடிவேலு மாதிரி வாண்டடா வந்த மாதிரியே ஸீன் போட்டுட்டே போனேன்... 

ரயிலேறி, பஸ் மாத்தி, அந்த புண்யஸ்தலத்தில் கால் வைக்க போறேன்... 

பாலபிஷேகமா... இப்படி வாங்க...  சீக்கிரமா வாங்க... பையை இங்க வைங்க.. ன்னு ஒரே நேரத்துல ஒரு நாலஞ்சு பேரு சுத்தி நின்னுகிட்டாங்க....  விட்டா கைய பிடிச்சு கூட்டிட்டு போயிடுவாங்க போல... இதேன்னடா இது கும்பகோணத்துல நமக்கு வந்த சோதனைன்னு நினைச்சு உள்ள போனா... பாலபிஷேகம் டோக்கன் ரூ. 100. ன்னு போட்ருந்த்து... அதுக்கு அடுத்தது  500 ருபாய் டோக்கன் தான் இருந்தது..  சரி 100 ரூபாய் தான் கம்மின்னு அந்த சீட்ட வாங்கினோம்..


4.30 - 6.00  தான் ராகு காலம்... அப்ப தான் பூஜை பண்ணுவோம்... எதுக்கும் நீங்க 2.30க்கே வந்துடுங்கன்னு சொன்னாங்க... சரி.. இன்னும் தான் டயம் இருக்கேன்னு பக்கத்துல இருக்கற உப்பிலியப்பன் கோவிலுக்கு போயிட்டு 2 மணிக்கு வந்தோம்...

அடடா... 2.30 வர சொன்னதுக்கு நாம 2 மணிக்கே (!!!!) வந்துட்டமே... பரவாயில்ல... முன்னாடியே போயி வரிசையில நின்னுட்டமின்னா சீக்கிரமா வந்தர்லாம்ன்னு நெனச்சி அங்க போனா....

அங்க ஒரு 500 பேர் ஏற்கனவே (!!!!) நின்னுட்டு இருந்தத பாத்து எனக்கு மயக்கமே வந்துருச்சு... 

இது ஆகற விஷயமில்லை... பேசாம 500 ரூபாய் சீட்டுக்கே போயிடலாம்ன்னு பாத்தா... அதுக்கும் ஒரு பெருங்கூட்டம் இருந்தது...இத்தனைக்கும் ஒரு சீட்டுக்கு ஒருத்தர தான் விடறாங்க..

சரி... நடக்கறது நடக்கட்டும் ன்னு 100 ரூபாய் கூட்டத்திலேயே ஜக்கியமானேன்...


நமக்கும் பின்னாடி வந்தவர்களின் ரியாக்ஷனயும், மற்ற பெண்களின் புடவைகள், அதன் நிறங்கள், வேலைப்பாடுகள்,  அவங்க வளையல், தோடு, பொட்டு டிசைன்கள், அவர்கள் குழந்தைகள்,(எத்தனை ஆண் குழந்தைகள், எத்தனை பெண் குழந்தைகள்), யார் யார் என்னேன்ன செல்போன் வெச்சிருக்காங்க, எத்தனை பேர் மொட்டை போட்டிருக்காங்கஎத்தனை பேர் கண்ணாடி போட்ருக்காங்க, என்ன சட்டை போட்ருக்காங்க, அதுல எத்தனை கட்டம் இருக்குது ன்னெல்லாம் லிஸ்ட் எடுத்து, மேலே வானம், கீழே பூமி, சைடுல தூண்கள்ன்னு எல்லாத்தையும் வேடிக்கை பாத்து அந்த இரண்டரை மணி நேரத்தை கடத்தினேன்...


மடை திறந்த வெள்ளம் எப்படியிருக்கும்ன்னு எனக்கு தெரியாது... ஆனா வாசல் திறந்த கூட்டம் எப்படியிருக்குன்னு நான் அனுபவப்பட்டேன்....  திபு திபுன்னு ஒடி, மோதி, இடித்து, உட்கார்ந்து,  நிமிர்ந்து பார்த்தால் எனக்கு முன்னாடி உட்காந்திருந்தவரின் தலை தான் தெரிந்தது...

இன்டு, இடுக்கில் எட்டி பார்த்து, மேலே தவ்வி,, கீழ குனிஞ்சி, ஒரு வழியா அபிஷேகம் பார்த்து, முடிவேயில்லாத இன்னும் இரண்டு வரிசைகளைக் (அபிஷேகப் பாலை வாங்க ஒன்று, தேங்காய் பழ பை வாங்க ஒன்று) கடந்து, மீண்டும் பஸ் ஏறி, ரயிலடிக்கு வந்தால் அங்க இருந்த நிறைய பேர் கையில அதே பாலபிஷேகப் பை (சேம் பிளட்...)

கண்ணாபின்னான்னு கூட்டம்... அதுல கஷ்டப்பட்டு ரயில் ஏறியது இன்னோரு பதிவிற்கானது...

பேசாம நம்ம சுற்றுலாத்துறை கும்பகோணத்தை பரிகார zone என்று அறிவித்து, சலுகை வகைகளில் நிலம் ஒதுக்கீடு செய்து, ரூம்கள், கழிப்பிடங்கள் கட்டித் தரலாம், கும்பகோணம் முழுவதும்...  மேலும் எல்லா ஊர்களில் இருந்தும் ரயில்களும், பஸ்களும் விடலாம்...

சுற்றாலாத்துறைக்கு நல்ல லாபம் தரும் ஊர் இது... ப்ரொப்சனலாக செய்தால்...

அப்படி செய்யாததினால் நஷ்ட்டம்  சுற்றாலாத்துறைக்கு,
எரிச்சல் நமக்கு,
லாபம் யாருக்கோ.....

Read more...

சமையல் – ஒரு mix and match

October 14, 2010

தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ சமையல் குறிப்புன்னு நினைச்சு உள்ளே வந்திருந்தீங்கன்னா….. sorry… fate plays….
Actuala இது என்ன சாப்பாட்டுக்கு என்ன side dish நல்லாயிருக்குங்கற பதிவு தான்
ஒரு தங்கமணி எப்படி சமையல் செய்வதுன்னு தான் பதிவு போடணும்அது தான் பதிவுலகின் எழுதப்படாத விதி….
but சமையல் எனக்கு வரும்……………… ஆனா வராது… So… எப்படில்லாம் சமையல் செய்வதுங்கறதுக்கு பதிலா,எப்படில்லாம் சமையலை சொதப்புவது என்று தான் பதிவு போட வேண்டியிருக்கும்… (எப்படியும் அதையும் ஒரு நாள் எழுதுவேனாலும்இப்பவே (இன்னிக்கு) உங்களுக்கு அந்த கஷ்ட்டத்த தரவேணாம்ன்னு ஒரு நல்ல எண்ணம் தான்….)
So… எனக்கு நல்லா தெரிஞ்ச டாபிக்கான சாப்பிடறதப் பத்தி பாப்பம்….

1.   தயிர் சாதம்… 
தயிர் சாதத்துக்கு தயிர் கெட்டியா இருக்கணும்எடுத்தா.. (note the point… எடுத்தாஊத்தினா இல்ல..) ஜஸ் கட்டி மாதிரி வரணும்…(ஸ்வீட் பிரியரா இருந்தா அல்வாத்துண்டு மாதிரி ன்னு நினைச்சுக்கங்க….) அந்த தயிர சுடு சாத்தஃதுல போட்டு உப்பில்லாம சாப்பிட்டா என்ன டேஸ்ட் தெரியுமா….

அதுக்கு பருப்பு உசிலிகொத்தவரை இல்லன்னா வாழைப்பு போட்டு செய்வாங்க….. அது சரியான matchங்க

இல்லன்னா அப்படியே பூந்தூறலாய் தேங்காயை தூவி போட்ட பீட்ரூட்இதுல தயிரும், பீட்ரூடும் கலந்து ஒரு கலர் வருமே…. செம காம்பினேஷன்….

அதுவும் இல்லன்னா நல்லா கரு கருன்னு வருத்த மோர்மிளகாய்….. கொஞ்சம் பிரவுன் கலர்ல வருத்திருந்தாலும் போச்சு…. நாக்கு ஓட்டையாவது நிச்சயம்அப்பறம் குண்டா குண்டாவாயில்ல அண்டா அண்டாவாதான் தண்ணி குடிக்கணும்
 
    Point to note: நீளமான மோர்மிளகாயா தான் இருக்கணும் அப்போதான் டேஸ்ட்டி….

அப்பறம் எல்லா ஊறுகாயும்மாங்காய்தக்காளிபூண்டு.. நார்த்தங்காய்மாவடு..etc.. etc…


2.   ரசம் சாதம்
தக்காளி பிழிஞ்சு, மிளகு , பூண்டு தட்டி போட்ட ரசத்துக்கு
-    First choice அப்பளம் தான்

- அடுத்தது மெல்லிய துண்டா நறுக்கி, இரும்பு சட்டியில செஞ்ச  உருளைக்கிழங்கு வறுவல்….

- இல்லன்னா. கொத்தவரை பருப்பு உசிலிஇது தொட்டு சாப்பிட்டா ஒரு 4 கை சாதம் எக்ஸ்ட்ராவா உள்ளே போகும்டயட்ல இருக்கறவங்க இதையெல்லாம் பாக்காம இருக்கறது நல்லது…(என் ப்ளாக்க சொல்லல உசிலிய சொன்னேன்….)

3.   இட்லி
மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை கலர்ல இருக்கற, பஞ்சு மாதிரியான மென்மையான இட்லிக்கு பொட்டுக்கடலை சட்னியவிட

 - கை நிறைய சிகப்பு மிளகாய அள்ளி போட்டு, நிறைய எண்ணை விட்டு செஞ்ச மிளகாய் சட்னி தொட்டு சாப்ட்டாஸ்அப்படியே ருசி அள்ளிக்கிட்டு போகும்….

- அப்பறம் இருக்கவே இருக்கு தக்காளி, வெங்காய சட்னிகள்….
இதுல அந்த கலர் மேட்ச் தான் ஸ்வாரஸ்யமே…..

4.   எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்ற கிளறின சாதங்கள்
  - வேற optionனே கிடையாதுஅப்பளம், வடகம் தான்….
   - உருளைக்கிழங்கு வறுவலும் கூட ok தான்


அவ்இதையெல்லாம் எழுதினதும் பசி வந்திருச்சு…. போய் சாப்பிட போறேன்…. டாடா…. பை.. பை

Point to Note: இந்த பதிவை படிச்சிட்டு, பின்னூட்டம் போடாமல் போகும் அன்பர்களுக்கு, என்னுடைய சமையல் பார்சல் அனுப்பி வைக்கப்படும் என்பதை அன்புடன் சொல்லிக்கொள்கிறேன்…..

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP