நொடியில் கொஞ்சம் நாட்டுப்பற்று!!!
January 26, 2010
இந்த பதிவை வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி... நன்றி...
"உங்களுக்கு நாட்டுபற்று இருக்கா..? "
"உங்களுக்கு இந்தியாவ பிடிக்குமா..? "
- இந்த கேள்விய இந்தியாவில இருக்கற யார்கிட்ட கேட்டாலும் பிடிக்கும், நாட்டுபற்றுல்லாம் இருக்குன்னு தான் சொல்லுவாங்க..
ஆனா, "இந்தியாவில இருக்கறதுக்கு உங்களுக்கு பிடிக்குமா?" ன்னு கேட்டா... அத்தனை பேருமே இல்லன்னு தான் சொல்லுவாங்க...
ஏன்னு சொல்லவேண்டியதே இல்ல... எவ்வளவோ குளறுபடிகள்... லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடு, ட்ராபிக்கில் ஒழுங்கின்மை ன்னு ஆரம்பிச்சு நம்ம மக்கள் தொகைய விட நீளமா போகும் அந்த லிஸ்ட்... இதையெல்லாம் சரி பண்ண நம்மள்ல்ல யாருக்கும் நேரமே இல்ல...
'நானே நாள் முழுக்க கஷ்டபட்டு வேலை பாக்கறேன்... வாரத்துல ஒரே நாள் தான் லீவ்.. இதுல நாட்டுபற்று, சீர்திருத்தம் இதெல்லாம் நமக்கு சரியாவராது' ன்னு நீங்க நெனச்சீங்கன்னா, அது நூத்துக்கு நூறு உண்மை.. கூட்டம் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தவோ, கோஷம் போடவோ, பிற சீர்திருத்த பணிகளில் ஈடுபடவோ நம்மில், பலருக்கு நேரமில்லை தான்..
ஆனால், பல சமயங்களில், நம் நாட்டுபற்றை வெளிப்படுத்தவும், ஒழுங்கீனங்களை சீர் செய்யவும் சில நொடிகளே போதும் என்பதே உண்மை...
ஒருஉதாரணத்துக்கு ட்ராபிக்கில் ஒழுங்கின்மையை எடுத்துக்குவோம்.. அதுக்கு என்ன செய்யலாம்.. ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்கன்னு பிட் நோட்டீஸ் அடிச்சு தரலாம், மீட்டிங் போட்டு பேசலாம், குறிப்பிட்ட நேரங்களில் ட்ராபிக் போலீஸ் இருக்கணும்ன்னு வலியுறுத்தலாம் இல்லனா கேமரா வெச்சு மானிட்டர் பண்ணலாம்... ஆனா.. இதுஎல்லாமே ரொம்ப டைம் எடுக்கும்.. அதுக்கு பதிலா அவ்வளவாய் டைம் எடுக்காத, ஆனால் பலன் தரக்கூடியதை செய்யலாம்... அதாவது ட்ராபிஃக் சிக்னல்ல பச்சை லைட்டு போட்டதும் வண்டி எடுத்தா போதும்...
ப்பூ.. இவ்வளவுதானா!!! இது ஒரு மேட்டரா... ன்னு நெனைக்காதீங்க.. உண்மையில் அது அவ்வளவு ஈஸி இல்லை.. 5, 4, 3 ன்னு வந்ததுமே எல்லாரும் வண்டி எடுத்துடுவாங்க... அப்போ நாம மட்டும் எடுக்கலேன்னா கன்னாபின்னான்னு ஹார்ன் அடிப்பாங்க.... உடனே நாமளும் அவசரப்பட்டு வண்டிய கெளப்பிடுவோம்.... ஆனா அப்படி செய்யாம 3,2,1ன்னு குறைஞ்சு பச்சை விளக்கு எரிஞ்சதும் தான் வண்டி எடுக்கணும்ன்னு உறுதியா இருங்க...
இத எப்பவுமே ஃபாலோ பண்ணுங்க. அவ்வளவுதான்...
இதற்கு ஆகும் செலவு; ரூ 0 /-
இதற்கு ஆகும் நேரம்; 1 அல்லது 2 நொடிகள்...
அவ்வளவே தான்... இதை நம்மால் செய்ய முடியாதா என்ன?
வெளிநாடு போய்வந்த எல்லோரும், 'அங்கல்லாம் ட்ராபிக் ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்றாங்க ன்னு' பெருமையா சொல்லிப்பாங்க.... எங்கேயோ, யாரோ செய்வதில் நமக்கென்ன பெருமை... ஆனால் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை நாம் செய்யாமல் இருந்தால் நமக்குத்தானே சிறுமை....
ட்ராபிஃக் சிக்னல்லை தவிர்த்து, ஓரிரு நொடிகளில் நாம் செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கு..
சரி.. இதுக்கும் நாட்டுபற்றுக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேட்கலாம்..
இந்த மாதிரி நீங்க செஞ்சு, உங்கள பாத்து நாலு பேரு ஃபாலோ செஞ்சு, அது அப்படியே டெவலப் ஆகி, ட்ராபிக் போலீஸ் இல்லாமயே, ட்ராபிக் ரூல்ஸ்ச நாம ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ற நிலை வந்தா நல்லது தானே...
சிறுதுளிகள் சேர்ந்து தானே பெரு வெள்ளமாகும், அப்படியான ஒரு பெருவெள்ளத்திற்கு உங்கள் சிறு துளியும் தான் காரணமாய் இருக்கட்டுமே!!!!!
18 கருத்துகள்:
//வெளிநாடு போய்வந்த எல்லோரும், 'அங்கல்லாம் ட்ராபிக் ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்றாங்க ன்னு' பெருமையா சொல்லிப்பாங்க.... //
அவங்க இங்க வந்ததும் அதிகமாக விதிமுறைகளை மீறுகிறார்கள் ஏன்?
அவர்களுக்கு தாய் நாட்டைக் கண்டால் எகத்தாளம்....
ஆமாங்க நீங்க சொன்னது உண்மைதான். நான் 0 வந்த உடனே தான் வண்டிய நவுத்துவேன். சில நேரம் திட்டுவாங்க.
இடுகையும் கருத்தும் ஆதங்கமும் அருமை.
குடியரசு தின வாழ்த்துக்கள் ஸ்வர்ணரேகா :-).
வாழ்க பாரதம்.
வாங்க சங்கவி
//தாய் நாட்டைக் கண்டால் எகத்தாளம்....//
உண்மை தான். அதற்கு காரணம் நாமே தான் என்பதையும் மறந்துவிடுகிறார்கள்.
உங்கள் சாலையோரம் தொடர் பதிவில் எழுதியிருந்தது போல்
//எல்லாம் எல்லாருக்கும் தெரிந்தும், காவலர்களை பார்க்கும் போது மட்டும் பயன்படுத்துவது// தான் தவறாகிறது..
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...
வாங்க பின்னோக்கி,
அய்யோ.. கன்னாபின்னான்னு திட்டுவாங்க.. அதிலும் லாரி/பஸ்க்கு முன்னால நிக்கறப்போ.. சான்ஸே இல்லைங்க..
நன்றி சிங்கக்குட்டி...
நல்ல கருத்து நிறையபேருக்கு விழிப்புணர்வுயில்ல தான் மட்டும் சீக்கிரம் செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள்
குடியரசு தின மற்றும் விகடனில் பிரசுரமனதற்கும் வாழ்த்துக்கள்
பயமில்லைன்னா ஒரு பற்றும் இருக்காது.
------------
யூத்துக்கு வாழ்த்துகள்.
மற்றொரு நல்ல பதிவு சுவர்ணரேக்கா.
//பச்சை விளக்கு எரிஞ்சதும் தான் வண்டி எடுக்கணும்ன்னு உறுதியா இருங்க...
இத எப்பவுமே ஃபாலோ பண்ணுங்க. அவ்வளவுதான்...
இதற்கு ஆகும் செலவு; ரூ 0 /-
இதற்கு ஆகும் நேரம்; 1 அல்லது 2 நொடிகள்...
அவ்வளவே தான்... இதை நம்மால் செய்ய முடியாதா என்ன?//
நல்ல பொறுப்பான கேள்வி... ஆனால், நாம் வெயிட் பண்ணினாலும் பின்னால் இருப்பவர்களின் தொல்லை தாங்க முடியாதே... ஹாரன் சத்தம் காதை கிழிக்குமே...
என்னவோ, சொல்ல வேண்டியதை சொல்லி விடுவோம்...அனைவரும் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில்...
வாங்க நீச்சல்காரன்,
//விழிப்புணர்வுயில்ல தான் மட்டும் சீக்கிரம் செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள்//
உண்மை தான்.
வாழ்த்துக்களுக்கு நன்றி...
வாங்க ஜமால்,
ரொம்ப நாளா காணமேன்னு நெனச்சேன்.
//யூத்துக்கு வாழ்த்துகள்.//
நன்றி..நன்றி..
வாங்க கோபி,
//மற்றொரு நல்ல பதிவு சுவர்ணரேக்கா.//
--- உற்சாக டானிக் இந்த வார்த்தை..
நன்றி... நன்றி,
//பின்னால் இருப்பவர்களின் தொல்லை தாங்க முடியாதே. ஹாரன் சத்தம் காதை கிழிக்குமே...//
ஆமாங்க... அந்த ஒன்றிரண்டு நொடிகளில் தான் உலகத்தையே வென்றுவிடுவது போல் செய்வாங்க...
good post... :)
இவ்ளோ பொறுப்பான ஆளா நீங்க? வாழ்த்துக்கள்...
நல்ல பகிர்வு ஸ்வர்ணரேகா
நல்ல சமூக சிந்தனை, வாழ்த்துக்கள்
வாங்க தக்குடுபாண்டி,
//நல்ல சமூக சிந்தனை, வாழ்த்துக்கள்//
நன்றி.. அடிக்கடி வாங்க
Nodiel oru nattu pattru... Seruthu thulli peru vellam.. nama 2 peru sencha.. naliku 20 persu seivan..apuram 20000 peru..apadi ella makalum..sivanga...velinattula..apdi panrenga..na.. epadithan..palakavakula...kondu vanthu irupanga.....
அழகில்லை என்று யாராவது அன்னையை வெறுப்பார்களா?
Post a Comment