திருக்கடையூர் – திருக்கோவில் பயணம்
December 16, 2010
திருக்கடையூர். பெயர் கேட்டதும், திருக்கடையூர் அபிராமி என்று பெரும்பாலும் சொல்லிவிடுவோம். முன்ன பின்ன நாம அந்த கோவிலுக்கு போகலின்னாலும், மார்கழி மாத பஜனை பாடல்களில் நமக்கு நல்ல பரிச்சயமான கோவில் தான்.
கோவிலின் அம்மை - திருக்கடையூர் அபிராமி
கோவிலின் ஈசன் – அமிர்த்தகடேஸ்வரர்
மயிலாடுதுறையில் இருந்து டவுன் பஸ் போகிறது. ஆனால் 1 மணி நேரம் ஆகின்றது… (டவுன் பஸ்.. அதுவும் அரசு பஸ்.. வேகத்துக்கு கேக்கவா வேணும்!!!!) கும்பகோணம் தான் போக்குவரத்து கழகத்தின் zonal ஆஃபிஸ். அதனால் தானோ என்னவோ, கும்பகோணம், மயிலாடுதுறையில் பஸ்கள் அனைத்தும் பரிதாபகரமான நிலையில் இருக்கின்றன… காயலான் கடைக்கு எடுத்து போனால் உடைத்துப்போட நம்மிடமே காசு கேட்பார்கள் என்ற சொற்றொடர் இந்த பஸ்களை பார்த்து தான் வந்திருக்கும் போல!!!!
கோவிலின் முகப்பு |
இந்த கோவிலில் 60ம் திருமணங்கள் தான் மிகவும் விசேஷம்… கல்யாணங்களை போன்றே அவைகளும் மிக விசேஷமாய், ஆடம்பரமாய் நடத்தப்படுகின்றன… கோவிலெங்கும் , திருமண கோலமாய் இருக்கின்றது. சொந்தபந்தம் அனைத்தையும் அழைத்து, எல்லா சம்பிரதாயங்களை (ரூ4000, ரூ 8000) செய்பவர்களும் இருக்கின்றார்கள், அர்ச்சனை மட்டும் (ரூ 96, அர்ச்சகருக்கு 200) செய்து கொண்டு தாலி கட்டிக் கொள்பவர்களும் இருக்கின்றார்கள்.
வாக்கிங் போகும் யானை
நாமெல்லாம் வாக்கிங் போனால் காலையில் இல்லேன்னா மாலையில் போவோம், ஆனால் இந்த கோவில் யானை நாள் முழுவதும் வாக்கிங் போகின்றது… அதாவது கல்யாணத்துக்கு சீர் வரிசை எடுத்து வருபவர்களை கோவிலின் நுழைவாயிலில் இருந்து கொடிமரம் வரை அழைத்து வருகின்றது… (ஆசை தோசை… அப்பள வடை… சும்மா வருமா… அதுக்கு தனியா டப்பு தரணும்…). ஒரு செட்டு வந்ததும் இன்னோரு செட்டு ரெடியா இருக்கு… பாவம் யானைக்கு தான் அந்த கோவில்ல ஓய்வேயில்ல…
யானையுடன் சீர் வரிசை கொண்டுவருவோர் |
அங்க அர்ச்சகர்கள் எல்லாம் பயங்கர பிசி (கவுண்டமணி மாதிரி இல்ல.. நிஜமாவே பிசி தான்…) ஆளாளுக்கு கையில செல்போஃன் வெச்சு நல்லா கல்லா கட்டறாங்க… ஒரே சன்னிதியில் அத்தனை அர்ச்சகர்களும் எப்படித்தான் அர்ச்சனை செய்யறாங்களோ!!!! (அடடே ஆச்சர்யக்குறி!!!)… ஒரே ஆச்சர்யம் தான்…
அம்மன் சன்னிதியில் வாயில் காக்கும் மகளிரணி |
கோவில் நல்லா பெரிசாவே இருக்கு… கோவில்ல என்னைக் கவர்ந்த இன்னோரு விஷயம், அங்கயிருந்த ரெண்டு பெரிய குத்துவிளக்குகள்… ஆளுயரத்துக்கு இல்லை இல்லை…. ஓர் ஆளை விடவும் உயரமாக இருந்தன அவை… (பக்கத்தில் இருக்கும் சின்ன அகல்விளக்கை பார்த்தால், அந்த விளக்குகளின் பிரம்மாண்டம் புரியும்… )
பிரம்மாண்டமான குத்துவிளக்குகள் |
10 கருத்துகள்:
அழகான பயணம்...
சுவாரசியமான பயணம்.. அந்தூருக்காரன் நான்.. இன்னும் அந்த குத்துவிளக்க பாத்ததில்ல... ப்ச்ச்ச். நெக்ஸ்ட் பாக்கணும்..
இன்னொரு யானைக்கு ஷிஃப்ட் முறையில் வேலை கொடுக்கலாமோ! :) திருக்கடையூர் போகணும்னு ஆவலைத் தூண்டியிருக்கீங்க
வாங்க சங்கவி,
நன்றிங்க...
வாங்க பாலாசி,
அட டே!!! செம்பனார் கோவில் கார்ரா நீங்க.. நல்லா பசுமையா இருந்துச்சுங்க உங்க ஊரெல்லாம். பாக்கவே அருமையா இருந்துச்சுங்க...
வாங்க மாதவி,
இன்னொரு யானையக் கூட அப்பாயிண்ட் பண்ணலாங்க.. இது நல்ல யோசனை தான்...
//திருக்கடையூர் போகணும்னு ஆவலைத் தூண்டியிருக்கீங்க//
-- நன்றிங்க...
நைஸ் போஸ்ட்.. எனது தாத்தாவின் சதாபிஷேகத்திற்காக நான் ஒருமுறை போயிருக்கிறேன்...
தங்களின் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா... தங்களுக்கான வலைமனை போட்டோ கமென்ட்ஸ் வெற்றிக்கு பிளாக் பேனர் அனுப்ப வேண்டும்.. தயாராகி விட்டது.
evergreenrose@gmail.com
வாங்க சுகுமார்,
நன்றிங்க...
உங்களுக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பிருக்கேங்க...
நண்பரின் 60 க்கு போனேன். டோட்டல் காண்ட்ராக்ட்டும் இருக்கிறது. கோவிலா, கல்யாண மண்டபமா என்று புரியாத அளவு ஒரு குழப்பம். நீங்க சொன்ன யானைக்கு ஓய்வில்லை வாஸ்தவம்தான்.. மனுஷனாப் பொறந்தா அந்த யானை 60 பண்ணிக்காது!
அன்பின் ஸ்வர்ணரேக்கா
நல்லதொரு இடுகை - கோவிலைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment