Apocalypto – நேர்த்தியான வன்முறை
March 8, 2011
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no peace of mindன்னு, சிவாஜி பாடறமாதிரி,100 இருந்தும் channelகள் இருந்தும், சிலசமயம் ஒரு சேனல்லையும் பாக்கறதுக்கு ஒன்னியும் உருப்படியாக இருக்காது.
எல்லா சேனலையும் ஒரு ஓட்டு ஓட்டிட்டு, கடைசில பாத்து பாத்து புளிச்சுப்போன ஒரு பாட்டையே, திரும்ப பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படும். இந்த மாதிரி இருக்கப்போ ஒரு நாள், Apocalyptoங்கற படத்தை பாத்தேன். ஒரு சீன் பாத்ததுமே டர் ஆகி அடுத்த சேனலுக்கு ஓடிப்போயிட்டேன்….(படத்துல எல்லாரும் ஆதிவாசி கெட்டப்புல இல்ல இருந்தாங்க)
ஆனா அடுத்த ரவுண்டுல, அந்த சேனலை விட்டு நம்ம ரிமோட்டு நகரமாட்டேன்னு சொல்லிடுச்சு..(அத ரொம்ப தொந்திரவு செஞ்சிட்டேன் போல..) சரி நம்ம ரிமோட்டாண்டவர் சொன்னாரேன்னு அந்த படத்த பாக்க ஆரம்பிச்சேன்… அருமை, அருமை அருமையோ அருமைங்க… ஆனா வன்முறையோ, வன்முறைங்க.
கதை
மாயர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு நாடோடிக்கூட்டம் இன்னோரு நாடோடிக்கூட்டத்தினால் எப்படி அழிக்கப்படுகிறது என்பதே கதை…
இந்த ஒரு வரி கதையை எவ்வளவு நேர்த்தியா சொல்லமுடியுமோ, அவ்வளவு நேர்த்தியா சொல்லியிருக்காங்க.
திரைக்கதை
ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், தாங்கள் இருக்கும் நிலப்பகுதியை ஆண்டுகொண்டும் இருக்கிறார்கள் ஒரு நாடோடிக்கூட்டத்தினர். அப்போது அவ்வழியே போவதற்கு இன்னோரு கூட்டம் அனுமதி கேட்கிறது.. அனுமதி வழங்கிவிட்டு, ஹீரோவின் தந்தை ஹீரோவிடம் சொல்கிறார், இப்போது இங்கே பார்த்ததை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று. ஏனெனில், அவர்கள் கண்களில் பயம் தெரிகிறது, அது ஒரு வியாதி, எல்லோருக்கும் தொற்றிக்கொள்ளும் என்று சொல்கிறார்.
அடுத்த நாள் காலையிலேயே. இவர்கள் வீடுகளுக்கு தீவைத்து, ஆட்களை கொலை செய்கிறது ஒரு கூட்டம். இந்த களேபரத்தில் ஹீரோ, தனது கர்ப்பிணி மனைவியையும், குழந்தையையும் ஒரு ஆழமான குழிக்குள் விட்டு விடுகிறார். சண்டைக்கு பின் மீதமிருப்பவர்களை கைதிகளாக பிடித்துக்கொண்டும் போகிறது அந்த கூட்டம். கைதிகள் எப்படி கொண்டு செல்லப்படுகிறார்கள் தெரியுமா? கைதிகளின் கைகளையும், கழுத்தையும் மூங்கில்களோடு சேர்த்து கட்டிவிடுகிறார்கள்.
ஒரு நீண்ட மூங்கிலில் 4,5 கைதிகள். அப்படியே நடைபயணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான். ஒருத்தர் தவறிவிழுந்தாலும், அடுத்தவரும் சேர்ந்து விழவேண்டியதுதான். இப்படி நடக்கறதே கஷ்ட்டம் அதுல ஒரு காட்டாற்றை வேறு கடக்கின்றார்கள். அப்பவே நமக்கு தெரிஞ்சிடுது இன்னும் எவ்வளவோ இருக்குன்னு…
பெண்களை ஏலம்விட்டபின், ஆண்களை புளு கலர் சாயம் பூசி, பலிகொடுக்க அழைத்துச்செல்கிறார்கள். ஹீரோவின் முறை வரும்போது, கிரகணம் ஏற்பட தப்பிக்கிறார் (தற்காலிகமாகத்தான்).
இவர் தான் ஹீரோ |
அப்பறம் அப்படி இப்பிடின்னு தப்பிச்சு வந்து தன் குடும்பத்தை மீட்பது தான் கதை. (எல்லாத்தையும் சொல்லிட்டா படம் பாக்கறப்போ நல்லா இருக்காதுங்க)
டச்சிங் சீன்ஸ்
கைதிகளான பின், எல்லோரும் என்னாகுமோ ஏதாகுமோ என்று கவலைப்படும் போது, ஹீரோ மழை பெய்யக்கூடாது என்று வேண்டிக்கொள்வது.
குழிக்குள் இருந்தாலும் மனதைரியத்தை காட்டும், ஹீரோயினும் அவள் குழந்தையும்.
வன்முறை சீன்ஸ்
கைதிகளின் வெட்டியெடுக்கப்பட்ட இருதயத்தை சட்டியில் சுடுவது. அதைவிடக் கொடுமை அந்த சாம்பலை பெண்கள் குழந்தைகளுக்கு பூசுவது.. அடிங்க....
மீதி கைதிகளை இந்த இடத்தை தாண்டி உங்க ஊர் இருக்குன்னு சொல்லி ஓடவிட்டு சாகடிக்கறது.
--- இவ்வளவு வன்முறை இருந்தாலும் விடாமல் படத்தை பார்க்க செய்யும் திரைக்கதை. Making of a film ன்னு ஒண்ணு பாக்கனும்ன்னா அது கண்டிப்பா இந்த படத்தோட making தான்.
படத்தோடு கண்ணாபின்னான்னு ஒன்றிவிடுகிறோமா நடிகர்களை வேறு costumeல் நம்மால் நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.
இவர் வில்லன் |
இவர் தான் வில்லனாம் |
ஒரே ஒரு எரிச்சல். பில்லா படத்துல அஜித் நடையோ நடைன்னு நடப்பாரே, அந்த மாதிரி இந்த ஹீரோ ஓடறார், ஓடறார், காட்டின் எல்லைக்கே ஓடுகிறார். இந்த படத்துல பாதி சம்பளம் உங்க டிரஸ்காக (ஹா.. ஹா..), மீதி சம்பளம் நீங்க ஓடறதுக்குன்னு டைரடக்டர் முன்னாடியே சொல்லிருப்பாரு போல…
வன்முறை காட்சிகளெல்லாம் எனக்கு மேட்டரே இல்லன்னு சொல்றவங்க, இந்த படத்தை மிஸ் பண்ணவேண்டாம்…
Apocalypto - ஆயிரம் இருந்தும் வன்முறை இருந்தும் ஒரு அருமையான படம்.
17 கருத்துகள்:
அஞ்சாறு முறை பாத்திருக்கேன்.. அவ்வளவு பிடிச்சது.. மேக்கிங்.. வன்முறைக்காக அல்ல... குழியில இருக்கிறப்ப அந்தக் குழந்தை செம க்யூட்டா நடிச்சிருக்கும்.
வாங்க பாலாசி...
ஆமாம். காயத்தில் வைக்க தானே எறும்பை எடுத்து அம்மாவிடம் தரும்போது கைதட்ட தோணும்...
ஒருமுறை பாதி பார்த்தேன்,. மிச்சம் பார்க்கணும்
நீங்கள் சொன்ன விதம் பார்க்க வேண்டும் எனத் தோன்ற வைக்கிறது!!
வாங்க எல்.கே.
கண்டிப்பா பாருங்க. விட்றாதீங்க...
வாங்க மாதவி...
நன்றிங்க...
மெல் கிப்சனின் இயக்கத்தில் மற்றொரு மைல் கல் இப்படம்...ஒருமுறை தான் பார்த்திருக்கிறேன். இருப்பினும் உங்கள் இடுகையை படிக்கும் போது அடுத்த காட்சிகள் கண்களில் விரிகின்றன...
//ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no peace of mindன்னு, சிவாஜி பாடறமாதிரி//
ஹா ஹா...கலக்கல் கம்பேரிசன்...:)))
//சரி நம்ம ரிமோட்டாண்டவர் சொன்னாரேன்னு //
மொத வாட்டி கேக்கறேன் ரிமோட்டாண்டவர்...ஹா ஹா...:))
//Apocalypto - ஆயிரம் இருந்தும் வன்முறை இருந்தும் ஒரு அருமையான படம்//
ஆயிரம் இருந்தும் நீங்க போட்ட விமர்சனம் சூப்பர்..:))
//ஒரே ஒரு எரிச்சல். பில்லா படத்துல அஜித் நடையோ நடைன்னு நடப்பாரே, அந்த மாதிரி இந்த ஹீரோ ஓடறார், ஓடறார், காட்டின் எல்லைக்கே ஓடுகிறார்.//பயங்கர காமெடி..
நல்ல பகிர்வு..கண்டிப்பாக பார்க்க வேண்டுமே...
வாங்க பாரதி,
மகளிர் தின வாழ்த்துக்கு நன்றிங்க... அடிக்கடி வாங்க..
வாங்க டக்கால்ட்டி
//மெல் கிப்சனின் இயக்கத்தில் மற்றொரு மைல் கல் இப்படம்//
--- உண்மை தான்... கிப்சனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..
முதல் முறை வந்திருக்கீங்க.. அடிக்கடி வாங்க..
வாங்க புவனா..
//நீங்க போட்ட விமர்சனம் சூப்பர்.//
-- நன்றீஸ்...
வாங்க கீதா...
//நல்ல பகிர்வு..கண்டிப்பாக பார்க்க வேண்டுமே.//
-- நன்றி.. சேனல் சர்ஃபிங்ல வந்தா மிஸ் பண்ணிடாதீங்க..
கலக்கல்
இந்த படம் பார்த்து ஒரு நாலு வருமிருக்கும் ,நைட் ஷோ பார்த்துட்டு வீட்டுக்கு போறப்ப கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு ,எவ்வனாச்சு
ஆதிவாசிக தீடீர்னு முன்னாடி வந்து நிப்பாய்ங்கலோனு
வாங்க மணிவண்ணன்..
சரியான டெரர் படம் தான்... கண்ணை மூடினாவே திக்குன்னு தான் இருக்கும்..
இந்த படத்தை நைட் ஷோ பாத்தீங்களா..? ரொம்ப தைரியசாலி தான் நீங்க...
ஆயிரம் இருந்தும் வன்முறை இருந்தும் ஒரு அருமையான படம்.//?????????
வன்முறை இருந்தா பார்க்கப் பிடிக்கல இப்பல்லாம். ஆனா மேகிங் நல்லா இருக்குன்னு சொல்லி .. ம்ம். பார்க்க வேண்டியதுதான்..
வாங்க ராஜேஸ்வரி...
???!!!!???!!!
வாங்க ரிஷபன்..
கதைக்கு தேவையான வன்முறைங்கறதால படத்துடன் ஒன்றிவிட முடியும், நம்மால்.. கண்டிப்பா பாருங்க..
வாங்க ராஜேஸ்வரி...
???!!!!???!!!
வாங்க ரிஷபன்..
கதைக்கு தேவையான வன்முறைங்கறதால படத்துடன் ஒன்றிவிட முடியும், நம்மால்.. கண்டிப்பா பாருங்க..
வன்முறையில் நேர்த்தியா..
அப்ப பார்த்தே ஆகணும் போல..
Post a Comment