காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

பாராட்டு... (சர்வேசன் 500 - "நச்"னு ஒரு கதை - 2009 -போட்டிக்கு)

November 10, 2009

'ஸ்ரீமதி...'
'ஸ்ரீ..மதி...'
'ஏய்... ஸ்ரீமதி...'
'ப்ச்.. என்னம்மா...?'
'இங்கதான் இருக்கியா... நைட்டுக்கு என்ன செய்யட்டும்.. இட்லியா, சப்பாத்தியா..?'
'எதுனா செய்யி... '

என்ன ஆச்சு இவளுக்கு... நைட்டுக்கு என்ன செய்யட்டும். ன்னு கேட்டா... நாம கேட்கற ரெண்டும் இல்லாம வேற எதுனா சொல்லுவா.... இப்ப என்னடான்னா... எதுனா செய்யின்னு சொல்றாளே...

ஸ்ரீமதி - கவிதா, ராகவனின் செல்ல மகள்.. அப்பாவிடம் ஒட்டுதல் ஜாஸ்தி.. ராகவனுக்கும் தன் செல்ல மகளிடம் பிடிப்பு அதிகம்.. அவ அவங்கப்பா செல்லம் என்று சந்தோஷமாக சலித்துக்கொள்பவள் கவிதா.. அப்பா திட்டினாலோ, ஏதும் சொல்லிவிட்டாலோ ஸ்ரீமதி முகத்தை தூக்கிவைத்துக்கொள்வாள்.. அம்மா சொன்னாலோ... 'போம்மா.. நீ... வேற வேலையில்லை உனக்கு' என்று சொல்லிவிட்டு ஓடுவாள்...

'என்னடா ஆச்சு.. ஃப்ரண்ட்ஸ் கூட சண்டையா... ஏன் உம்முன்னு இருக்க...'

'ஒண்ணுமில்ல மா...'

சரி.. கேட்டா எப்படியும் சொல்லமாட்டா.. கொஞ்ச நேரம் கழிச்சு அவளே சொல்லுவா.. என்று எண்ணியபடி சமையலில் மூழ்கினாள் கவிதா..

'ஸ்ரீ.. வா.. சூடா வந்து சாப்பிடு.. வா.. வா' - கவிதா அழைக்க.. வழக்கம்போல் கிச்சன் திட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, சாப்பிட ஆரம்பித்தவள்.. ரெண்டு வாய் வைத்ததும் பட பட வென்று சொல்ல ஆரம்பித்தாள்..

'பாரும்மா இந்த அப்பாவ.. நீ நேத்து காலைல அத்தை வீட்டுக்கு போய்ட்டீல்ல.. நானும்... ஞாயித்துக்கிழமை நமக்கு லீவாச்சே... நாமளே செய்வோம்ன்னு ..
மதியம், ஃபரைடு ரைஸ், சாலட்.., நைட்டுக்கு - ரவா தோசை, அதுக்கு தொட்டுக்க தக்காளி சட்னி, தேங்காய் சட்னி ன்னு பாத்து பாத்து செஞ்சம்மா.. ஆனா இந்த அப்பா... எல்லாத்தையும் சாப்பிட்டு நல்லாவே இல்லைன்னு என்ன திட்டறாரும்மா..' என்று குற்றபத்திரிக்கை வாசித்தாள்

அவராவது.. இவளை திட்டறதாவது, என்று நினைத்துக்கொண்டவளாய் ...

'கஷ்டப்பட்டு செஞ்ச பிள்ளைய பாராட்டாம திட்டறாரா.. உங்க அப்பா.. வரட்டும் பாத்துக்கலாம்.. நீ போய் படிடா..' என்று ஆறுதல் படுத்தினாள்..

சற்று நேரம் கழித்து வந்த ராகவனிடம் கவிதா... 'ஏங்க இன்னிக்கு இவ்ளோ லேட்டு...சரி சரி.. கை கழுவிட்டு வாங்க.. சாப்பிடலாம்' என்று அழைத்தாள்..

'ஆமா.. இன்னிக்கு என்ன மெனு... உப்பு ஒரப்பு இல்லாம ஒரு குழம்பு, தீஞ்சுபோன தோசைன்னு எதுனா செஞ்சிருப்பியே... நீயெல்லாம் என்ன சமைக்கற.. நேத்து எம் பொண்ணு செஞ்சா பாரு சட்னியும், தோசையும்... ம்... அதுவல்லவோ சுவை... அதுவல்லவோ கை மணம்..'

'ம்.. இதென்ன புதுக்கதையா இருக்கு... அவ செஞ்சது நல்லாயில்லன்னு நீங்க திட்டினதா இல்ல சொல்லிக்கிட்டு இருந்தா... '

'ஸ்ரீ. இங்க வந்து உங்க அப்பாவ என்னன்னு கேளு' என்று உள்ளறையில் இருந்த ஸ்ரீமதியைக் கூப்பிட..

'டேய்.. நான் எங்கடா உன்ன திட்டினேன்... '

'பின்ன.. நான் செஞ்சதையெல்லாம் .. அம்மா செய்யற மாதிரியே இருக்குன்னு சொன்னியேப்பா... உனக்குத்தான் அம்மா செய்யறதே பிடிக்காதே...

Read more...

தமிழகத்தில் இது மழைக்காலம்...

November 8, 2009

தமிழகத்தில் பரவலாக மழை பொழிய ஆரம்பித்துவிட்டது....

அதுவும் சோ வென பெருமழையாய் பெய்யாமல், நசநசவென சிறு மழையாய் பொழிகிறது...

காலையில் எழுந்ததும் பொழியும் மழை, அலுவலகத்தில் இருக்கும்போது பொழியும் மழை, இதெல்லாம் நல்லாதான் இருக்குது.. ஆனா ஆபீஸ் போறப்போ பொழிய
ரமழைதான் நலலாயில்லை... சரி.. ஆசைப்படலாம், பேராசை படக்கூடாது....


மழையில நனைஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் குடிக்கற டீயோட ருசி... அதுக்கு ஈடு இணையில்லை... டீ இல்லன்னா... சூடா இட்லியோ, தோசையோ.... தொட்டுக்கொள்ள சட்னியோ, பொடியொ இல்லாம... பூண்ட கொஞ்சம் போல நசுக்கி, நிறைய மிளகாய்த்தூள், கொஞ்சூண்டு உப்பு போட்டு, எண்ணைய் விட்டு சாப்ட்டா.... சூப்பராக இருக்கும்....

மழைக்காலத்திற்கான ஒரே ஒரு யோசனை..

டூவீலரோ, காரோ... வண்டியில் போகும்போது speed ஆ போகாதீங்க... தவிர்க்க முடியாத சமயம் தவிர அவசரமா ஆபிஸ்க்கு போயே ஆகணும்னு இல்லை... மழையைக் காரணம் காட்டி தாராளமா permission போட்டுக்கலாம்... இந்தியாவில் இது சாத்தியமே...

Read more...

காக்கைக்கும்.....

October 24, 2009

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு - ரொம்ப சாதாரணமா, நாம அடிக்கடி சொல்ற இல்ல கேக்கற ஒரு வார்த்தை தான்...

மேம்போக்கா பார்த்தா... 'எப்படி இருந்தாலும் தாய்க்கு தன் குழந்தை உசத்தி தான்' ங்கற அர்த்தம் வந்தாலும், 'அவங்க அவங்க பொருள் (குழந்தையோ, பொம்மையோ, வேறு எதுவோ...)அவங்க அவங்களுக்கு உசத்தி தான் ' ங்கறதும் அர்த்தம்....

இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்... ஆனா...
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு - ன்னு சொல்லாம, காக்கை க்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ன்னு ஏன் சொல்றாங்க - ன்னு போன வாரம் தான் எனக்கு தெரிஞ்சுது...

இதுக்கு நான் ரூம்லாம்போட்டு யோசிக்கலங்க... எங்க வீட்டு மரத்த சும்மா அண்ணாந்து பாத்துட்டு இருந்தேன்.. அதில ஒரு காக்கா கூடு இருந்துச்சு.. என்னமோ தெரியுதேன்னு கொஞ்சம் எட்டி பாத்தப்ப தான்...இந்த அரிய சிந்தனை எனக்கு வந்துச்சு....

சாதாரணமா நாய்க்குட்டி, ஆட்டுக்குட்டி, மாட்டுக்குட்டி... சாரி .. கன்னுக்குட்டி, புலிக்குட்டி, கரடிக்குட்டி, ன்னு விலங்குகளின் குட்டிகளை பார்த்தாலே தூக்கிவெச்சு கொஞ்ச தோணும், குறைஞ்சபட்சமாய் தடவியாவது கொடுக்க தோணும்... ஆனா... இந்த காக்கா குஞ்ச பார்த்தா... அய்ய.. ச்சீ..ச்சீ.. உவ்வே... என்றேல்லாம் சொல்லி முகத்தை திருப்பிக்கொள்வோம்.....

நிஜமா சொல்றேன்ங்க... அவ்வளவு மோசம்... ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... காக்காய் கொள்ளை அழகுங்க....

உவமான உவமேயத்தையும் நம்ம முன்னோர்கள் நல்லாதான் சொல்லியிருக்காங்க....ன்னு அப்பத்தான் எனக்கு தோணுச்சு.... அத அப்படியே உங்ககிட்ட பகிர்ந்துக்கலாமேன்னு....

Read more...

வடை போச்சே!!!!

October 16, 2009

கொஞ்சம் (ஒரு மூட்டை) பட்டாசு, கொஞ்சூண்டு (ஒரு கூடை) பலகாரம், எண்ணை குளியல், ஒரு 5 - 6 புது டிரெஸ்ன்னு தீபாவளி சாதாரணமாதான் போகும்.... ஆனா தீபாவளிக்கு முந்தைய பிரப்பரேசன்கள் எல்லாம் பார்த்தா .. அப்பப்பா...

துணிக்கடை, நகைக்கடை, ப்ளாட்பாரக்கடைகள், ட்டெய்லர் கடைன்னு ஆரம்பிச்சு காய்கறி கடை, ஸ்வீட் கடை, மிக்ஸி ரிப்பேர் கடை, இன்னும் உலகில் எத்தனை வகை கடைகள் உண்டோ, அத்தனையிலும் கூட்டம், கூட்டம், கூட்டமோ கூட்டம்... ரயில், பஸ்ல எல்லாம் அந்த வாகனங்கள் கொள்ளாத கூட்டம்....

என்னவோ ஒரு பெரிய economic turn over போன்று, மக்கள் கூட்டம் கூட்டமாய் பொருட்களை வாங்குவதும், பார்ப்பதும்.... அடடே... தீபாவளிக்கு அடுத்து வரும் நாட்களில் அந்த கடைகளும், தெருக்களும் வெறிச்சோடி (அவ்வளவாய் கூட்டம் இல்லாமல்) இருப்பதும்....

இதுவல்லவோ பண்டிகை.....

இதையெல்லாம் விட பெரிய சந்தோசம் லீவ் தான்...
தீபாவளி அன்னிக்கு ஒரு நாள் லீவ்.. அதுக்கு முன்னாடி ஒரு நாள் லீவ்ன்னு... அப்படி இப்படின்னு ஒரு வாரம் 'இந்த வாரம் தீபாவளி வாரம்' ன்னு ஜாலியா இருக்கும்... ஆனா இந்த வருஷம் சனிக்கிழமையில வந்ததுல ' தீபாவளி வாரம் ' போய் 'வீக்எண்ட் தீபாவளி' ஆனதுல வடை போச்சே!!!! பாணியில் லீவ் போச்சே!!!! என்று எண்ணவே தோன்றுகிறது.....

சரி.... வீக்எண்ட் தீபாவளியோ, தீபாவளி வாரமோ.... வாசகர்களுக்கும், அனைத்து பதிவர்களுக்கும்....



தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

Read more...

ஒண்ணுமே புரியலயே....!!!

September 5, 2009

என்னதான் தமிழ் தாய் மொழியா இருந்தாலும், தமிழ்ல பேசவும் எழுதவும் தெரிந்திருந்தாலும்... தினமும் நியூஸ் கேட்கும் போதும், பேப்பர் படிக்கும் போதும் நிறைய வார்த்தைகள் எனக்கு புரியவேமாட்டேங்குதுங்க... சில சமயம் வாக்கியங்களே கூட புரிய மாட்டேங்குது... சில சாம்ப்ள் குடுத்திருக்கேன்... பாருங்க...

  • நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது... (உத்து உத்து பார்த்தாலும், உன்னிப்பாக பார்த்தாலும் அதனால் விளையும் பயன் என்னவென்று யானறியேன் பராபரமே!! )

  • ABC விஷயத்தை செயல்படுத்த வேண்டுமென்று XYZ மாநாட்டில் வலியுறுத்தபட்டது

  • ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை, விலைவாசி ஏற்றத்தை கண்டித்து எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தின..

  • YYY கட்சி தலைவர் ஆனா ஊனா விஷயத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்...

  • இதுகாறும் அவர் மக்களுக்கு சேவை செய்த்தை பாராட்டி Mr. XXX / Ms. ZZZ க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது..

  • வறுமையை ஒழிப்பதற்கு, கட்சியில் / சபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது..

  • சபாநாயகராக / பிரதமராக / ஜனாதிபதியாக / ஊராட்சி தலைவராக, கட்சி தலைவராக இவர் பதவியேற்றதால் பெண் குலமே / குறிப்பிட்ட சமுதாயமே பெருமை படுகிறது..
இந்த லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு... இதுல உங்க யாருக்காவது ஏதாவதோ, இல்ல முழுசாவோ புரிஞ்சா... தயவு செஞ்சு சொல்லுங்க சாமி...

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP