காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

என்னைப் பற்றி.... (தொடர் பதிவு)

September 15, 2010

இந்த தொடரை என்னை எழுத அழைத்த அமுதாவிற்கு நன்றி.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஸ்வர்ணரேக்கா ....

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என் பெயர் சத்யா... பதிவுகளை எழுத ஆரம்பிக்கையில் ஏதேனும் புனைப்பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது ஒரிசாவில் ஓர் நதி இருக்கிறது என்றும்... அது தங்க ரேகைகளைப் போல் ஜொலிப்பதால் அதற்க்கு ஸ்வர்ணரேகை என்று பெயர் என்றும் படித்தேன்.... உவமை பிடித்திருந்த்தால் அதையே பதிவுலகில் என் பெயராக்கிக் கொண்டேன்....


.3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....?

முதலில் 2, 3 பதிவுகள் ஆங்கிலத்தில் தான் போட்டேன்... பின்னர் igoogleல் தமிழ் கீபோர்ட் கிடைத்து தமிழில் எழுதினேன்.... அது மிகவும் சிரம்மாக இருந்ததால், வேறு என்ன செய்யலாம் என்று கூகுளாண்டவரிடம் கேட்டபோது தான் தமிழ்மணம், NHM Writer போன்றவற்றை அவர் அறிமுகம் செய்தார்....

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா.... என்னுடைய பதிவா...? என்ன கொடுமை சரவணா இது..?

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அவ்வப்போது பகிர்ந்தது உண்டு... பெரும் விளைவுகள் ஏதும் இல்லை...

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதுபோக்கு... பொழுதுபோக்கு... பொழுதுபோக்கு மட்டுமே. வேறேதற்கும் இல்லை....

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

2 பதிவுகள்.... அதில் ஒன்று தமிழ்...

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் வராது... எரிச்சல் வரும்... அதுவும் dark பின்னனியில் template வைத்திருப்பவர்களை பார்த்தால்.... அதற்காக அவர்களது பதிவை படிக்காமல் போகவேண்டுமே என்று தான் எரிச்சல்....

பொறாமை... கண்டிப்பாக உண்டு... அதுவும் போட்டோ கமெண்ட்ஸ் போடுபவர்களை பார்த்தால் கண்ணாபின்னாவென்று பொறாமை வரும்... குறிப்பா சுகுமார் சுவாமிநாதன் அவர்களை சொல்லனும்... (நானும் அந்த போட்டோக்களுக்கு கமெண்ட்ஸ் யோசிப்பேன்... ஆனா வராது.... அதான் அவ்ளோ fire....)...

அதே மாதிரி... கதைகள் எழுதறவங்கள பாத்தாலும் காதில புகை தான்...

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அது சுகுமார் சுவாமிநாதன் அவர்கள் தான்... பாராட்டி... இப்பதிவுலகில் எனக்கு முதலில் விருது கொடுத்து அவரே...

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

இதுவே போதுமே. இன்னும் என்னத்தை சொல்வது என்று தெரியவில்லை.இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்...
.1. சுகுமார் சுவாமிநாதன்
.2. கீதா ஆச்சல்
.3. அகல்விளக்கு

Read more...

உதிரிப்பூக்கள்

August 14, 2010

மும்பை கப்பல் விபத்து

----------------------------

மும்பை துறைமுகத்தில் இரு கப்பல்கள் மோதல்... 60 - 70 டிகிரில சாஞ்சு நிக்குது MSC Chitra.... எப்படித்தான் இப்படி சாஞ்சு நிக்கற கப்பல நிப்பாட்டுவாங்களோ!!!!

துறைமுகத்துக்கு இவ்ளோ பக்கத்துல வந்து ரெண்டு கப்பலும் மோதிக்கிட்டதால். இந்த கடல் நீரை தான் BARC (Baba Automic Research Centre) யூஸ் பண்ணுவதால், மும்பை துறைமுகத்தை முடக்குவதால்.... கொஞ்சம் டவுட்டாயிருக்கு....

எது எப்படியோ... அந்த இரு கப்பல் நிறுவனங்களும் நஷ்ட ஈடு தரவேண்டியதில்லை... இது இந்தியா தானே!!! அமெரிக்கா அல்லவே!!!!



(இந்த போட்டோவ பாத்தா தான் இந்த விபத்தின் முழு பரிமாணமும் விளங்குகிறது....)



(Image Courtesy : The Hindu)

..........................................................................................
ஈரோடு புத்தகத் திருவிழாவில் வாங்கிய ஜெயகாந்தன், Chethan Baghat, அசோகமித்திரன் புத்தகங்கள் அனைத்தும் படித்தாயிற்று... இறையன்புவின் 'படிப்பது சுகமே' வைத் தவிர............
..........................................................................................

எம். ஆர். ராதா, எம்.ஜி.ஆர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த 'பாசம்' படம் பார்த்தேன்... கொடுமைக்கார கணவனிடமிருந்து (எம். ஆர். ராதா) பிரிந்து, குழந்தைகளை (எம்.ஜி.ஆர்) வளர்க்கும் கதாபாத்திரம் டி.ஆர்.ராஜகுமாரிக்கு... சந்திரலேகா படத்தில் சர்க்கஸ் ஆடுபவராக நடித்திருப்பார்... அதிலும், சஷாங்கன் (காதலனின் தம்பி) அவரை அணுகும் காட்சியில் செமயாக நடித்திருப்பார்.... அப்படிப்பட்டவருக்கு பாசம் படமெல்லாம்.... சும்மா... ஜஸ்ட் லைக்தட்....

..........................................................................................
சுதந்திரதினத்தன்று சன் டிவியில் - எந்திரன் - இசை வெளியிட்டு விழா - உருவான கதையாம்... என்ன கொடுமைடா சாமி...
..........................................................................................

உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: தமிழக அரசு
- எங்கப்பன் குதிருக்குள் இல்லை
இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன..?
..........................................................................................

Read more...

சமையலறை என்னும் ஓர் மாய அறை....

July 21, 2010

வெகு சில நாட்களுக்கு முன் வரை சமையலறை என்பது ஓர் மாய அறையாக இருந்தது, என்னை பொறுத்தவரையில்... ஆம்..


"அம்மா... பசிக்குது.. என்ன இருக்கு சாப்பிட..?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்று, இருப்பதை தட்டில் போட்டுக்கொண்டு, சாப்பிட்டு, தட்டைக் கழுவி வைத்துவிட்டு வரும்வரை மட்டுமே என் கண்களுக்கு அந்த அறை தெரியும்...மற்ற சமயங்களில் எல்லாம் அப்படி ஒரு அறை இருப்பதே என் கண்களுக்கு தெரியாது..


அம்மா சமைத்துவிடுவதாலும், அம்மா ஊருக்கு போயிருந்தால் அக்கா, அம்மாவைக்காட்டிலும் அருமையாய் சமைத்து தந்துவிட்டதாலும், இருவரும் வெளியே போயிருக்கும் பட்சத்தில் அப்பாவே சமைத்து விடுவதாலும், அந்த மாய அறையை பற்றியோ, அதில் நிகழ்த்தப்படும் மாயாஜாலங்களைப் பற்றியோ நான் அறிந்ததில்லை...


ஆனால் இப்பொழுதோ...
நான் தங்கமணியாக ஆகிவிட்டதினாலும், நான் செய்வதையும் சாப்பிடுவதற்கென்று ரங்கமணி வந்துவிட்ட காரணத்தினாலும்... எப்போதாவது என் கண்களில் பட்டு வந்த அந்த மாய அறையிலேயே எந்நேரமும் நான் இருக்கவேண்டியதாக இருக்கின்றது...


ஆனாலும்... இப்பொழுதும் சமையலறை, மாய அறையாகவே உள்ளது...
அது என்ன, அம்மாவும், பெரியம்மாவும் செஞ்சா மட்டும் உப்புமா நன்றாக வருகிறது, எனக்கு மட்டும் கட்டி கட்டியாக வருகிறது...
எனக்கு மட்டும் பொரியல் தீய்ந்து போய்விடுகிறது...
சர்க்கரை பாகு கட்டி பிடித்து, பாத்திரத்தோடு பாத்திரமாய் ஒன்றிவிடுகிறது....

என்ன கொடுமை சரவணா, இது....?

Read more...

ரயிலடி

July 10, 2010

பஸ்சில் போய்க்கொண்டிருந்தேன். ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது, கண்டக்டர் ரயிலடி வந்தாச்சு…. ரயிலுக்கு போறவங்கல்லாம் இறங்கிக்கங்க என்று சொன்னார்…. ரயிலடி என்று சொன்னது ரொம்ப வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தது கேட்க. நானும் இனி ரயில்வே ஸ்டேஷன் என்று சொல்லாமல், ரயிலடி என்று தான் சொல்லப்போகிறேன்...


பொதுவாக பேருந்து, பேருந்து நிலையம் என்று எழுதினால் தான் தமிழை வளர்க்க முடியும் என்று சொல்வதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை தான்….


மாறாக bus, train, railway staion, bus stand, time என்றெல்லாம் ஆங்கிலத்திலேயே எழுதுவதற்கு பதில் பஸ், ட்ரெயின் என்றெல்லாம் தமிழில் எழுதினாலாவது தமிழை காப்பாற்றலாம் என்று எண்ணுபவள் நான்….


ஆனாலும், இதுபோன்ற சுவையாக இருக்கும் பதங்களை உபயோகப்படுத்தவே தோன்றுகிறது….

ஆனால் – பஸ் ஸ்டாண்டுக்கு என்ன சொல்வது..?

Read more...

இறையாண்மை + தனிமனித உரிமை = இயலாமை...

May 8, 2010

26.11.08 அன்று மும்பையில் பலரை(166)க் கொன்ற கசாப்புக்கு தூக்காம்... அதுவும் உடனே நிறைவேறாதாம்... மேற்கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாமாம். ஜனாதிபதிக்கும் கருணை மனு போடலாமாம். அவனுக்கு, இல்லை அவருக்கு அதுக்கெல்லாம் உரிமை உண்டாம்.. இதற்கெல்லாம் இறையாண்மை, தனிமனித உரிமை என்று பெயராம்....

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கு கசாப்புக்கு உரிமை உண்டாம்.. ஆனால் அவனாலும், மற்றவர்களாலும் சுடப்பட்டவர்களுக்கு சாவதற்கு தான் உரிமை உண்டு போலும்... பிறந்தாலும் இந்தியத்திருநாட்டில் குடிமக்களாய் பிறக்கக்கூடாது போலிருக்கிறது...

அதேபோல் 2001ல் பார்லிமெண்ட் தாக்குதல் வழக்கில் பிடித்துவைத்திருக்கும் (ராஜ உபசாரங்கள் செய்யப்படும்) அப்சலுக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லையாம்...

தீவிரவாதிகளுக்கு, அதுவும் பேருக்கு ஒருத்தனை (தப்பு. தப்பு... ஒருத்தரை) பிடித்துவைத்துக்கொண்டு, நீதி, தனிமனித உரிமை என்ற பெயரிலும், இறையாண்மை என்ற பெயரிலும் நடக்கும் கூத்துக்கள், உலக அரங்கில் நமது இயலாமையையே காட்டுகின்றன...

உண்மையில் அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமோ.... ஆனால்.. அந்த வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் இயலாமை... இயலாமை... என்றே என் காதுகள் கேட்கின்றன...

----------------------------------------------------------------------------------------
பி.கு...

பதிவெழுதி சில மாதங்கள் ஆகிவிட்டாலும்.... இன்னும் என்னைத் தொடர்ந்து வந்து ஆதரவு தரும் எனது வாசகர் வட்டத்திற்கு நன்றி... நன்றி...
----------------------------------------------------------------------------------------

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP