ஜெயம் கொண்டான் - வாரக் கடைசியில் ஒரு நல்ல படம்
September 8, 2008
வார கடைசியில் ஒரு entertainmenta இருக்கட்டுமேன்னு தான் ஜெயம் கொண்டான் படம் பாக்க போனோம். சில லாஜிக் ஓட்டைகளை தவிர்த்து படம் நன்றாகவே இருந்தது... அதிலும் யதார்த்தமாக இருந்தது...
படம் ஆரம்பிச்ச சில நிமிடங்களில் ஒரு குட்டி சீன். ஹீரோவோட ஃபிரண்ட் வீட்ல வொய்ஃப் சமையல் பண்ணிட்டு இருப்பா. அப்போ குழந்தை தலை வாரி விட சொல்லும். அதே சமயம் காலிங் பெல்லும் அடிக்கும், போனும் அடிக்கும்... குழப்பத்தில் அவள் கதவை திறந்து " ஹலோ, யாரு பேசறது? அப்படினு வெளியில நிக்கிற ஹீரோவை பார்த்து கேட்பாள் ?
ரொம்ப சின்ன சீனா இருந்தாலும்... எனக்கு அது ரொம்ப பிடிச்சி இருந்தது.... அப்புறம் ஃபிரண்ட்ஷிப், லவ், சிஸ்டர் சென்டிமெண்ட், அது இதுனு கதை போர் அடிக்காம போச்சு... நாட் bad... infact நல்லாவே போச்சு... நல்லா டைம் பாஸ் ஆச்சு...
நேர்ல பாத்தா படத்தோட டைரக்டரை கண்டிப்பா பாராட்டணும்...