காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

எம தர்பார்

March 14, 2011


‘அரசே..’
‘மன்னா…’
‘வேந்தே…’
‘ஐயா…’
(நாம் கூப்பிட்டது இவர் காதிலேயே விழவில்லை போலிருக்கின்றது.. எதற்கும் பூலோகமுறைப்படி அழைப்போம்…)
‘சார்…’

யமதர்மர்: "சாராம்… சார்.. ஏன்.. மோர், பால், தயிர், என்றேல்லாம் கூப்பிடுவது தானே,சித்ரகுப்தா…"
"பூலோகம் சென்றுவந்தது முதல் உமக்கும் அந்த பித்து பிடித்துவிட்டதா..? என்னை அழைக்க உனக்கு நம் தமிழில் வார்த்தைகள் கிடைக்கவில்லையா..?"

சித்ரகுப்தர்: "இல்லை வேந்தே… அப்படித்தான் உங்களை அழைத்தேன்.. தாங்கள் மிகுந்த யோசனையில் இருந்ததால், பூலோகமுறைப்படி அழைத்தேன்… மன்னியுங்கள் பிரபு.." (நீங்களும் அதற்குதானே திரும்பினீர்கள்.. ஆனால் குற்றம் சொல்வதென்னவோ என்னை… ம்.. இந்த யஜமானர்களே இப்படித்தான்… )

யமதர்மர்: "பரவாயில்லை குப்தா…. எனக்கிருந்த கோபத்தில் உன்னை சற்று வேகமாக பேசிவிட்டேன்.." 

சித்ரகுப்தர்: (பேசினதெல்லாம் பேசிவிட்டு இந்த வார்த்தை ஜாலம் வேறா..) "அப்படியென்ன யோசனை அரசே?"

யமதர்மர்: "சொல்கிறேன்.. .. .. சொல்கிறேன்.. உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லபோகிறேன்.."

சித்ரகுப்தர்: (ம்க்கும்… இப்படி சொல்லி சொல்லியே இவர் நம்மிடம் வேலை வாங்கிவிடுவார்… அந்த கார்பரேட் முதலாளிகளுக்குக்கெல்லாம் இவர் தான் குரு போலிருக்கின்றது…. )

யமதர்மர்: "ஆமாம், குப்தா.. கொலைகளை நாம் எப்படி தரம் பிரித்திருக்கின்றோம்..?"

சித்ரகுப்தர்: "மன்னா.. கொலைகளில் ஒரு 6 வகை உள்ளது.."
  1. தெரியாமல், அறியாமல் செய்துவிடுவது..
  2.  தெரிந்தே, திட்டமிட்டே செய்வது..
  3. தெரிந்தே, திட்டமிட்டே, கொடூரமாக செய்வது
  4. தனக்கு நேரடி விரோதம் இல்லாவிட்டாலும் பணத்துக்காக கொலை செய்வது..
  5. விபத்தில் செய்துவிடுவது..
  6. சின்ன குழந்தைகளை கொலை செய்வது…

"இதில் 2-6 வகைக்கு நாம் கடுமையான தண்டனைகளை தருகிறோம்.. மன்னா.."

யமதர்மர்: "சரி.. இனிமேல் இதில் தமிழ்க்கொலை என்ற பிரிவையும் சேர்த்துவிடு.."

சித்ரகுப்தர்: "ஓ…தமிழில் பெயர் வைத்தாலே வரி விலக்கு என்பது போலவா மன்னா.. தமிழ் என்ற பெயருடையவர்களை கொலை செய்வதா மன்னா..?(தப்பா சொல்லிட்டோமோ!!! நம்மையே கொலை செய்துவிடுவது போல் பார்க்கிறாரே!!!)

யமதர்மர்: "மூடனே!!! சங்கம் வைத்து வளர்த்த நம் தமிழை சிதைப்பவர்களை சொன்னேன்..நம் பூலோக உலாவில் இந்த மானிட பதர்கள் நம் தமிழை சின்னாபின்னமாக சிதைப்பதை பார்க்கவில்லையா நீ..????"

சித்ரகுப்தர்: "ஆமாம் ஆமாம்.. பார்த்தேன்.. இல்லையில்லை கேட்டேன்.."

யமதர்மர்: "ம்.. நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு, ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது முழுவதுமாக ஆங்கிலத்திலேயே பேசுகிறார்களா.. அதுவும் இல்லை.. தமிழில் பேசிக்கொண்டிருக்கையில் நடுநடுவே ஆங்கில வார்தைகளை தூவிக்கொள்கிறார்கள்.."

சித்ரகுப்தர்: "சமையலில் கொத்துமல்லி தூவுவது போல்.. என்ன மன்னா…??"

யமதர்மர்: "சமையல் என்று சொன்னதும் தான் நினைவு வருகிறது.. இந்த தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளை தருகிறார்களே… அவர்களை மட்டும் தனியே கவனிக்க வேண்டும்.."

சித்ரகுப்தர்: ஆமாம்.. ஆமாம்.. அப்பொழுது தான் புதுசு புதுசா அவங்க செய்யறதெல்லாம் நாம சாப்பிட்டு பாக்கலாம்…

யமதர்மர்: "நீர் மங்குனி அமைச்சரே தான்.. சந்தேகமேயில்லை.."

சித்ரகுப்தர்: (பின்ன உங்களுக்கில்ல அமைச்சராயிருக்கேன்..) "சமையல் கலைஞர்கள் மேல் அப்படியென்ன கோபம் அரசே?"

யமதர்மர்: "பின் என்ன குப்தா.. பதார்த்தம், சுவை, மணம், அருமை போன்ற வார்த்தைகளை எல்லாம் தொலைத்து தலைமுழுகிவிடுவார்கள் போல.."

"இந்த டிஷ் பாத்தீங்கன்னா… ரொம்ப tasteஆ இருக்கு.. பாக்கவே mouth wateringஆ இருக்கு.."

"இந்த டிஷோட flavor அப்படியே நம்மளை இழுக்குதுன்னேல்லாம் சொல்றாங்க.. அதுகூட பரவாயில்லை.. தேங்காய் அரைக்கும் போது நல்லா coarseஆ அரைச்சுக்கோங்கன்னு சொல்றாங்க.. ஏன்.. கொஞ்சம் கரகரன்னு அரைச்சுக்கோங்கன்னு சொல்றது…"

"நல்லா niceஆ grind பண்ணிக்கங்கன்னு சொல்றாங்க.. நல்லா நெகு நெகுன்னு அரைச்சுக்கோங்கன்னு சொல்றது…"

"மெல்லத் தமிழ் இனி சாகும்ன்னு பாரதி சொன்னப்போ இவங்களை பத்தி தெரியாம சொல்லிட்டாரு போல… இவங்க மிக்ஸில போட்டு தமிழை அடிச்சே கொன்னுடுவாங்க… அப்படியும் சாகலைன்னா சட்டியில போட்டு வறுத்துடுவாங்க போலிருக்கு…."


சித்ரகுப்தர்: "அமைதி.. அமைதி.. மன்னா.. 
சமையல் தான் என்றில்லை.. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தான் தமிழை மோசமாக கையாளுகிறார்கள்.. அப்படியிருக்க அவர்கள் மேல் மட்டும் ஏன் இந்த கோபம்….?"

யமதர்மர்: "மங்குனி அமைச்சரே… மக்கள் எவ்வளவு தான் நாகரீகம் அடைந்தாலும், அவர்கள் எவ்வளவு தான் உயரங்களை எட்டினாலும், அவர்களை அவர்கள் வேர்களோடு பிணைத்து வைப்பதில் சாப்பாட்டுக்கு முக்கிய பங்கு உண்டல்லவா… அத்தகைய சாப்பாட்டு நிகழ்ச்சிகளிலேயே இப்படி தமிழை மறக்கிறார்களே என்று தான் என் ஆதங்கம்…"

சித்ரகுப்தர்: "உண்மை தான் மன்னா.. இன்று முதல் தமிழ்க்கொலை என்ற வகையினையும் சேர்த்துவிடுகிறேன்… தமிழ்க்கொலையாளிகளுக்கு தண்டனையும் எழுதிவைத்துவிடுகிறேன்…"

யமதர்மர்: "தமிழ்க்கொலையாளிகள் மக்கள் தொலைக்காட்சியை பார்த்திருந்தாலோ அல்லது அதில் நிகழ்ச்சிகள் வழங்கியிருந்தாலோ தண்டனையை குறைத்து எழுதிவிடு குப்தா…"

சித்ரகுப்தர்: "அப்படியே ஆகட்டும் அரசே… உங்கள் கோபம் தணிக்க அருகம்புல் சாறு வரவழைக்கிறேன்.  அருந்தி..சாந்தமடையுங்கள்!!!"


(Image obtained from google search)

Read more...

Apocalypto – நேர்த்தியான வன்முறை

March 8, 2011


ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no peace of mindன்னு, சிவாஜி பாடறமாதிரி,100 இருந்தும் channelகள் இருந்தும், சிலசமயம் ஒரு சேனல்லையும் பாக்கறதுக்கு ஒன்னியும் உருப்படியாக இருக்காது.

எல்லா சேனலையும் ஒரு ஓட்டு ஓட்டிட்டு, கடைசில பாத்து பாத்து புளிச்சுப்போன ஒரு பாட்டையே, திரும்ப பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படும். இந்த மாதிரி இருக்கப்போ ஒரு நாள், Apocalyptoங்கற படத்தை பாத்தேன். ஒரு சீன் பாத்ததுமே டர் ஆகி அடுத்த சேனலுக்கு ஓடிப்போயிட்டேன்….(படத்துல எல்லாரும் ஆதிவாசி கெட்டப்புல இல்ல இருந்தாங்க)

ஆனா அடுத்த ரவுண்டுல, அந்த சேனலை விட்டு நம்ம ரிமோட்டு நகரமாட்டேன்னு சொல்லிடுச்சு..(அத ரொம்ப தொந்திரவு செஞ்சிட்டேன் போல..) சரி நம்ம ரிமோட்டாண்டவர் சொன்னாரேன்னு அந்த படத்த பாக்க ஆரம்பிச்சேன்அருமை, அருமை அருமையோ அருமைங்கஆனா வன்முறையோ, வன்முறைங்க

கதை
மாயர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு நாடோடிக்கூட்டம் இன்னோரு நாடோடிக்கூட்டத்தினால் எப்படி அழிக்கப்படுகிறது என்பதே கதை
இந்த ஒரு வரி கதையை எவ்வளவு நேர்த்தியா சொல்லமுடியுமோ, அவ்வளவு நேர்த்தியா சொல்லியிருக்காங்க.

திரைக்கதை
ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், தாங்கள் இருக்கும் நிலப்பகுதியை ஆண்டுகொண்டும் இருக்கிறார்கள் ஒரு நாடோடிக்கூட்டத்தினர். அப்போது அவ்வழியே போவதற்கு இன்னோரு கூட்டம் அனுமதி கேட்கிறது.. அனுமதி வழங்கிவிட்டு, ஹீரோவின் தந்தை ஹீரோவிடம் சொல்கிறார், இப்போது இங்கே பார்த்தை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று. னெனில், அவர்கள் கண்களில் பயம் தெரிகிறது, அது ஒரு வியாதி, எல்லோருக்கும் தொற்றிக்கொள்ளும் என்று சொல்கிறார்.

அடுத்த நாள் காலையிலேயே. இவர்கள் வீடுகளுக்கு தீவைத்து, ஆட்களை கொலை செய்கிறது ஒரு கூட்டம். இந்த களேபரத்தில் ஹீரோ, தனது கர்ப்பிணி மனைவியையும், குழந்தையையும் ஒரு ஆழமான குழிக்குள் விட்டு விடுகிறார். சண்டைக்கு பின் மீதமிருப்பவர்களை கைதிகளாக பிடித்துக்கொண்டும் போகிறது அந்த கூட்டம். கைதிகள் எப்படி கொண்டு செல்லப்படுகிறார்கள் தெரியுமா? கைதிகளின் கைகளையும், கழுத்தையும் மூங்கில்களோடு சேர்த்து கட்டிவிடுகிறார்கள்

ஒரு நீண்ட மூங்கிலில் 4,5 கைதிகள். அப்படியே நடைபயணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான். ஒருத்தர் தவறிவிழுந்தாலும், அடுத்தவரும் சேர்ந்து விழவேண்டியதுதான். இப்படி நடக்கறதே கஷ்ட்டம் அதுல ஒரு காட்டாற்றை வேறு கடக்கின்றார்கள். அப்பவே நமக்கு தெரிஞ்சிடுது இன்னும் எவ்வளவோ இருக்குன்னு

பெண்களை ஏலம்விட்டபின், ஆண்களை புளு கலர் சாயம் பூசி, பலிகொடுக்க அழைத்துச்செல்கிறார்கள். ஹீரோவின் முறை வரும்போது, கிரகணம் ஏற்பட தப்பிக்கிறார் (தற்காலிகமாகத்தான்).

இவர் தான் ஹீரோ
அப்பறம் அப்படி இப்பிடின்னு தப்பிச்சு வந்து தன் குடும்பத்தை மீட்பது தான் கதை. (எல்லாத்தையும் சொல்லிட்டா படம் பாக்கறப்போ நல்லா இருக்காதுங்க)

டச்சிங் சீன்ஸ்

கைதிகளான பின், எல்லோரும் என்னாகுமோ ஏதாகுமோ என்று கவலைப்படும் போது, ஹீரோ மழை பெய்யக்கூடாது என்று வேண்டிக்கொள்வது.

குழிக்குள் இருந்தாலும் மனதைரியத்தை காட்டும், ஹீரோயினும் அவள் குழந்தையும்.

வன்முறை சீன்ஸ்
கைதிகளின் வெட்டியெடுக்கப்பட்ட இருதயத்தை சட்டியில் சுடுவது. அதைவிடக் கொடுமை அந்த சாம்பலை பெண்கள் குழந்தைகளுக்கு பூசுவது.. அடிங்க....

மீதி கைதிகளை இந்த இடத்தை தாண்டி உங்க ஊர் இருக்குன்னு சொல்லி ஓடவிட்டு சாகடிக்கறது.

--- இவ்வளவு வன்முறை இருந்தாலும் விடாமல் படத்தை பார்க்க செய்யும் திரைக்கதை. Making of a film ன்னு ஒண்ணு பாக்கனும்ன்னா அது கண்டிப்பா இந்த படத்தோட making தான். 

படத்தோடு கண்ணாபின்னான்னு ஒன்றிவிடுகிறோமா நடிகர்களை வேறு costumeல் நம்மால் நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.

இவர் வில்லன்
இவர் தான் வில்லனாம்








ஒரே ஒரு எரிச்சல். பில்லா படத்துல அஜித் நடையோ நடைன்னு நடப்பாரே, அந்த மாதிரி இந்த ஹீரோ ஓடறார், ஓடறார், காட்டின் எல்லைக்கே ஓடுகிறார். இந்த படத்துல பாதி சம்பளம் உங்க டிரஸ்காக (ஹா.. ஹா..), மீதி சம்பளம் நீங்க ஓடறதுக்குன்னு டைரடக்டர் முன்னாடியே சொல்லிருப்பாரு போல…

வன்முறை காட்சிகளெல்லாம் எனக்கு மேட்டரே இல்லன்னு சொல்றவங்க, இந்த படத்தை மிஸ் பண்ணவேண்டாம்… 

Apocalypto - ஆயிரம் இருந்தும் வன்முறை இருந்தும் ஒரு அருமையான படம். 

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP