நொடியில் கொஞ்சம் நாட்டுப்பற்று!!!
January 26, 2010
இந்த பதிவை வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி... நன்றி...
"உங்களுக்கு நாட்டுபற்று இருக்கா..? "
"உங்களுக்கு இந்தியாவ பிடிக்குமா..? "
- இந்த கேள்விய இந்தியாவில இருக்கற யார்கிட்ட கேட்டாலும் பிடிக்கும், நாட்டுபற்றுல்லாம் இருக்குன்னு தான் சொல்லுவாங்க..
ஆனா, "இந்தியாவில இருக்கறதுக்கு உங்களுக்கு பிடிக்குமா?" ன்னு கேட்டா... அத்தனை பேருமே இல்லன்னு தான் சொல்லுவாங்க...
ஏன்னு சொல்லவேண்டியதே இல்ல... எவ்வளவோ குளறுபடிகள்... லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடு, ட்ராபிக்கில் ஒழுங்கின்மை ன்னு ஆரம்பிச்சு நம்ம மக்கள் தொகைய விட நீளமா போகும் அந்த லிஸ்ட்... இதையெல்லாம் சரி பண்ண நம்மள்ல்ல யாருக்கும் நேரமே இல்ல...
'நானே நாள் முழுக்க கஷ்டபட்டு வேலை பாக்கறேன்... வாரத்துல ஒரே நாள் தான் லீவ்.. இதுல நாட்டுபற்று, சீர்திருத்தம் இதெல்லாம் நமக்கு சரியாவராது' ன்னு நீங்க நெனச்சீங்கன்னா, அது நூத்துக்கு நூறு உண்மை.. கூட்டம் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தவோ, கோஷம் போடவோ, பிற சீர்திருத்த பணிகளில் ஈடுபடவோ நம்மில், பலருக்கு நேரமில்லை தான்..
ஆனால், பல சமயங்களில், நம் நாட்டுபற்றை வெளிப்படுத்தவும், ஒழுங்கீனங்களை சீர் செய்யவும் சில நொடிகளே போதும் என்பதே உண்மை...
ஒருஉதாரணத்துக்கு ட்ராபிக்கில் ஒழுங்கின்மையை எடுத்துக்குவோம்.. அதுக்கு என்ன செய்யலாம்.. ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்கன்னு பிட் நோட்டீஸ் அடிச்சு தரலாம், மீட்டிங் போட்டு பேசலாம், குறிப்பிட்ட நேரங்களில் ட்ராபிக் போலீஸ் இருக்கணும்ன்னு வலியுறுத்தலாம் இல்லனா கேமரா வெச்சு மானிட்டர் பண்ணலாம்... ஆனா.. இதுஎல்லாமே ரொம்ப டைம் எடுக்கும்.. அதுக்கு பதிலா அவ்வளவாய் டைம் எடுக்காத, ஆனால் பலன் தரக்கூடியதை செய்யலாம்... அதாவது ட்ராபிஃக் சிக்னல்ல பச்சை லைட்டு போட்டதும் வண்டி எடுத்தா போதும்...
ப்பூ.. இவ்வளவுதானா!!! இது ஒரு மேட்டரா... ன்னு நெனைக்காதீங்க.. உண்மையில் அது அவ்வளவு ஈஸி இல்லை.. 5, 4, 3 ன்னு வந்ததுமே எல்லாரும் வண்டி எடுத்துடுவாங்க... அப்போ நாம மட்டும் எடுக்கலேன்னா கன்னாபின்னான்னு ஹார்ன் அடிப்பாங்க.... உடனே நாமளும் அவசரப்பட்டு வண்டிய கெளப்பிடுவோம்.... ஆனா அப்படி செய்யாம 3,2,1ன்னு குறைஞ்சு பச்சை விளக்கு எரிஞ்சதும் தான் வண்டி எடுக்கணும்ன்னு உறுதியா இருங்க...
இத எப்பவுமே ஃபாலோ பண்ணுங்க. அவ்வளவுதான்...
இதற்கு ஆகும் செலவு; ரூ 0 /-
இதற்கு ஆகும் நேரம்; 1 அல்லது 2 நொடிகள்...
அவ்வளவே தான்... இதை நம்மால் செய்ய முடியாதா என்ன?
வெளிநாடு போய்வந்த எல்லோரும், 'அங்கல்லாம் ட்ராபிக் ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்றாங்க ன்னு' பெருமையா சொல்லிப்பாங்க.... எங்கேயோ, யாரோ செய்வதில் நமக்கென்ன பெருமை... ஆனால் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை நாம் செய்யாமல் இருந்தால் நமக்குத்தானே சிறுமை....
ட்ராபிஃக் சிக்னல்லை தவிர்த்து, ஓரிரு நொடிகளில் நாம் செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கு..
சரி.. இதுக்கும் நாட்டுபற்றுக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேட்கலாம்..
இந்த மாதிரி நீங்க செஞ்சு, உங்கள பாத்து நாலு பேரு ஃபாலோ செஞ்சு, அது அப்படியே டெவலப் ஆகி, ட்ராபிக் போலீஸ் இல்லாமயே, ட்ராபிக் ரூல்ஸ்ச நாம ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ற நிலை வந்தா நல்லது தானே...
சிறுதுளிகள் சேர்ந்து தானே பெரு வெள்ளமாகும், அப்படியான ஒரு பெருவெள்ளத்திற்கு உங்கள் சிறு துளியும் தான் காரணமாய் இருக்கட்டுமே!!!!! Read more...



