காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.
Showing posts with label உதிரிப்பூக்கள். Show all posts
Showing posts with label உதிரிப்பூக்கள். Show all posts

உதிரிப்பூக்கள் – டிசம்பர் 21, 2010

December 21, 2010

யானைக்குட்டி


கோவை வனச்சரகத்தில் பிறந்த சில மணிநேரங்களிலேயே யானைக்குட்டி ஒன்று கைவிடப் பட்டுள்ளதாம்..  அதை அதன் தாயுடன் சேர்க்க நடந்த முயற்சிகள் (மனித வாசனை பட்டால், யானைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், யானையின் சாணத்தை பூசிக்கொண்டு, அந்த குட்டியை பராமரித்துள்ளார்கள்) தோல்வியடைந்து, அந்த குட்டி வண்டலூரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது..

இது எல்லாருக்கும் தெரிஞ்ச செய்திதான்… ஆனால் எனக்கு எரிச்சல் வந்தது தினமலர் பாத்து தான். அந்த யானை குட்டி ‘சொகுசாக’ காரில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டதாம். என்ன ‘சொகுசு’!!! தாயை பிரிந்து, வாழ போராடும் ஒரு குட்டி, வண்டியில் ஏற்றி அனுப்பபட்டால், அதுக்கு பேரு சொகுசா???

விஜயகுமார், வனிதா நியூஸ் கவர் பண்றதைக் காட்டிலும், இந்த மாதிரி செய்திகளையாவது இந்த பத்திரிக்கைகள் அதிகம் போடலாம்… அந்த வகையில ஹிந்து பத்திரிக்கை பரவாயில்லை…
-----------------------------------------------------------------------------------------------------------------------------
வந்தார்கள் வென்றார்கள்


மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ படித்தேன். நல்லாயிருந்தது. (1995ல வந்த புத்தகம். இப்பத்தான் படிக்கமுடிஞ்சது… இவ்வளவு நாளா எப்படித்தான் மிஸ் செய்தேனோ!!!)

பெட்டி செய்திகள் ஸ்வாரஸ்யமாக இருந்தது…
அரச பதவிக்கு போட்டியாக இருப்பவர்களின் கண்களை நோண்டியெடுப்பார்களாம்… இல்லைன்னா பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பிய கண்ல விட்டு கண்ணைக் குருடாக்குவார்களாம் என்ன கொடுமை சார் அது?

அதில் போரில் வென்ற பின், பிடிபட்ட ஆயிரக்கணக்கான கைதிகளை பார்த்து தைமூர் சொல்லும் ஒரு டயலாக்…
‘இதில் கட்டடக் கலைஞர்களையும், ஓவியர்களையும், சிற்பிகளையும் நம்முடன் கொண்டு செல்வோம். எதற்கும் உபயோகமில்லாத 
க(ம)ற்றவர்கள் தலைகள் வழக்கம்போல் சீவப்படலாம்’

அந்த காலத்தில் அவர்களுக்கு தான் மவுஸ்… இந்த காலத்தில் ஓவியர்களையும், சிற்பிகளையும் நாம் மதிப்பதேயில்லை…

-------------------------------------------------------------------------------------------------------------------------------

தெளிவு, திறமை, நேர்மை ஆகியவற்றின் மொத்த உருவமாக பிரதமர் மன்மோகன் சிங் இருக்கிறார்
 --- இப்படி இந்த வார காமெடியை சிரிக்காமல் சீரியசாக சொல்லியிருப்பவர் வேறு யாருமில்லை… சோனியா காந்தி தான்..

-------------------------------------------------------------------------------------------------------------------------------


மன்னன் படத்தின் இந்தி பதிப்பு பார்த்தேன். தனுஷ், ஜெயம் ரவி மட்டும் இல்லை, ரஜினி, கமல், MGR, சிவாஜி ஆகியோரின் படங்களும் பெரும்பாலும் காப்பி தான். என்ன ஹிந்தியில இருந்து இருக்கும். 
கொஞ்சம் ZEE cinema, Star Gold சேனல்கள் பார்த்தால் தெரிந்துபோய்விடும்.

என்னதான் ஸீன் பை ஸீன் எடுத்திருந்தாலும் ஒருவர் செய்ததை இன்னோருவரால் செய்யவே முடிவதில்லை…

எங்க வீட்டுபிள்ளை படம் கன்னடத்தில் விஷ்ணு வர்த்தன் செய்திருப்பார். அவர் நல்ல நடிகர் தான். சந்தேகமில்லை. ஆனால் அந்த சாட்டையை சுழற்றிக்கொண்டு MGR பாடும் ‘நான் ஆணையிட்டால்’ பாட்டை நின்ற இடத்திலேயே நின்று கொண்டு விஷ்ணு வர்த்தன் செய்யும் போது, கை தன்னியல்பாக சேனலை மாற்றவே செய்யும்.

Back to மன்னன் ஹிந்தி பதிப்பு.. ஸ்ரீதேவி தான் விஜயசாந்தி கேரக்டரில். அந்த மிடுக்கும், அகங்காரமும் ஸ்ரீதேவிக்கு வரவில்லை… கண்ணில் கோபம் வந்தாலும், body language சரியாக வரவில்லை அவருக்கு…

ரஜினியை அப்பாயிண்ட் செய்யும் சீனில்
‘நீங்க ஜிஜிபாய் கம்பெனில வேலை பாத்தீங்களோ, இல்லை பாஜிபாய் கம்பெனில வேலை பாத்தீங்களோ எனக்கு கவலையில்லை என்று ஆரம்பித்து நெத்தியில பட்டை, உத்திராட்ச கொட்டை’ என்று instruction கொடுப்பதாகட்டும், செக்ரட்டரி எங்கே என்று கேட்கும் ரஜினியிடம் கை சொடுக்குவதாகட்டும், இல்லை தியேட்டரில் ரஜினிக்கும் கவுண்டமணிக்கும் மோதிரத்தையும், செயினையும் அப்படி அலட்சியமாக கொடுக்கும் (போடும்) ஸீனாகட்டும் விஜயசாந்தி தான் டாப்பு.. சான்சேயில்லை அவ்வளவு நல்லா செய்திருக்கிறார்..





Read more...

உதிரிப்பூக்கள் – செப் 25, 2010

September 25, 2010

கப்பலேறிப்போயாச்சு….

வேற எதும் இல்ல.. நம்ம நாட்டோட மானம் தான்.. காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதில் ஊழல் செய்து மற்ற நாடுகளுக்கு முன் நம்மை தலைநிமிரமுடியாமல் செய்துவிட்டார்கள்…..


சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக பல வீர்ர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த மாதிரி போட்டியில் இருந்து எல்லோரும் விலகிவிட்டால் எல்லா விளையாட்டிலும் நாமே ஜெயித்து,(!!!) நாமே பரிசை அள்ளலாம் என்று எண்ணுகிறார்கள் போலும்…


என்ன கொடுமை சரவணா…?


தஞ்சை பெரிய கோவில் – 1000ஆவது ஆண்டு விழா…

ஆயிரம் ஆண்டுகள்.. அடேங்கப்பா… எண்ணவே மலைக்கிறது… இக்காலத்தில் கல்லையும், மண்ணையும் வைத்து ஒரு வீடு கட்டுவதற்கே கண்ணைக் கட்டுகிறதே… போக்குவரத்து வசதிகளோ, மற்ற வசதிகளோ இல்லாத அந்த காலத்திலேயே இவ்வளவு பெரிய கற்கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை கையெடுத்து வணங்கத்தோன்றுகிறது….


சரித்திரத்தில் சாகாவரம் பெற்று விட்ட அம்மன்ன்னை நினைத்தால் மேனி சிலிர்க்கிறது...


நம்மால் கட்டமுடிகிறதோ இல்லையோ, கோவிலை பராமரிக்கவாவது செய்வோம்...


விளம்பரங்கள்...

வோடஃபோன் – ப்ளாக்பெரிக்கான ’we are blackberry boys’ விளம்பரம் அருமையாக உள்ளது… எல்லோரும் உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை சொல்லும் விதம் அழகு…

இன்னும் பார்க்கவில்லை என்றால் அவசியம் பார்க்கவும்….



மொக்கை விளம்பரங்கள்….

பொம்மிஸ் ;நைட்டீஸ் விளம்பரம்…

ஒரு இல்லத்தரசியாய் என்னை உணரவைப்பது பொம்மிஸ் ;நைட்டீஸ் என்று caption வேறு….


இல்லத்தரசி முன்னால் வந்தால் சூடான விவாதமெல்லாம், மாறிவிடுகிறதாம்….

ஸ்… ப்பா…. முடியல….

Read more...

உதிரிப்பூக்கள்

August 14, 2010

மும்பை கப்பல் விபத்து

----------------------------

மும்பை துறைமுகத்தில் இரு கப்பல்கள் மோதல்... 60 - 70 டிகிரில சாஞ்சு நிக்குது MSC Chitra.... எப்படித்தான் இப்படி சாஞ்சு நிக்கற கப்பல நிப்பாட்டுவாங்களோ!!!!

துறைமுகத்துக்கு இவ்ளோ பக்கத்துல வந்து ரெண்டு கப்பலும் மோதிக்கிட்டதால். இந்த கடல் நீரை தான் BARC (Baba Automic Research Centre) யூஸ் பண்ணுவதால், மும்பை துறைமுகத்தை முடக்குவதால்.... கொஞ்சம் டவுட்டாயிருக்கு....

எது எப்படியோ... அந்த இரு கப்பல் நிறுவனங்களும் நஷ்ட ஈடு தரவேண்டியதில்லை... இது இந்தியா தானே!!! அமெரிக்கா அல்லவே!!!!



(இந்த போட்டோவ பாத்தா தான் இந்த விபத்தின் முழு பரிமாணமும் விளங்குகிறது....)



(Image Courtesy : The Hindu)

..........................................................................................
ஈரோடு புத்தகத் திருவிழாவில் வாங்கிய ஜெயகாந்தன், Chethan Baghat, அசோகமித்திரன் புத்தகங்கள் அனைத்தும் படித்தாயிற்று... இறையன்புவின் 'படிப்பது சுகமே' வைத் தவிர............
..........................................................................................

எம். ஆர். ராதா, எம்.ஜி.ஆர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த 'பாசம்' படம் பார்த்தேன்... கொடுமைக்கார கணவனிடமிருந்து (எம். ஆர். ராதா) பிரிந்து, குழந்தைகளை (எம்.ஜி.ஆர்) வளர்க்கும் கதாபாத்திரம் டி.ஆர்.ராஜகுமாரிக்கு... சந்திரலேகா படத்தில் சர்க்கஸ் ஆடுபவராக நடித்திருப்பார்... அதிலும், சஷாங்கன் (காதலனின் தம்பி) அவரை அணுகும் காட்சியில் செமயாக நடித்திருப்பார்.... அப்படிப்பட்டவருக்கு பாசம் படமெல்லாம்.... சும்மா... ஜஸ்ட் லைக்தட்....

..........................................................................................
சுதந்திரதினத்தன்று சன் டிவியில் - எந்திரன் - இசை வெளியிட்டு விழா - உருவான கதையாம்... என்ன கொடுமைடா சாமி...
..........................................................................................

உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: தமிழக அரசு
- எங்கப்பன் குதிருக்குள் இல்லை
இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன..?
..........................................................................................

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP