காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

நெஞ்சுபொறுக்குதில்லையே...,

November 27, 2009

26/11 - ஓராண்டு நிறைவு....

ஓராண்டுக்கு பின் , மாண்புமிகு பிரதமரின் அறிக்கை..

'மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும்/தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாதாம்... '

ஓராண்டு, 365 நாட்கள் ஒரு அரசாங்கத்திற்கு பத்தாதா என்ன...? செய்வதற்கு மனமிருந்தால் தானே.... இப்படியெல்லாம் எதற்கு வீண் அறிக்கை.. பேசாமல் நாம் பதிவில் போடுவது போல் ஒரு டிஸ்கியை போடுவது தானே...

அதாவது - 'இந்திய ராணுவம், பார்டர் செக்யுரிட்டி படை, ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு, 'துணை ராணுவம், கமெண்டோ படை பிரிவு போன்றவற்றில் சேருபவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..' அவர்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கிலேயே இவ்வேலைகளை செய்கிறார்கள்.. அல்லது உயிரை விடுகிறார்கள்..'

'இந்திய இறையாண்மையை காப்பாற்றவும். இன்ன பிற வசதிகளுக்காகவும் தீவிரவாதிகளையோ, நக்சல்களையோ பிடிப்பதற்கு இந்திய அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்காது... எனவே அமெரிக்காவோ, சீனாவோ அவைகளால் தூண்டப்பட்டு பாகிஸ்தானோ இந்தியாவில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்..' என்று போடுவது தானே..

சரி இந்திய அரசாங்கம் கிடக்கட்டும்... இந்த தாக்கரேக்கள் என்ன செய்கிறார்கள்... மும்பை தாக்குதலில் இறந்தவர்களும் பாதிக்கபட்டவர்களும் 'மராத்தி மன்னூஸ்' இல்லையா...?

Read more...

சீ.மு... சீ.பி..

November 26, 2009

சீனு என்று ஒரு நாய்க்குட்டி வளர்க்க ஆரம்பித்த பிறகு, என்னுடைய எண்ணங்களில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது... சீனுவிற்கு முன், சீனுவிற்கு பின்... என்ற என் எண்ணங்கள் இங்கே..

(ப்ளாக்ன்னு இருந்தாலும் இருந்துச்சு... அவங்க அவங்க வீட்டு நாய்க்குட்டி பத்தில்லாம் எழுதறாங்கன்னு நினைக்கறவங்க இதைஅவசியம் படிங்க.. அப்படில்லாம்.. ஒண்ணும் நினைக்காதவங்க.. அப்படியே கண்டினியு பண்ணுங்க...)

சீனுவிற்கு முன்... (சீ.மு)

 1. மருந்தையெல்லாம் முதல்ல நாய், முயல்ன்னு மிருகங்களுக்கு தந்து தான் டெஸ்ட் பண்ணுவாங்களாம் - பத்திரிக்கை செய்தி .... கரெக்ட்.. ஆறறிவுள்ள மனிதனுக்கு வேண்டிய மருந்துகளை இந்த மிருகங்களுக்கு தந்து டெஸ்ட் பண்ணவேண்டியது தான்...
 2. ரோட்ல இந்த நாய், ஆடு, மாடுல்லாம் ஏந்தான் திரியுதுங்களோ... ட்ராபிக் ஆது...
 3. அவர்கள் தெரு நாய்களுக்காக ஒரு இயக்கம் /அமைப்பு ந்டத்தறாங்களாம் - பத்திரிக்கை செய்தி.. ச்சே... நாய்க்கெல்லாம் இயக்கமா...? இதுக்கு நாலு பிள்ளைங்கள படிக்கவெச்சாலும் புண்ணியமா இருக்கும்...
 4. மனிதன் தன் அறிவால் யானை, மாடு போன்ற விலங்குகளை அடக்கியாள கற்றுக்கொண்டான்.. நமக்கு ஆறறிவு.. அதுக்கெல்லாம் அஞ்சு தானே...
 5. மனிதன் மட்டுமே சிரிக்கவும், சிந்திக்கவும் செய்கிறான்.. அதுவே அவன் ஆறாவது அறிவுக்கு சான்று - பள்ளிப்பாடம் - அட ஆமாம்ல
 6. மனுசன் இருக்கறதுக்கே இங்க இடமில்லையாம்.. இதுல இந்த நாய், ஆடு, மாடு வேற..
சீனுவிற்கு பின்... (சீ.பி)
 1. மருந்தையெல்லாம் முதல்ல நாய், முயல்ன்னு மிருகங்களுக்கு தந்து தான் டெஸ்ட் பண்ணுவாங்களாம்... 'அடப்பாவிங்களா... அதெல்லாம் வலிக்குதுன்னு வாய்விட்டு சொல்லலின்னா.. உடனே அதுக்கு டெஸ்ட் பண்ணிடுவீங்களா... இதுக்கு எதுக்கு ஆறறிவு.... '
 2. ரோட்ல இந்த நாய், ஆடு, மாடுல்லாம் ஏந்தான் திரியுதுங்களோ... வண்டி ஏதும் ஏறினா என்னபண்ணுங்க... பாவம் வலிக்குதுன்னு சொல்லக்கூட முடியாது...
 3. அவர்கள் தெரு நாய்களுக்காக ஒரு இயக்கம் /அமைப்பு ந்டத்தறாங்களாம் - பத்திரிக்கை செய்தி.. - 'ஆஹா.. நல்ல வேலை செஞ்சாங்க... நம்ம சீனுவ நாம வளர்க்கிறோம்.. மத்த நாய்கள்லாம் பாவம்ல்ல... மனுசங்களுக்கு உதவ நிறையபேர் இருக்காங்க... பாவம் இந்த நாய்களுக்கு யார் இருக்கா...'
 4. மனிதன் தன் அறிவால் யானை, மாடு போன்ற விலங்குகளை அடக்கியாள கற்றுக்கொண்டான்.. இதுக்கு எதுக்கு தேவையில்லாம ஆறறிவு.... '
 5. மனிதன் மட்டுமே சிரிக்கவும், சிந்திக்கவும் செய்கிறான்.. அதுவே அவன் ஆறாவது அறிவுக்கு சான்று - பள்ளிப்பாடம் - என்ன பெரிய ஆறாவது அறிவு.. மற்ற உயிர்களுக்கும் வலிக்கும்ன்னு நினைக்காத மனிதனுக்கு இந்த credit வேறயா...
 6. மனிதர்களோடு மட்டும் இருக்கும் வாழ்க்கையில் என்ன இருக்கு... வாயில்லாத... ஆனால் அன்போடு இருக்கும் இந்த மிருகங்களோடு இருக்கும் வாழ்க்கை அருமை...

உண்மையா சொல்றேங்க... வீட்ல கண்டிப்பா ஒரு நாயோ, பூனையோ, அட்லிஸ்ட் ஒரு மீன் தொட்டியொ வைங்க... உங்களுக்கு மன அழுத்தம் இருக்கும் நாட்களில் அவை உங்கள் உற்ற தோழனாய் இருக்கும்... வீட்டில் சிறு குழந்தை, வயதானவர்கள் இருக்கிறார்களே என்று எண்ணவேண்டாம்... ஏனேனில் இன்று Pre.KG செல்லும் குழந்தைக்கு கூட மன அழுத்தம் உண்டு...

Read more...

பாராட்டு... (சர்வேசன் 500 - "நச்"னு ஒரு கதை - 2009 -போட்டிக்கு)

November 10, 2009

'ஸ்ரீமதி...'
'ஸ்ரீ..மதி...'
'ஏய்... ஸ்ரீமதி...'
'ப்ச்.. என்னம்மா...?'
'இங்கதான் இருக்கியா... நைட்டுக்கு என்ன செய்யட்டும்.. இட்லியா, சப்பாத்தியா..?'
'எதுனா செய்யி... '

என்ன ஆச்சு இவளுக்கு... நைட்டுக்கு என்ன செய்யட்டும். ன்னு கேட்டா... நாம கேட்கற ரெண்டும் இல்லாம வேற எதுனா சொல்லுவா.... இப்ப என்னடான்னா... எதுனா செய்யின்னு சொல்றாளே...

ஸ்ரீமதி - கவிதா, ராகவனின் செல்ல மகள்.. அப்பாவிடம் ஒட்டுதல் ஜாஸ்தி.. ராகவனுக்கும் தன் செல்ல மகளிடம் பிடிப்பு அதிகம்.. அவ அவங்கப்பா செல்லம் என்று சந்தோஷமாக சலித்துக்கொள்பவள் கவிதா.. அப்பா திட்டினாலோ, ஏதும் சொல்லிவிட்டாலோ ஸ்ரீமதி முகத்தை தூக்கிவைத்துக்கொள்வாள்.. அம்மா சொன்னாலோ... 'போம்மா.. நீ... வேற வேலையில்லை உனக்கு' என்று சொல்லிவிட்டு ஓடுவாள்...

'என்னடா ஆச்சு.. ஃப்ரண்ட்ஸ் கூட சண்டையா... ஏன் உம்முன்னு இருக்க...'

'ஒண்ணுமில்ல மா...'

சரி.. கேட்டா எப்படியும் சொல்லமாட்டா.. கொஞ்ச நேரம் கழிச்சு அவளே சொல்லுவா.. என்று எண்ணியபடி சமையலில் மூழ்கினாள் கவிதா..

'ஸ்ரீ.. வா.. சூடா வந்து சாப்பிடு.. வா.. வா' - கவிதா அழைக்க.. வழக்கம்போல் கிச்சன் திட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, சாப்பிட ஆரம்பித்தவள்.. ரெண்டு வாய் வைத்ததும் பட பட வென்று சொல்ல ஆரம்பித்தாள்..

'பாரும்மா இந்த அப்பாவ.. நீ நேத்து காலைல அத்தை வீட்டுக்கு போய்ட்டீல்ல.. நானும்... ஞாயித்துக்கிழமை நமக்கு லீவாச்சே... நாமளே செய்வோம்ன்னு ..
மதியம், ஃபரைடு ரைஸ், சாலட்.., நைட்டுக்கு - ரவா தோசை, அதுக்கு தொட்டுக்க தக்காளி சட்னி, தேங்காய் சட்னி ன்னு பாத்து பாத்து செஞ்சம்மா.. ஆனா இந்த அப்பா... எல்லாத்தையும் சாப்பிட்டு நல்லாவே இல்லைன்னு என்ன திட்டறாரும்மா..' என்று குற்றபத்திரிக்கை வாசித்தாள்

அவராவது.. இவளை திட்டறதாவது, என்று நினைத்துக்கொண்டவளாய் ...

'கஷ்டப்பட்டு செஞ்ச பிள்ளைய பாராட்டாம திட்டறாரா.. உங்க அப்பா.. வரட்டும் பாத்துக்கலாம்.. நீ போய் படிடா..' என்று ஆறுதல் படுத்தினாள்..

சற்று நேரம் கழித்து வந்த ராகவனிடம் கவிதா... 'ஏங்க இன்னிக்கு இவ்ளோ லேட்டு...சரி சரி.. கை கழுவிட்டு வாங்க.. சாப்பிடலாம்' என்று அழைத்தாள்..

'ஆமா.. இன்னிக்கு என்ன மெனு... உப்பு ஒரப்பு இல்லாம ஒரு குழம்பு, தீஞ்சுபோன தோசைன்னு எதுனா செஞ்சிருப்பியே... நீயெல்லாம் என்ன சமைக்கற.. நேத்து எம் பொண்ணு செஞ்சா பாரு சட்னியும், தோசையும்... ம்... அதுவல்லவோ சுவை... அதுவல்லவோ கை மணம்..'

'ம்.. இதென்ன புதுக்கதையா இருக்கு... அவ செஞ்சது நல்லாயில்லன்னு நீங்க திட்டினதா இல்ல சொல்லிக்கிட்டு இருந்தா... '

'ஸ்ரீ. இங்க வந்து உங்க அப்பாவ என்னன்னு கேளு' என்று உள்ளறையில் இருந்த ஸ்ரீமதியைக் கூப்பிட..

'டேய்.. நான் எங்கடா உன்ன திட்டினேன்... '

'பின்ன.. நான் செஞ்சதையெல்லாம் .. அம்மா செய்யற மாதிரியே இருக்குன்னு சொன்னியேப்பா... உனக்குத்தான் அம்மா செய்யறதே பிடிக்காதே...

Read more...

தமிழகத்தில் இது மழைக்காலம்...

November 8, 2009

தமிழகத்தில் பரவலாக மழை பொழிய ஆரம்பித்துவிட்டது....

அதுவும் சோ வென பெருமழையாய் பெய்யாமல், நசநசவென சிறு மழையாய் பொழிகிறது...

காலையில் எழுந்ததும் பொழியும் மழை, அலுவலகத்தில் இருக்கும்போது பொழியும் மழை, இதெல்லாம் நல்லாதான் இருக்குது.. ஆனா ஆபீஸ் போறப்போ பொழிய
ரமழைதான் நலலாயில்லை... சரி.. ஆசைப்படலாம், பேராசை படக்கூடாது....


மழையில நனைஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் குடிக்கற டீயோட ருசி... அதுக்கு ஈடு இணையில்லை... டீ இல்லன்னா... சூடா இட்லியோ, தோசையோ.... தொட்டுக்கொள்ள சட்னியோ, பொடியொ இல்லாம... பூண்ட கொஞ்சம் போல நசுக்கி, நிறைய மிளகாய்த்தூள், கொஞ்சூண்டு உப்பு போட்டு, எண்ணைய் விட்டு சாப்ட்டா.... சூப்பராக இருக்கும்....

மழைக்காலத்திற்கான ஒரே ஒரு யோசனை..

டூவீலரோ, காரோ... வண்டியில் போகும்போது speed ஆ போகாதீங்க... தவிர்க்க முடியாத சமயம் தவிர அவசரமா ஆபிஸ்க்கு போயே ஆகணும்னு இல்லை... மழையைக் காரணம் காட்டி தாராளமா permission போட்டுக்கலாம்... இந்தியாவில் இது சாத்தியமே...

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP