காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

தமிழகத்தில் இது மழைக்காலம்...

November 8, 2009

தமிழகத்தில் பரவலாக மழை பொழிய ஆரம்பித்துவிட்டது....

அதுவும் சோ வென பெருமழையாய் பெய்யாமல், நசநசவென சிறு மழையாய் பொழிகிறது...

காலையில் எழுந்ததும் பொழியும் மழை, அலுவலகத்தில் இருக்கும்போது பொழியும் மழை, இதெல்லாம் நல்லாதான் இருக்குது.. ஆனா ஆபீஸ் போறப்போ பொழிய
ரமழைதான் நலலாயில்லை... சரி.. ஆசைப்படலாம், பேராசை படக்கூடாது....

மழையில நனைஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் குடிக்கற டீயோட ருசி... அதுக்கு ஈடு இணையில்லை... டீ இல்லன்னா... சூடா இட்லியோ, தோசையோ.... தொட்டுக்கொள்ள சட்னியோ, பொடியொ இல்லாம... பூண்ட கொஞ்சம் போல நசுக்கி, நிறைய மிளகாய்த்தூள், கொஞ்சூண்டு உப்பு போட்டு, எண்ணைய் விட்டு சாப்ட்டா.... சூப்பராக இருக்கும்....

மழைக்காலத்திற்கான ஒரே ஒரு யோசனை..

டூவீலரோ, காரோ... வண்டியில் போகும்போது speed ஆ போகாதீங்க... தவிர்க்க முடியாத சமயம் தவிர அவசரமா ஆபிஸ்க்கு போயே ஆகணும்னு இல்லை... மழையைக் காரணம் காட்டி தாராளமா permission போட்டுக்கலாம்... இந்தியாவில் இது சாத்தியமே...

8 கருத்துகள்:

சிங்கக்குட்டி said...

//அவசரமா ஆபிஸ்க்கு போயே ஆகணும்னு இல்லை... மழையைக் காரணம் காட்டி தாராளமா permission போட்டுக்கலாம்//

ரொம்ப நல்ல எண்ணம் :-) அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பீர்கள் என்று நினைக்கிறன்.

சூடா இட்லியோ, தோசையோ மேட்டர் அருமை :-)

ஸ்வர்ணரேக்கா said...

//அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பீர்கள் என்று நினைக்கிறன்.//
இல்லை.. இல்லை.. பிரைவேட்டில் தான் வேலை... ஆனால் நாம் காலை ஆபீஸ்க்கு போகும் அவசரத்தில், விபத்து நேர்ந்துவிடக்கூடாதே என்று தான் அப்படி சொன்னேன்...

Sanjai Gandhi said...

//மழையில நனைஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் குடிக்கற டீயோட ருசி... அதுக்கு ஈடு இணையில்லை... டீ இல்லன்னா... சூடா இட்லியோ, தோசையோ.... தொட்டுக்கொள்ள சட்னியோ, பொடியொ இல்லாம... பூண்ட கொஞ்சம் போல நசுக்கி, நிறைய மிளகாய்த்தூள், கொஞ்சூண்டு உப்பு போட்டு, எண்ணைய் விட்டு சாப்ட்டா.... சூப்பராக இருக்கும்....//

வயித்தெரிச்சலைக் கிளப்புறதுல என்னா ஒரு சந்தோஷம்.. :(

R.Gopi said...

//ஸ்வர்ணரேக்கா

பிரமாதம்.... மழையின் வகைகளை சுட்டி காட்டியதற்கு ://காலையில் எழுந்ததும் பொழியும் மழை, அலுவலகத்தில் இருக்கும்போது பொழியும் மழை, இதெல்லாம் நல்லாதான் இருக்குது.. ஆனா ஆபீஸ் போறப்போ பொழியரமழைதான் நலலாயில்லை... சரி.. ஆசைப்படலாம், பேராசை படக்கூடாது.... //

இதுல‌ ஒரு முக்கிய‌மான‌ ம‌ழை காணுமே... அதுதான் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாம‌ழை". இது உங்க‌ லிஸ்ட்ல‌ இல்லையா??

//மழையில நனைஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் குடிக்கற டீயோட ருசி... அதுக்கு ஈடு இணையில்லை... டீ இல்லன்னா... சூடா இட்லியோ, தோசையோ.... தொட்டுக்கொள்ள சட்னியோ, பொடியொ இல்லாம... பூண்ட கொஞ்சம் போல நசுக்கி, நிறைய மிளகாய்த்தூள், கொஞ்சூண்டு உப்பு போட்டு, எண்ணைய் விட்டு சாப்ட்டா.... சூப்பராக இருக்கும்....//

இது என்ன‌ ரிவ‌ர்ஸ்ல‌ இருக்கு... சூடா டிஃப‌ன் சாப்பிட‌லாம்... டிஃபன் இல்லேன்னா, அட்லீஸ்ட் சூடா ஒரு டீயாவ‌து சாப்பிட‌லாம்னு சொல்வாங்க‌...

//டூவீலரோ, காரோ... வண்டியில் போகும்போது speed ஆ போகாதீங்க... தவிர்க்க முடியாத சமயம் தவிர அவசரமா ஆபிஸ்க்கு போயே ஆகணும்னு இல்லை... மழையைக் காரணம் காட்டி தாராளமா permission போட்டுக்கலாம்... இந்தியாவில் இது சாத்தியமே...//

ப்ரேக் ச‌ரியா பிடிக்காது... ஆக்ஸிடென்ட் ஆக‌ற‌துக்கு சான்ஸ‌ஸ் ஜாஸ்தின்னு சொல்ல‌ வரீங்க‌, ச‌ரியா...

ந‌ல்ல‌ உப‌யோக‌மான‌ ப‌திவு.... வாழ்த்துக்க‌ள் ஸ்வ‌ர்ண‌ரேக்கா....

☀நான் ஆதவன்☀ said...

லேபிள் கலக்கல் :)

//மழையில நனைஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் குடிக்கற டீயோட ருசி... அதுக்கு ஈடு இணையில்லை... டீ இல்லன்னா... சூடா இட்லியோ, தோசையோ.... தொட்டுக்கொள்ள சட்னியோ, பொடியொ இல்லாம... பூண்ட கொஞ்சம் போல நசுக்கி, நிறைய மிளகாய்த்தூள், கொஞ்சூண்டு உப்பு போட்டு, எண்ணைய் விட்டு சாப்ட்டா.... சூப்பராக இருக்கும்....//

அட ஏங்க வயித்தெறிச்சலை கிளப்புறீங்க. இங்க மழையும் அபூர்வம், எங்க மெஸ்ல இட்லி, தோசையும் அபூர்வம்.

ராமலக்ஷ்மி said...

கடைசியில் சொல்லியிருப்பது, மழைக்காலத்துக்கு அவசியமான யோசனை.

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க சஞ்சை காந்தி..

வயித்தெரிச்சலைக் கிளப்புறதுல என்னா ஒரு சந்தோஷம்

ஏதோ நம்மால முடிஞ்சது...

CS. Mohan Kumar said...

நல்லா எழுதுறீங்க. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்னு தோன வைத்தது. மழை கால தேநீர் super-தான்

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க

Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP