சீ.மு... சீ.பி..
November 26, 2009
சீனு என்று ஒரு நாய்க்குட்டி வளர்க்க ஆரம்பித்த பிறகு, என்னுடைய எண்ணங்களில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது... சீனுவிற்கு முன், சீனுவிற்கு பின்... என்ற என் எண்ணங்கள் இங்கே..
(ப்ளாக்ன்னு இருந்தாலும் இருந்துச்சு... அவங்க அவங்க வீட்டு நாய்க்குட்டி பத்தில்லாம் எழுதறாங்கன்னு நினைக்கறவங்க இதைஅவசியம் படிங்க.. அப்படில்லாம்.. ஒண்ணும் நினைக்காதவங்க.. அப்படியே கண்டினியு பண்ணுங்க...)
சீனுவிற்கு முன்... (சீ.மு)
- மருந்தையெல்லாம் முதல்ல நாய், முயல்ன்னு மிருகங்களுக்கு தந்து தான் டெஸ்ட் பண்ணுவாங்களாம் - பத்திரிக்கை செய்தி .... கரெக்ட்.. ஆறறிவுள்ள மனிதனுக்கு வேண்டிய மருந்துகளை இந்த மிருகங்களுக்கு தந்து டெஸ்ட் பண்ணவேண்டியது தான்...
- ரோட்ல இந்த நாய், ஆடு, மாடுல்லாம் ஏந்தான் திரியுதுங்களோ... ட்ராபிக் ஆது...
- அவர்கள் தெரு நாய்களுக்காக ஒரு இயக்கம் /அமைப்பு ந்டத்தறாங்களாம் - பத்திரிக்கை செய்தி.. ச்சே... நாய்க்கெல்லாம் இயக்கமா...? இதுக்கு நாலு பிள்ளைங்கள படிக்கவெச்சாலும் புண்ணியமா இருக்கும்...
- மனிதன் தன் அறிவால் யானை, மாடு போன்ற விலங்குகளை அடக்கியாள கற்றுக்கொண்டான்.. நமக்கு ஆறறிவு.. அதுக்கெல்லாம் அஞ்சு தானே...
- மனிதன் மட்டுமே சிரிக்கவும், சிந்திக்கவும் செய்கிறான்.. அதுவே அவன் ஆறாவது அறிவுக்கு சான்று - பள்ளிப்பாடம் - அட ஆமாம்ல
- மனுசன் இருக்கறதுக்கே இங்க இடமில்லையாம்.. இதுல இந்த நாய், ஆடு, மாடு வேற..
- மருந்தையெல்லாம் முதல்ல நாய், முயல்ன்னு மிருகங்களுக்கு தந்து தான் டெஸ்ட் பண்ணுவாங்களாம்... 'அடப்பாவிங்களா... அதெல்லாம் வலிக்குதுன்னு வாய்விட்டு சொல்லலின்னா.. உடனே அதுக்கு டெஸ்ட் பண்ணிடுவீங்களா... இதுக்கு எதுக்கு ஆறறிவு.... '
- ரோட்ல இந்த நாய், ஆடு, மாடுல்லாம் ஏந்தான் திரியுதுங்களோ... வண்டி ஏதும் ஏறினா என்னபண்ணுங்க... பாவம் வலிக்குதுன்னு சொல்லக்கூட முடியாது...
- அவர்கள் தெரு நாய்களுக்காக ஒரு இயக்கம் /அமைப்பு ந்டத்தறாங்களாம் - பத்திரிக்கை செய்தி.. - 'ஆஹா.. நல்ல வேலை செஞ்சாங்க... நம்ம சீனுவ நாம வளர்க்கிறோம்.. மத்த நாய்கள்லாம் பாவம்ல்ல... மனுசங்களுக்கு உதவ நிறையபேர் இருக்காங்க... பாவம் இந்த நாய்களுக்கு யார் இருக்கா...'
- மனிதன் தன் அறிவால் யானை, மாடு போன்ற விலங்குகளை அடக்கியாள கற்றுக்கொண்டான்.. இதுக்கு எதுக்கு தேவையில்லாம ஆறறிவு.... '
- மனிதன் மட்டுமே சிரிக்கவும், சிந்திக்கவும் செய்கிறான்.. அதுவே அவன் ஆறாவது அறிவுக்கு சான்று - பள்ளிப்பாடம் - என்ன பெரிய ஆறாவது அறிவு.. மற்ற உயிர்களுக்கும் வலிக்கும்ன்னு நினைக்காத மனிதனுக்கு இந்த credit வேறயா...
- மனிதர்களோடு மட்டும் இருக்கும் வாழ்க்கையில் என்ன இருக்கு... வாயில்லாத... ஆனால் அன்போடு இருக்கும் இந்த மிருகங்களோடு இருக்கும் வாழ்க்கை அருமை...
உண்மையா சொல்றேங்க... வீட்ல கண்டிப்பா ஒரு நாயோ, பூனையோ, அட்லிஸ்ட் ஒரு மீன் தொட்டியொ வைங்க... உங்களுக்கு மன அழுத்தம் இருக்கும் நாட்களில் அவை உங்கள் உற்ற தோழனாய் இருக்கும்... வீட்டில் சிறு குழந்தை, வயதானவர்கள் இருக்கிறார்களே என்று எண்ணவேண்டாம்... ஏனேனில் இன்று Pre.KG செல்லும் குழந்தைக்கு கூட மன அழுத்தம் உண்டு...
12 கருத்துகள்:
சீனுன்ற பேருக்கு பின்னாடி எதாவது உள்குத்து இருக்கா?
நீங்க சொன்ன (சீ.மு... சீ.பி...)ரெண்டுமே ரெம்ப சரி. எனக்கு பெட் னா ரெம்ப பயம். இருந்தாலும் என்னை மாத்திக்க முயற்சி பண்றேன்.
//வீட்ல கண்டிப்பா ஒரு நாயோ, பூனையோ, அட்லிஸ்ட் ஒரு மீன் தொட்டியொ வைங்க... உங்களுக்கு மன அழுத்தம் இருக்கும் நாட்களில் அவை உங்கள் உற்ற தோழனாய் இருக்கும்... வீட்டில் சிறு குழந்தை, வயதானவர்கள் இருக்கிறார்களே என்று எண்ணவேண்டாம்... ஏனேனில் இன்று Pre.KG செல்லும் குழந்தைக்கு கூட மன அழுத்தம் உண்டு... //
உண்மையான வார்த்தைகள்...
ஸ்வர்ணரேக்கா...
மிக நல்ல பதிவு... அதிலும் அந்த கடைசி பத்தி... ரொம்பவே நெகிழ்ச்சி...
வாங்க சுப.தமிழினியன்...
உள்குத்து, வெளிக்குத்துல்லாம் ஒண்ணும் கிடையாது....
நம்புங்க சாமி.. நம்புங்க
வாங்க தமிழ்...
//எனக்கு பெட்னா ரெம்ப பயம். இருந்தாலும் என்னை மாத்திக்க முயற்சி பண்றேன்.//
இந்த வார்த்தையை கேட்க எவ்வளவு சந்தோஷமாயிருக்கு..
கடைசி வரில கொஞ்சம் ஓவராபோய்ட்டமோன்னு நினைச்சேன்... அப்படி இல்லன்னு சொன்னதுக்கு கோபிக்கும், அகல்விளக்குக்கும் நன்றி...நன்றி...
நன்றாக உள்ளது உங்கள் பதிவு....
நல்ல பதிவு தோழி...
வாங்க மலிக்கா...
நன்றி.. அடிக்கடி வாங்க..
ஆமாம், உண்மை அன்பு வாயில்லா பிராணிகளிடம் தான் கிடைக்கும் ஸ்வர்ணரேக்கா. மன நிலையின் மாற்றங்களை நன்கு பதிந்திருக்கிறீர்கள்.
//மன நிலையின் மாற்றங்களை நன்கு பதிந்திருக்கிறீர்கள்//
தேங்ஸ் கவி...
Post a Comment