காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.
Showing posts with label பேட்டரி ஃபுல் ரீசார்ஜ். Show all posts
Showing posts with label பேட்டரி ஃபுல் ரீசார்ஜ். Show all posts

சித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்

October 19, 2011



பாலமலை என்றும், சித்தேஸ்வரன் கோவில் இருப்பதால் சித்தேஸ்வரன் மலை என்றும் சொல்லப்படும் அந்த மலை ஈரோடு மாவட்டம், பவானி அருகே (1/2 மணி நேரப் பயணம்) உள்ள குருவரெட்டியூர், ஊமாரெட்டியுர் அருகே உள்ளது.. இதை மலை என்று சொல்வதைக் காட்டிலும் மலைத்தொடர் என்று சொல்வதே சரி. மேட்டூர் அணையில் தேக்கப்படும் நீர் இந்த மலைத் தொடர்களின்  அரவணைப்பில் தான் இருக்கின்றது... குருவரெட்டியூரில் இறங்கி மலைக்கு எப்படி போகணும் என்று கேட்டாலே சொல்லிவிடுவார்கள்... அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் யாரையும் கேட்கவே வேண்டாம்.. கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று கொண்டிருப்பார்கள்...

வருடத்தில் புரட்டாசி மாத சனிக்கிழமைகள், (3வது வாரம் ரொம்ப விஷேஷம்), சித்திரை 1ம் தேதி, அமாவாசை போன்ற நாட்களிலேயே மக்கள் வருவார்கள்... மற்ற நாட்களில் ஆள் நடமாட்டமில்லாத, அடர்ந்த ஒரு வனமாக காட்சியளித்து நம்மை பயமுறுத்தும்..

அடிவார பிள்ளையார் கோவிலையும், அங்கே இருக்கும் சிவனையும் வணங்கிவிட்டு, படிகளில்லாத, கற்களும், பாறைகளுமாய் இருக்கும் அந்த தடத்தில் நடக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.. அவரவர் உடல் வலிமையை பொறுத்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறையோ, அல்லது 20 நிமிடங்களுக்கு ஒரு முறையோ சற்று உட்கார்ந்து, தண்ணீர் அருந்தி இளைப்பாறிவிட்டு பயணத்தை தொடரலாம்...நேரம் ஆக ஆக... அடர்ந்த காட்டுக்குள் நீங்கள் சென்று கொண்டிருப்பதை உணர்வீர்கள்.. கீழே கிராமங்களில் வெயில் வருவதையும் உங்களால் பார்க்க முடியும்..

இது தான் ஆரம்பம்

அப்படியே சென்று கொண்டிருந்தால், முதலில் வருவது வெத்தலைப்பாறை என்ற இடம்... பாறைகள் பார்ப்பதற்கு வெத்தலை போல இருக்காது.. ஆனா நல்ல நீநீநீ….நீளமாக இரண்டு, மூன்று பாறைகள் உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கு வசதியாக இருக்கும்... முன்பெல்லாம் மக்கள் அங்கே உட்கார்ந்து வெத்தலை போட்டுக் கொண்டு, சிரமபரிகாரம் செய்து கொண்டு பயணத்தை தொடர்வார்களாம்அதனால் வெத்தலைப்பாறை என்று பெயராம்

அடுத்து வருவது திம்மம் பொதி.. அங்கே சிமெண்டினால் கட்டப்பட்ட நல்ல அகலமான ஒரு தளம் இருக்கும்.. தானியங்களை காயவைக்கவும், பயணிகள் ஒய்வெடுப்பதற்கும்.. அங்கே 2, 3 கடைகளும் உண்டுசுக்கு காப்பி, டீ, கம்மங்கூழ், அங்கே விளையும் கொய்யா, மாதுளை, சீதாப்பழங்களையும் விற்பார்கள்…  பச்சை படிக்கட்டுகள் போன்ற விளைநிலங்கள், சினிமாவில் பார்த்திருக்கும் ஊட்டி எஸ்ட்டேடுகளைப் போன்ற அமைப்பை பார்க்குப் போதே தெரியும், நாம் திம்மம்பொதியை நெருங்கிட்டோம்ன்னு சொல்லும்..

இந்த இடத்தில் தான் சில வீடுகளை பார்க்க முடியும்.. அடிவாரத்திலிருந்து திம்மம்பொதிக்கு வர்றதுக்கு எங்களுக்கு 2 மணிநேரம் ஆச்சு.. ஒட்டுமொத்தமாக 2 மணிநேரத்திலேயே கோவிலை அடைந்துவிடுபவர்களும் இருக்கின்றார்கள்பொதுவில் மலை ஏற ஏற, கால்கள் கெஞ்சும்… 10 நிமிடங்களுக்கு ஒரு முறை உட்காரச் சொல்லி அழும்.. அதிலும் சின்ன குழந்தைங்கல்லாம்.. அப்பா.. கால் வலிக்குதுப்பா.. கொஞ்ச நேரம் உக்காரலாம்ப்பா.. என்று சொல்வார்கள்அவ்வளவு தாண்டா.. கோவில் வந்துருச்சுடா.. இப்படி போயி, அப்படி வந்தா ஆச்சு.. வா.. வா.. என்று இழுத்துக்கொண்டு போவார்கள்.. இத்தனைக்கும் 1 மலை கூட வந்திருக்கமாட்டார்கள்.. (பாலமலை 7 மலைகளை கொண்ட தொடர்).. பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும்.. பார்த்துக் கொண்டு மட்டும் இல்லாமல், எட்டி நடை போட்டால் தான் நாமும் சூரிய வெளிச்சம் மறையும் முன் வீடு வந்து சேரலாம்..

ஆனால் சூரிய வெளிச்சம் மறைந்த பின் ( மாலை 6, 7 மணிக்கு ) பயணத்தை ஆரம்பித்து, விடிவதற்குள் மலை இறங்கி வருபவர்கள் தான் அதிகம் இங்கேஅதை நினைத்தாலே சிலிர்க்கின்றது எனக்குபட்ட பகலில் மலை ஏறுவதில் கால்கள் தான் வலிக்குமே அன்றி, வேறு சிரமங்கள் இல்லை.. இரவில் ஏறுவதானால்அடேயப்பா…!!! ஆனால் இரவில் தான் அதிக கூட்டம் இருக்கின்றது.. டயர்களை கொளுத்திக் கொண்டும், டார்ச்சு லைட்டுகளை ஏந்திக்கொண்டும் சாரி சாரியாய் மக்கள்

அடுத்த இடம் பெரியகுளம்வருஷந்தோறும் வருபவர்கள், அடிவாரத்தில் ஏற ஆரம்பித்த பின் பெரியகுளம் வந்து தான் நீண்ட ஒய்வெடுப்பார்களாம்.. (அதிகபட்சமாய் 1/2 மணி நேரம்..) பெரியகுளத்தையும் தாண்டி வந்துகொண்டிருக்கையில் ஓரிடத்தில் பாறைகளுக்கிடையில் நீரோடை உண்டு.. அதில் தண்ணீர் எடுத்து கொண்டு, சர்வ சாதாரணமாய் போய்க்கொண்டிருப்பார்கள் மலைக்காரர்கள் என்ற உள்ளூர்வாசிகள்.. தண்ணி பாட்டிலையும், இட்லி, சாப்பாட்டு பொட்டலங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு செல்லும் நாம் தஸ்ஸு புஸ்ஸு என்று மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, தண்ணிக் குடம், மூங்கில் கட்டுகள், விற்பதற்கு பெரிய பெரிய மூட்டைகள் என்று மலைக்காரர்கள் தூக்கிக் கொண்டு போவதை பார்த்தாலே பக்குன்னு இருக்கும் நமக்கு…  

நாங்கள் பார்த்த போது வீடு கட்டுவதற்கு கருங்கல்லையும், சிமெண்ட்டு மூட்டைகளையும் சுமந்து கொண்டு போனார்கள்நல்லா ஸ்ட்ராங்கா இருக்காங்க என்று சொல்லிக்கொண்டாலும்ஒரு அவசர ஆபத்துக்கு கூட அவர்கள் இவ்வளவு பெரிய மலைத்தொடரை தாண்டித்தான் வரவேண்டும் என்பது ரொம்ப கொடுமையான விஷயமே!!!! இப்பொழுதும் பிரசவ வலி கண்டுவிட்டால், மூங்கிலில் தொட்டில் கட்டித்தான் அடிவாரம் வரை அழைத்து வர வேண்டுமாம்.. நினைத்தாலே மயங்கிவிழுந்துவிடுவோம் நாம்..


மலைத் தொடர்
இப்படியாக ஒருவழியாக இஷ்டப்பட்டு கஷ்ட்டப்பட்டு சித்தேஸ்வரரை தரிசித்தோம்... கோவில் சிறிது தான்.. அதிலும் ஒரு பக்கமே தடுப்புகள் உண்டு.. இன்னொறு பக்கம் சற்றே எட்டுப் பார்த்தால், கிடு கிடு பள்ளம்... கோவிலின் முன்புறம் நின்று பார்த்தால் குட்டியாக மேட்டூர் அணையும், அந்த கூண்டுகளில் இருந்து வரும் புகையும் தெரியும்... 

ஒருவழியாக சித்தேஸ்வரரை வணங்கியாச்சு.. ஏறது தான் கஷ்ட்டம்.. இறங்கறது சுலபம்ன்னு நினைச்சீங்க.... ம்ஹீம்... தப்பு... இறங்குவது தான் சிரமம்.. மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது.. ஆனால் கால்கள் நிற்காமல் இறங்கிக் கொண்டிருக்கவே சொல்லும்... தப்பித் தவறி நின்றால் நடுங்கும்... ஆனால் ஏறியதை விட வேகமாக இறங்கிவிட முடியும்... பத்திரமாய் இறங்கிவிட்டதற்கு அடிவார பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வீட்டுக்கு ஓடி வந்து விடலாம் சந்தோஷமாய்... ஏனெனில் சித்தேஸ்வரன் மலைக்கு செல்வது என்பது ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம் மட்டும் அல்ல, சற்றே சிரமமான பயணமும் கூட.. மனமென்னும் பேட்டரி ஃபுல் சார்ஜ் ஆகிவிட்டாலும், உடலில் உள்ள பேட்டரி  ரொம்ப கீழிறங்கிவிடும்... ரெண்டு நாட்களாகும் மீண்டும் சார்ஜ் ஏற... 

பலர் பக்தியின் காரணமாகவும், சிலர் உடலுக்கு ஒரு பயிற்சி என்று சொல்லிக்கொண்டும் செல்வார்கள்.. எது எப்படியோ.. ஓரளவு உடல் வலிமை உள்ளவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் சித்தேஸ்வரர் கோவில்...

Read more...

கோலங்கள்...

December 30, 2009

நோ.. இது முடிஞ்சு போன கோலங்கள் தொடரை பத்தின பதிவு இல்லை..

நிஜமான கோலங்கள் பத்தின பதிவு... ஏன்னா இது மார்கழி மாசமாச்சே.. (மார்கழி மாசம் முடியவே போகுதேன்னு ல்லாம் சொல்லப்படாது...)

மார்கழின்னாலே கோலம் தான்.. அதுவும் பெரிய பெரிய கோலம். நெளி கோலமோ, design கோலமோ, இல்ல ரங்கோலியோ.. எல்லாம் பெருசு பெருசா தான் போடணும்... அதுவும் design கோலம், ரங்கோலின்னா ஜாலிதான்.. அப்பத்தான் கலர் கலரா போடலாம். நெளி கோலம் கொஞ்சம் கஷ்ட்டம். ஏன்னா, ஒரு புள்ளி தப்பா போனாலும் சரியா வராது.. சட்டுன்னு போடறதுக்கு ரங்கோலி தான் என் சாய்ஸ்....

இதுல ரோம்ப இம்பார்ட்டன்ட் என்னன்னா.. கலர் பொடி மிக்ஸ் பண்றது தான்... ஏன்னா கடையில வாங்கற பொடி தூவறதுக்கு சரியா இருக்காது.. ஸோ.. மணல் கொஞ்சம், கோல மாவு கொஞ்சம்ன்னு மிக்ஸ் பண்ணா கரெக்ட்டா வரும்.. அப்படி மிக்ஸ் பண்றப்போ, இந்த அடர் கலர் மாற்றது பாக்க சூப்பராயிருக்கும்...

layout design போட்டதுக்கு அப்பறம், காம்பினேஷன் பாத்து கலர் குடுத்து, கொஞ்சம் கூட பிசிறில்லாம outline போட்டதுக்கு அப்பறம் பாத்தா, நாம நினைச்ச டிசைன் வந்திருக்கும்.. அப்ப அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.. இப்படி finishingல்லாம் நல்லா இருந்தாலும், opening தான் நல்லா இருக்காது ...

ஏன்னா கோலம் போட காலைல நடுராத்திரி 4.30 க்கே எந்திரிக்கணும்.. அதாவது விடியக் காலைல 5 மணிக்கே கோலம் போட ஆரம்பிச்சுடணும் ... 5.30 மணிக்கு போட்டால் கொசுக்கள் படையெடுத்து வந்து நம்மை கடிக்கும் அபாயம் இருப்பதாலும், 6 மணிக்கு போட்டால் வீட்டில் உள்ளோர் நம்மையே கடித்துக் குதறிவிடும் அபாயம் இருப்பதாலும் வேறு வழியே இல்லை...

இருந்தாலும் நான் ஒரு நாள் கோலம் போட்டால், வருடம் முழுவதும் போட்டதாய் அர்த்தம்ன்னு சொல்லி, இன்னிக்கி ஒரு நாள் நான் போட்ட கோலம் தான் இது..



இது போன வருஷம் போட்டது... (போட்டோவுக்கு போஸ்ல்லாம் இல்ல.. நானே போட்டது... )




நான் இன்னிக்கு ஒரு நாள் கஷ்ட்டப்பட்டு கோலம் போட்டறேன், மீதி நாள்ல்லாம் (வருஷம் முழுக்க) அதே மாதிரி போட்டுடு என்று பெருந்தன்மையாக அம்மாவிடம் சொல்லிவிட்டேன்....

எப்பூடி...!!!!!

Read more...

சீ.மு... சீ.பி..

November 26, 2009

சீனு என்று ஒரு நாய்க்குட்டி வளர்க்க ஆரம்பித்த பிறகு, என்னுடைய எண்ணங்களில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது... சீனுவிற்கு முன், சீனுவிற்கு பின்... என்ற என் எண்ணங்கள் இங்கே..

(ப்ளாக்ன்னு இருந்தாலும் இருந்துச்சு... அவங்க அவங்க வீட்டு நாய்க்குட்டி பத்தில்லாம் எழுதறாங்கன்னு நினைக்கறவங்க இதைஅவசியம் படிங்க.. அப்படில்லாம்.. ஒண்ணும் நினைக்காதவங்க.. அப்படியே கண்டினியு பண்ணுங்க...)

சீனுவிற்கு முன்... (சீ.மு)

  1. மருந்தையெல்லாம் முதல்ல நாய், முயல்ன்னு மிருகங்களுக்கு தந்து தான் டெஸ்ட் பண்ணுவாங்களாம் - பத்திரிக்கை செய்தி .... கரெக்ட்.. ஆறறிவுள்ள மனிதனுக்கு வேண்டிய மருந்துகளை இந்த மிருகங்களுக்கு தந்து டெஸ்ட் பண்ணவேண்டியது தான்...
  2. ரோட்ல இந்த நாய், ஆடு, மாடுல்லாம் ஏந்தான் திரியுதுங்களோ... ட்ராபிக் ஆது...
  3. அவர்கள் தெரு நாய்களுக்காக ஒரு இயக்கம் /அமைப்பு ந்டத்தறாங்களாம் - பத்திரிக்கை செய்தி.. ச்சே... நாய்க்கெல்லாம் இயக்கமா...? இதுக்கு நாலு பிள்ளைங்கள படிக்கவெச்சாலும் புண்ணியமா இருக்கும்...
  4. மனிதன் தன் அறிவால் யானை, மாடு போன்ற விலங்குகளை அடக்கியாள கற்றுக்கொண்டான்.. நமக்கு ஆறறிவு.. அதுக்கெல்லாம் அஞ்சு தானே...
  5. மனிதன் மட்டுமே சிரிக்கவும், சிந்திக்கவும் செய்கிறான்.. அதுவே அவன் ஆறாவது அறிவுக்கு சான்று - பள்ளிப்பாடம் - அட ஆமாம்ல
  6. மனுசன் இருக்கறதுக்கே இங்க இடமில்லையாம்.. இதுல இந்த நாய், ஆடு, மாடு வேற..
சீனுவிற்கு பின்... (சீ.பி)
  1. மருந்தையெல்லாம் முதல்ல நாய், முயல்ன்னு மிருகங்களுக்கு தந்து தான் டெஸ்ட் பண்ணுவாங்களாம்... 'அடப்பாவிங்களா... அதெல்லாம் வலிக்குதுன்னு வாய்விட்டு சொல்லலின்னா.. உடனே அதுக்கு டெஸ்ட் பண்ணிடுவீங்களா... இதுக்கு எதுக்கு ஆறறிவு.... '
  2. ரோட்ல இந்த நாய், ஆடு, மாடுல்லாம் ஏந்தான் திரியுதுங்களோ... வண்டி ஏதும் ஏறினா என்னபண்ணுங்க... பாவம் வலிக்குதுன்னு சொல்லக்கூட முடியாது...
  3. அவர்கள் தெரு நாய்களுக்காக ஒரு இயக்கம் /அமைப்பு ந்டத்தறாங்களாம் - பத்திரிக்கை செய்தி.. - 'ஆஹா.. நல்ல வேலை செஞ்சாங்க... நம்ம சீனுவ நாம வளர்க்கிறோம்.. மத்த நாய்கள்லாம் பாவம்ல்ல... மனுசங்களுக்கு உதவ நிறையபேர் இருக்காங்க... பாவம் இந்த நாய்களுக்கு யார் இருக்கா...'
  4. மனிதன் தன் அறிவால் யானை, மாடு போன்ற விலங்குகளை அடக்கியாள கற்றுக்கொண்டான்.. இதுக்கு எதுக்கு தேவையில்லாம ஆறறிவு.... '
  5. மனிதன் மட்டுமே சிரிக்கவும், சிந்திக்கவும் செய்கிறான்.. அதுவே அவன் ஆறாவது அறிவுக்கு சான்று - பள்ளிப்பாடம் - என்ன பெரிய ஆறாவது அறிவு.. மற்ற உயிர்களுக்கும் வலிக்கும்ன்னு நினைக்காத மனிதனுக்கு இந்த credit வேறயா...
  6. மனிதர்களோடு மட்டும் இருக்கும் வாழ்க்கையில் என்ன இருக்கு... வாயில்லாத... ஆனால் அன்போடு இருக்கும் இந்த மிருகங்களோடு இருக்கும் வாழ்க்கை அருமை...

உண்மையா சொல்றேங்க... வீட்ல கண்டிப்பா ஒரு நாயோ, பூனையோ, அட்லிஸ்ட் ஒரு மீன் தொட்டியொ வைங்க... உங்களுக்கு மன அழுத்தம் இருக்கும் நாட்களில் அவை உங்கள் உற்ற தோழனாய் இருக்கும்... வீட்டில் சிறு குழந்தை, வயதானவர்கள் இருக்கிறார்களே என்று எண்ணவேண்டாம்... ஏனேனில் இன்று Pre.KG செல்லும் குழந்தைக்கு கூட மன அழுத்தம் உண்டு...

Read more...

தமிழகத்தில் இது மழைக்காலம்...

November 8, 2009

தமிழகத்தில் பரவலாக மழை பொழிய ஆரம்பித்துவிட்டது....

அதுவும் சோ வென பெருமழையாய் பெய்யாமல், நசநசவென சிறு மழையாய் பொழிகிறது...

காலையில் எழுந்ததும் பொழியும் மழை, அலுவலகத்தில் இருக்கும்போது பொழியும் மழை, இதெல்லாம் நல்லாதான் இருக்குது.. ஆனா ஆபீஸ் போறப்போ பொழிய
ரமழைதான் நலலாயில்லை... சரி.. ஆசைப்படலாம், பேராசை படக்கூடாது....


மழையில நனைஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் குடிக்கற டீயோட ருசி... அதுக்கு ஈடு இணையில்லை... டீ இல்லன்னா... சூடா இட்லியோ, தோசையோ.... தொட்டுக்கொள்ள சட்னியோ, பொடியொ இல்லாம... பூண்ட கொஞ்சம் போல நசுக்கி, நிறைய மிளகாய்த்தூள், கொஞ்சூண்டு உப்பு போட்டு, எண்ணைய் விட்டு சாப்ட்டா.... சூப்பராக இருக்கும்....

மழைக்காலத்திற்கான ஒரே ஒரு யோசனை..

டூவீலரோ, காரோ... வண்டியில் போகும்போது speed ஆ போகாதீங்க... தவிர்க்க முடியாத சமயம் தவிர அவசரமா ஆபிஸ்க்கு போயே ஆகணும்னு இல்லை... மழையைக் காரணம் காட்டி தாராளமா permission போட்டுக்கலாம்... இந்தியாவில் இது சாத்தியமே...

Read more...

குற்றாலம் - குறுகியதோர் ஆனால் நிறைவானதோர் பயணம்...

August 17, 2009

போன வாரம் குற்றாலம் போயிருந்தோம்... சீசன் முடியர நேரமா இருந்தாலும் நல்லா என்ஜாய் செஞ்சோம்... முதல்முறையா அருவியில குளிக்க போனதால, எப்படி போகணும்னு தெரியாம நேரா அருவியில தலையவிட்டு, மூச்சுத்திணறி தலைதெறிக்க ஓடி வந்து விட்டோம்... அப்பறம் ஓரமா நின்னு கொஞ்சம் கொஞ்சமா தலையவிட்டு நல்லா குளிச்சோம்... அருவித் தண்ணீரின் சுவையும், குளிர்ச்சியும்... அப்ப்ப்பா...

அந்தக்கால மன்னர்கள் சிவபக்தியில் சிறந்தவர்கள். அருவியெங்கும் சிவலிங்களை செதுக்கியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் குளிக்கும் பகுதிக்கு மேல், ஒரு சிவலிங்கம் நன்றாக மேலெழுந்து நிற்கிறது. அதில் அருவிநீர் ஒரு கோடு போல் வழிந்துகொண்டே இருக்கிறது...சிவனுக்கு எந்நேரமும் அபிஷேகம் தான். சீசன் நன்றாக இருக்கும் சமயங்களில் இந்த சிவலிங்கம் தெரியாது என்று நினைக்கிறேன்...

அங்கே கிடைக்கும் வித்தியாசமான பழங்களில் ரிம்டம் என்று ஒரு பழம் உண்டு. ரிம்டம் பழம் என்றோ, ரம்டம் பழம் என்றோ சொன்னார்கள். நமக்குத்தான் பெயர் வைப்பதில் அலாதி இஷ்ட்டமாச்சே... (நாங்கள் மற்றவர்களுக்கு வைத்த பெயரை இங்கே காணவும்.) அந்த பழம் முள்ளம்பன்றியை போல் இருந்த்தால் அதற்கு முள்ளம்பன்றி பழம் என்று பெயர் வைத்தோம். அந்த முள்ளம்பன்றி தோலை நீக்கினால், உள்ளே ஜெல்லி போல் இருக்கிறது. குற்றாலத்தில் விளையும் பழமாச்சே... அந்த ஜெல்லியும் குளிர்ச்சியாகவே இருக்கிறது.

குற்றாலநாதர் ஆலயம் - அந்தக்கால மன்னர்களின் சிவபக்திக்கு இன்னோர் சாட்சி. அங்கே ஸ்தல விருட்சமாய் ஒரு பலாமரம் இருக்கிறது. அதற்கு குறும்பலாநாதர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த பலாமரம் ஒரு அருவியின் உயரத்திற்கு இருக்கிறது. அந்த பலாமரத்தின் அடியில் நின்றால் அருவியின் சப்தம் மிக துல்லியமாய் கேட்கிறது...

அதென்னவோ வர வர நம்ம பேட்டரி அடிக்கடி ரீசார்ஜ் ஆகிறது. அதிலும் குற்றாலமும் பாபநாசமும் சென்று வந்ததில் பேட்டரி ஃபுல் ரீசார்ஜ் ஆகிவிட்டது. பாபநாசம் பற்றி இன்னோர் பதிவில் சொல்கிறேன்...

Read more...

திருப்பதி - ஒரு Spiritual vacation

July 9, 2009

போன வாரம் திருப்பதி போயிருந்தேன்... அதை பத்தி எழுதணும்னா ஒரு பிளாக் ஃபுல்லா வேணும்... அதனால நான் ரசிச்ச சிலது மட்டும் இங்கே...

  • மலை ஏற்றப்போ (படி வழியா) மக்களின் நம்பிக்கைகளை, செய்கைகளை கண்டிப்பா சொல்லணும்.. ஒரு 5000 படி இருக்கும்.. எல்லா படிக்கும் மஞ்சளும், குங்குமமும் வெச்சுக்கிட்டே போவாங்க(எல்லாரும் இல்ல, வேண்டிக்கறவங்க மட்டும்)... படியில்லாத இடத்துல அங்க இருக்கற போஸ்ட் கம்பத்துக்கு கூட மஞ்சளும், குங்குமமும் வெச்சுக்கிட்டு போயிருப்பாங்க... அதே மாதிரி சிலர் எல்லா படிலயும் விளக்கு ஏத்திட்டு போவாங்க.. ஒருத்தர் படில சூடம் வெச்சுக்கிட்டு போக, இன்னொருத்தர் candleல அதை ஏத்திக்கிட்டே போவாங்க... மலை ஏறதே கஷ்டம், இதுல முட்டி போட்டு சிலர் ஏறுவாங்க...
  • மலை ஏற்றப்போ எனக்கு புடிச்ச இன்னோரு விசயம் தரிசன டிக்கெட் வாங்கற லய்னுக்கு பக்கத்துல இருக்கற கடைங்க... ஒரு 30 - 40 கடைங்க வரிசையா இருக்கும்.. எல்லா கடையும் ஒரே மாதிரி இருக்கும்.. ரெண்டே ரெண்டு கேஸ் அடுப்பு வெச்சுக்கிட்டு, அதுலயே மிளகாய் பஜ்ஜி, டீ, தோசை, இட்லி ன்னு பரபரப்பா வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருப்பாங்க...ஒட்டுமொத்த குடும்பமும் அந்த கடைல வேலை பாக்கும்.. இந்த கடைங்களை வேடிக்கை பாத்ததுல நேரம் போனதே தெரியல எனக்கு...
  • மேல் திருப்பதில (திருமலை) தேவஸ்தானம் சார்பா அன்னதானம் போடுவாங்க... பெரிய பெரிய ட்ராலில கொண்டு வந்து சுடச்சுட சாப்பாடு போடுவாங்க.. குழம்பு, ரசம் எல்லாமே ட்ராலில தான்...வெளி கடைல ஆர்டர் செஞ்சு வெய்ட் பண்ற நேரத்துல இங்க சுடச்சுட சாப்பாடு போட்டு ..இலைய இழுத்து நம்ம வெளிலயும் தள்ளிடுவாங்க...ருசியா இருக்குமோ இல்லியோ, பசிக்கு அப்படியே கப கபன்னு சாப்பாடு உள்ள போகும் பாருங்க... ஆஹா... அந்த சுவையே தனி தான் போங்க...
  • திருப்பதில தமிழ் படற பாடு இருக்கே... ரொம்ப கஷ்டங்க... அந்த ஊர் காரத்துக்கு கூட நம்ம கண்ல தண்ணி வராதுங்க ஆனா, தமிழ அவங்க படுத்தற பாட்ட பாத்தா கண்டிப்பா வருங்க... சில example..
    திருடர்கள் உள்ளவர் ஜாக்கிரதை
    இலவச வுணவு வழங்குமிடம்
  • சாமி பாத்துட்டு கீழ வரும்போது பஸ்ல வந்தோம்... கண்ணுக்கெட்டின வரை மனிதனின் காலடி படாத, பச்சை போர்வைகள்.... பாக்க கண் கோடி வேணும்.. ஒவ்வோரு திருப்பத்திலும், பஸ் டயர் கிரிச்சிடும் சத்தம் கூட அருமைங்க...
  • இன்னிக்கு போனோம் சாமி கும்பிட்டோம், நாளைக்கு திரும்பி வந்தோம்ன்னு இல்லாம, ட்ராவல்க்கு (போக, வர) ரெண்டு நாள், மலை ஏறதுக்கு ஒரு நாள், மேல் திருப்பதில ஒரு நாள், கீழ் திருப்பதில ஒரு நாள்ன்னு போய்ட்டு வந்தா, இந்த Spiritual vacation ஒரு அருமையான அனுபவங்க.... நம்ம battery அப்படியே ஃபுல் recharge தான்....

Read more...

சிட்டுக் குருவிகளின் flying ரேஸ்

June 29, 2009

சிட்டுக் குருவி... தற்போது அதிகம் காணக்கிடைக்காத, ஆனால் பாக்க பாக்க பரவசமூட்டும் ஒரு சின்ன உயிர்... நான் வாக்கிங் போறப்போ... ஒரு இருவது முப்பது குருவிங்க ஒன்னா கரண்ட் கம்பில உக்காந்து இருக்கும்... திடிர்னு எல்லாம் ஒன்னா கிளம்பி ஒரு வட்டம் அடிக்கும்... அப்பறம் திரும்பி வந்து அதே கம்பில உக்காந்துக்கும்.. வட்டம் அடிக்கிறதுன்னா சும்மா இல்லிங்க... விர்ன்னு நேரா போகும்.... அப்பறம் அப்படியே கீழ விழறாப்ல விழும்... அய்யோ.. விழுதேன்னு நினைக்கறப்போ... திருப்பி விர்ன்னு போகும்... இப்படி ஒரு நாலஞ்சு தரம் போகும்... சில சமயம் ஒரொர் குருவிங்க கூட்டத்தில பறக்காம கம்பிலயே உக்காந்துக்கும்.. அப்பறம் அடுத்த ரவுண்ட்ல திரும்பி சேந்துக்கும்...

உயர இருக்கும் கம்பில உக்காந்து இருக்கறதுனாலயும், ரொம்ப சின்ன சைஸா இருக்கறதுனாலயும் குட்டி குட்டி பூச்சிங்க மாதிரி தெரியும்... ஆனா இதை பாத்துட்டா அன்னைக்கு நாள் உற்சாகமாயிடுங்க...

எல்லோரும் வெய்ட் குறைக்கறதுக்கு, அன்றைய நாளை திட்டமிடறதுக்குன்னு வாக்கிங் போறாங்க... ஆனா... எனக்கென்னவோ இந்த சிட்டுக் குருவிகளின் flying ரேஸை பாக்கறதுக்காகவே டெய்லி வாக்கிங் போணும்னு தோணுது...

Read more...

சீனு என்றொரு நாய்க்குட்டி....

February 17, 2009

டேய் சீனு.. எங்கடா இருக்க.. வா வந்து பாலக்குடி... இப்படி என் அம்மா அழைப்பது சத்தியமா என்னை இல்லை.... எங்க நாய்க்குட்டிய... Labrador, Alsation, ராஜபாளையம் போல breedகளை சேர்ந்ததல்ல எங்கள் நாய்க்குட்டி... நாட்டு நாய் என்று சொல்லப்படும் சாதாரண வகையைச் சேர்ந்தது....

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்... கூப்பிடாமலும் வந்து நம்மை நக்கிவிட்டு , செல்லம் கொஞ்சிவிட்டு போவான்.... இரு கால்களிலும் துணியை பிடித்துக் கொண்டு, வாயினால் கிழிப்பது... 'சர்...' என்ற சப்தத்தோடு துணி கிழிவதை கேட்டு மீண்டும் கிழிப்பது.... நம்மிடம் துணியை தந்து விளையாட அழைப்பது...சுற்றி சுற்றி துரத்தினால்... tableக்கு கீழும், sofaக்கு அடியிலும் ஒளிந்து கொள்வது.... நாம் அந்தண்டை நகர்ந்தால் நம்மை நோக்கி ஓடிவருவது... சப்பனங்கால் போட்டு உட்கார்ந்தவுடன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டு நம்மை சாப்பிடவிடாமல் செய்வது....படுக்கை விரித்தால் நமக்கு முன் ஏறி படுத்துக்கொள்வது... பால் வாங்கவோ, அல்லது கீரை வாங்கவோ படி இறங்கினால், உடனே தானும் வருவது... வெளியில் இருந்து கொண்டு வரும் பைகளை மோப்பம் பிடித்து, அதைபிடித்து தொங்கிக் கொண்டே வருவது... என்று சீனுவின் சேட்டைகள் நீள்கின்றன....

Retired ஆனபின், தனிமையில் தவித்துக்கொண்டிருந்த என் அப்பாவிற்க்கு இப்போதெல்லாம். நன்றாக பொழுது போகிறது. எல்லாம் சீனுவின் கைங்கர்யம்....


குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள்... ஆனால் சில விஷயங்களில் குழந்தையும் நாய்க்குட்டியும் ஒன்று என்றே எனக்கு தோன்றுகிறது...தெய்வத்தையும் நாய்க்குட்டியையும் ஒப்பிடவில்லை நான்..

ஆனால் ஒரு குழந்தையின் இருப்பு எப்படி வீட்டில்ஒரு சூமூகமான நிலையைத் தருகிறதோ... அதேபோல் நாய்க்குட்டியும் வீட்டிற்க்குள் சமாதானத்தையும் உயிரோட்டத்தையும் கொண்டு வருகிறது...

பிள்ளைகளை வெளிநாட்டிலோ, வெளிமாநிலங்களிலோ வேலைக்கு அனுப்பிவிட்டு , தனிமையில் இருக்கும் பெற்றோர்க்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாகத் தாருங்கள்... முதலில் கடுமையாக ஆட்சேபிப்பார்கள்... ஒரு மாதம் கழித்து கேட்டுப்பாருங்கள்... தனிமை என்றால் என்னவென்று கேட்ப்பார்கள்....

Read more...

Body's language: Learn ur Body's Language

July 24, 2008

No doubt. U read it correctly. Its not body language, which u r exhibiting. Rather it is your body's language.

Is it amazing to u.? Haven't you heard your own body's language...

You may be unaware of your body's language... because it wont weep like a child, it wont pew like a puppy. But, it sneezes, it coughs, it dries and eventually it pains...

S. these are the most common body's language which we identify them as symptoms. Actually thro' these language (symptoms), your body speaks to you, it is crying like a baby to show you that there is a malfunction in your system.

Are you the kind of person who swallow tablets for headache, running nose, cough without Doctor's consultation. Then you are ignoring ur body's language. Not only that, you are suppressing it too.

In the first scene of 'Davinci Code' , the most popular novel by Dan Brown , the albino, while killing the Jacques Sauniere says that "Pain is good". Yes, what he said is correct. Pain is good. One and only thro' the pain, we came to know about the body malfunctioning. You may think that "Regular Cycle disturbance leads to pain. If there is no disturbance, then there is no pain. NOPE u r wrong. A swelling without pain is more harmful than a swell with pain"

It may be swelling, coughing, back pain or headache. Don't rush to a doctor when you experience that. Just understand the language and take care of yourself. Analyse what you did today or check out your own behaviour.

Find out the reasons and try to avoid that.

If its a head ache, then drink more water, avoid TV, take a walk in the evening breeze and grab a sound sleep. But dont put a tablet and indulge in sleep.

If its a running nose, enjoy that and leave that dont take tablets. After a week or four days it will be automatically finished.

Then take your own time in bathing. Enjoy that. Dont finish a shower in a hurry - burry. Dont always sit in a closet. Be with nature whenever u can.

Get well with your own body's language put a 'no entry' to your doctor...

Read more...

“See the glass as already broken” – a great stress buster

May 2, 2008

The catchy one liner from a management book grabs my attention 2day…
The page says “See the glass as already broken" i.e., treat everything as an object with an end…”

ya, that is true. Because, in due course of time we used to get pride with the small gadgets (like pens, ipods, mobiles, key chains and sometimes even kerchiefs) we have. Even though they r nothing to us, we used to pull a great effort to retain them. If in any case they are lost, we squall like anything. The sentiments and feelings we have with the non living gadgets play a greater part in the life. The childish behavior drags our endeavors. Instead, we should try to look each and every thing as an object having an end. If we develop that perspective, the gud time we spent will only be remembered at the end(of the object). As per the saying “change is the only constant”, we should cultivate the “broken glass” perspective to overcome the unwanted stress….

It seems that this is true not only with the lifeless companions but also with our friends and colleagues.

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP