காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

குற்றாலம் - குறுகியதோர் ஆனால் நிறைவானதோர் பயணம்...

August 17, 2009

போன வாரம் குற்றாலம் போயிருந்தோம்... சீசன் முடியர நேரமா இருந்தாலும் நல்லா என்ஜாய் செஞ்சோம்... முதல்முறையா அருவியில குளிக்க போனதால, எப்படி போகணும்னு தெரியாம நேரா அருவியில தலையவிட்டு, மூச்சுத்திணறி தலைதெறிக்க ஓடி வந்து விட்டோம்... அப்பறம் ஓரமா நின்னு கொஞ்சம் கொஞ்சமா தலையவிட்டு நல்லா குளிச்சோம்... அருவித் தண்ணீரின் சுவையும், குளிர்ச்சியும்... அப்ப்ப்பா...

அந்தக்கால மன்னர்கள் சிவபக்தியில் சிறந்தவர்கள். அருவியெங்கும் சிவலிங்களை செதுக்கியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் குளிக்கும் பகுதிக்கு மேல், ஒரு சிவலிங்கம் நன்றாக மேலெழுந்து நிற்கிறது. அதில் அருவிநீர் ஒரு கோடு போல் வழிந்துகொண்டே இருக்கிறது...சிவனுக்கு எந்நேரமும் அபிஷேகம் தான். சீசன் நன்றாக இருக்கும் சமயங்களில் இந்த சிவலிங்கம் தெரியாது என்று நினைக்கிறேன்...

அங்கே கிடைக்கும் வித்தியாசமான பழங்களில் ரிம்டம் என்று ஒரு பழம் உண்டு. ரிம்டம் பழம் என்றோ, ரம்டம் பழம் என்றோ சொன்னார்கள். நமக்குத்தான் பெயர் வைப்பதில் அலாதி இஷ்ட்டமாச்சே... (நாங்கள் மற்றவர்களுக்கு வைத்த பெயரை இங்கே காணவும்.) அந்த பழம் முள்ளம்பன்றியை போல் இருந்த்தால் அதற்கு முள்ளம்பன்றி பழம் என்று பெயர் வைத்தோம். அந்த முள்ளம்பன்றி தோலை நீக்கினால், உள்ளே ஜெல்லி போல் இருக்கிறது. குற்றாலத்தில் விளையும் பழமாச்சே... அந்த ஜெல்லியும் குளிர்ச்சியாகவே இருக்கிறது.

குற்றாலநாதர் ஆலயம் - அந்தக்கால மன்னர்களின் சிவபக்திக்கு இன்னோர் சாட்சி. அங்கே ஸ்தல விருட்சமாய் ஒரு பலாமரம் இருக்கிறது. அதற்கு குறும்பலாநாதர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த பலாமரம் ஒரு அருவியின் உயரத்திற்கு இருக்கிறது. அந்த பலாமரத்தின் அடியில் நின்றால் அருவியின் சப்தம் மிக துல்லியமாய் கேட்கிறது...

அதென்னவோ வர வர நம்ம பேட்டரி அடிக்கடி ரீசார்ஜ் ஆகிறது. அதிலும் குற்றாலமும் பாபநாசமும் சென்று வந்ததில் பேட்டரி ஃபுல் ரீசார்ஜ் ஆகிவிட்டது. பாபநாசம் பற்றி இன்னோர் பதிவில் சொல்கிறேன்...

10 கருத்துகள்:

சிங்கக்குட்டி said...

நல்லா எலுமிச்ச தேச்சு குளிசாச்சா :-)) சும்மா ...:-)) பதிவு நல்லா இருக்கு.

ஸ்வர்ணரேக்கா said...

எலுமிச்ச பழம் தேச்சு குளிக்கவா!!

நல்ல ஐடியாவா இருக்கே... அடுத்த வருஷம் கண்டிப்பா செய்யறேன்..

வருகைக்கும், பதிவுக்கும் நன்றி, தல...

நட்புடன் ஜமால் said...

முதல்முறையா (அருவியில) குளிக்க போனதால, எப்படி போகணும்னு தெரியாம நேரா அருவியில தலையவிட்டு, ]]


உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ...

;)

ஸ்வர்ணரேக்கா said...

ஜமால் அண்ணே.. உண்மைய டக்குன்னு கண்டுபிடிச்சிட்டீங்களே!!!

அடிக்கடி வாங்கண்ணே!!!

நட்புடன் ஜமால் said...

அடிக்கடி வாங்கண்ணே!!!]] வந்துடுவோம்ல

சிங்கக்குட்டி said...

//நல்ல ஐடியாவா இருக்கே... அடுத்த வருஷம் கண்டிப்பா செய்யறேன்// அது சரி வரும்போது "பிம் பிளிக்கா பிம்பி" ன்னு சொல்லிக்கிட்டு வராம இருந்தா சரி. திரும்பவும்...சும்ம்ம்ம்மா...:-))

புது பதிவ தேடிவந்தேன்..வந்துட்டு சும்மா போக கூடாதுல்ல..அதான் :-))

கவிநயா said...

குற்றாலம் போனதில்லை...

//அருவியெங்கும் சிவலிங்களை செதுக்கியுள்ளார்கள்.//

தெரியாத செய்திக்கும் படத்திற்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

நாங்களே குற்றாலம் போய் வந்த மாதிரி இருக்கிறது!
பாபநாசம் பதிவு எப்போது?

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

அடிக்கும் கத்திரி வெய்யிலில் குற்றாலப்பயணம் குதூகலமாய் இருந்தது,படிக்க!!!

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க ராம்மூர்த்தி..

//அடிக்கும் கத்திரி வெய்யிலில் குற்றாலப்பயணம் குதூகலமாய் இருந்தது,படிக்க!!!//

நன்றி....நன்றி...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP