காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

இறையாண்மை + தனிமனித உரிமை = இயலாமை...

May 8, 2010

26.11.08 அன்று மும்பையில் பலரை(166)க் கொன்ற கசாப்புக்கு தூக்காம்... அதுவும் உடனே நிறைவேறாதாம்... மேற்கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாமாம். ஜனாதிபதிக்கும் கருணை மனு போடலாமாம். அவனுக்கு, இல்லை அவருக்கு அதுக்கெல்லாம் உரிமை உண்டாம்.. இதற்கெல்லாம் இறையாண்மை, தனிமனித உரிமை என்று பெயராம்....

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கு கசாப்புக்கு உரிமை உண்டாம்.. ஆனால் அவனாலும், மற்றவர்களாலும் சுடப்பட்டவர்களுக்கு சாவதற்கு தான் உரிமை உண்டு போலும்... பிறந்தாலும் இந்தியத்திருநாட்டில் குடிமக்களாய் பிறக்கக்கூடாது போலிருக்கிறது...

அதேபோல் 2001ல் பார்லிமெண்ட் தாக்குதல் வழக்கில் பிடித்துவைத்திருக்கும் (ராஜ உபசாரங்கள் செய்யப்படும்) அப்சலுக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லையாம்...

தீவிரவாதிகளுக்கு, அதுவும் பேருக்கு ஒருத்தனை (தப்பு. தப்பு... ஒருத்தரை) பிடித்துவைத்துக்கொண்டு, நீதி, தனிமனித உரிமை என்ற பெயரிலும், இறையாண்மை என்ற பெயரிலும் நடக்கும் கூத்துக்கள், உலக அரங்கில் நமது இயலாமையையே காட்டுகின்றன...

உண்மையில் அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமோ.... ஆனால்.. அந்த வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் இயலாமை... இயலாமை... என்றே என் காதுகள் கேட்கின்றன...

----------------------------------------------------------------------------------------
பி.கு...

பதிவெழுதி சில மாதங்கள் ஆகிவிட்டாலும்.... இன்னும் என்னைத் தொடர்ந்து வந்து ஆதரவு தரும் எனது வாசகர் வட்டத்திற்கு நன்றி... நன்றி...
----------------------------------------------------------------------------------------

Read more...

இலங்கை பிரச்சனையில் நம் ராணுவ வாகனங்கள் தாக்கு..

May 3, 2009

கோவையில் பயிற்சி முடிந்து திரும்பிய ராணுவ வீரர்களை பெரியார் தி.க. - ம.தி.மு.க.வினர் தாக்கியுள்ளனர்... இலங்கை ராணுவத்துக்குத் தேவையான டேங்கர்கள், லாரிகள் மூலம் கோவை வழியே, கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாக நினைத்து பயிற்சி முடிந்து திரும்பிய ராணுவ வீரர்களை தாக்கியுள்ளனர்...

அடப்பாவிங்களா... உங்க அரசியல் ஸ்டண்டுக்கு ஒரு அளவில்லையா... ராணுவ வீரர்களை போய் அடிக்கறிங்களே... அப்படியே இருந்தாலும் ராணுவ வீரர்கள் என்ன செய்வார்கள்... தலைமை சொன்னதை தானே செய்வார்கள்...

உண்மையிலேயே உங்களுக்கு இலங்கை தமிழர் மீது பற்று இருந்தால் இந்திய அரசை வலியுறுத்துங்கள் அல்லது இலங்கை ராணுவ வீரர்களை போய் தாக்குங்கள்...அதைவிட்டு நம் ராணுவ வீரர்களிடமா உங்கள் அரசியல் ஸ்டண்டை வைத்துக்கொள்வது...

Read more...

தேர்தல்: திருவிழா... இல்லை இல்லை திரைப்படம்

May 2, 2009

தேர்தல் அறிவிப்பு, கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என்று ஐந்து கட்ட தேர்தல் திருவிழா அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது...

வோட்டு வாங்குவதற்காக கட்சிகளும், வேட்பாளர்களும் செய்யும் வேலைகள் நம்மை எரிச்சலின் உச்சிக்கும், விரக்தியின் விளிம்புக்கும் கொண்டு செல்கின்றன... எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கொள்ளும் பொதுஜனம் என்று தெரிந்து தான் கட்சிகள் இப்படி செய்கின்றன...

அறிக்கை என்ற பெயரில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக்கொள்வது.. கட்சி தேர்தல் அறிக்கை என்ற பெயரில் செய்யும் காமெடி... வேட்பாளரை ஜெயிக்க வைக்கவும், தோற்கடிக்கவும் செய்யும் உள்ளடி வேலைகள், பிரச்சாரம் என்ற பெயரில் தொகுதியை சுற்றி சுற்றி வருவது, என்று ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வே வருகின்றது....ஒரே ஒரு குறை தான்... ஹுரோயின் இல்லை, டூயட் பாட்டும் இல்லை..லேடி ஆர்டிஸ்ட்களே கம்மி தான்...

எல்லாவற்றையும் விட கட்சிகளின் தேர்தல் அறிக்கை தான் மிகப்பெரிய காமெடி. எப்படியும் எந்த கட்சியும் ஒன்றும் செய்யப்போவது இல்லை. 'ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தற' ங்கற மாதிரி... எந்தக்காலத்திலுமே செய்யவேபோகாத ஒரு விசயத்துக்கு எதுக்கு தான் அறிக்கையோ...


திரைப்படம் என்றால் கிளைமேக்ஸ் உண்டல்லவா..? வோட்டு எண்ணிக்கை முடிந்ததும் கூட்டணி மாறுவதும், பணம் குடுத்து சுயேட்சைகளை வாங்குவதும், பிரதமர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் அடித்துக்கொள்வதும் கண்டிப்பாய் உண்டு...

எது நடந்தாலும் சிரி(சகி)த்துக்கொண்டு, பேப்பர் படித்து, நியூஸ் பாத்து, கமெண்ட் மட்டும் அடித்து விட்டு, வோட்டு போடும் கடைமையை மட்டும் மறந்துவிடும் பொதுஜனம் இருக்கையில் படத்தின் வெற்றிக்கு குறைச்சலென்ன...

Read more...

தமிழக முதல்வரும் நரேஷ் குப்தாவும்

March 8, 2009

தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே தமிழக முதல்வரும் 80 வயது குழந்தையுமான கலைஞர் அவர்கள் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா IAS, தன்னை வந்து பார்க்கவில்லை, மரியாதை தரவில்லை.... என்று கையை காலை உதறிக்கொண்டு அழுகை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்....

தன்னிடமே கைநீட்டி (தன்னையும், தமிழகத்தையும், தமிழக அரசையும் பிரித்து பார்ப்பவரில்லை முதல்வர்...) சம்பளம் வாங்கும் ஓர் அதிகாரி.... தனக்கே மரியாதை தரவில்லை என்று சொல்கிறார்.... அய்யோ பாவம்...

அறிக்கையிலேயே இவ்வளவு காட்டம் என்றால்.... நேரில் எவ்வளவு pressure தருவாரோ....

தற்போது எரிகிற கொள்ளியில் ஏரத்தள்ளுவது போல, மருத்துவ முகாம்கள் நடத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளார் நரேஷ் குப்தா..... இன்னும் என்னென்ன செய்வாரோ... இன்னும் என்னென்ன வாங்கிக்கட்டி கொள்ளபோறாரோ....

பார்ப்பதற்க்கு மிகமிக சாதாரணமாய் இருந்து கொண்டு, சர்வல்லமை பொருந்திய தமிழக முதல்வரின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டும் நரேஷ் குப்தாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

Read more...

இந்த வாரம்!!! இலங்கைத் தமிழர் வாரம்!!!

October 29, 2008

அரசியலில் ஒவ்வொரு வாரமும் ஒரு special இருக்கும் . Sun TVயின் திரைப்படங்களைப் போல. அதில் இந்த வாரம் இலங்கைத் தமிழர் வாரம் போலிருக்கின்றது .

  • சென்னையில் மனித சங்கிலி போராட்டமாம்
  • ராமேஸ்வரத்தில் கண்டன பேரணியாம்!! அதைத் தொடர்ந்து சிலர் கைதாம் !!! அறிக்கையாம்!!!
  • latest ஆக அதில் நிதி திரட்டாம்!!! ஆளுக்கு 50,000மாம்!!! ஒரு நாள் சம்பளமாம்!!!

நிற்க... (படிப்பவர்கள் எழந்து நிற்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. விஷயம் அப்படி இருக்க, என்று அர்த்தம் )

இலங்கையில் அப்படி என்னதான் பிரச்சனை. எதற்காக இப்படி அடித்துக் கொள்கிறார்கள்?

நான் விசாரித்தவரையில் யாருக்கும் முழுசாய் தெரியவில்லை!!! உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்!!!

பிரச்சனை என்னவாயினும், அதை அரசியல் ஆக்கவே இங்கு பெரு முயற்சிகள்நடக்கின்றது...

ஒரு உதாரணம் இங்கே!!

MPக்களின் ராஜினாமா... யாருக்காகவோ தங்கள் பதவியை தானம் செய்யும் அளவிற்கு நம் MPக்கள் தியாக சீலர்கள் இல்லை... அதை அனுமதிக்கும் அளவிற்க்கு நம் முதல்வரும் இல்லை...

ஒருவேளை இன்னும் இரண்டு வாரக் கெடுமுடியவில்லை போலும்!!எப்படியும் அது இன்னும் 20 வருடங்களுக்காவது முடியாது...

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP