தேர்தல்: திருவிழா... இல்லை இல்லை திரைப்படம்
May 2, 2009
தேர்தல் அறிவிப்பு, கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என்று ஐந்து கட்ட தேர்தல் திருவிழா அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது...
வோட்டு வாங்குவதற்காக கட்சிகளும், வேட்பாளர்களும் செய்யும் வேலைகள் நம்மை எரிச்சலின் உச்சிக்கும், விரக்தியின் விளிம்புக்கும் கொண்டு செல்கின்றன... எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கொள்ளும் பொதுஜனம் என்று தெரிந்து தான் கட்சிகள் இப்படி செய்கின்றன...
அறிக்கை என்ற பெயரில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக்கொள்வது.. கட்சி தேர்தல் அறிக்கை என்ற பெயரில் செய்யும் காமெடி... வேட்பாளரை ஜெயிக்க வைக்கவும், தோற்கடிக்கவும் செய்யும் உள்ளடி வேலைகள், பிரச்சாரம் என்ற பெயரில் தொகுதியை சுற்றி சுற்றி வருவது, என்று ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வே வருகின்றது....ஒரே ஒரு குறை தான்... ஹுரோயின் இல்லை, டூயட் பாட்டும் இல்லை..லேடி ஆர்டிஸ்ட்களே கம்மி தான்...
எல்லாவற்றையும் விட கட்சிகளின் தேர்தல் அறிக்கை தான் மிகப்பெரிய காமெடி. எப்படியும் எந்த கட்சியும் ஒன்றும் செய்யப்போவது இல்லை. 'ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தற' ங்கற மாதிரி... எந்தக்காலத்திலுமே செய்யவேபோகாத ஒரு விசயத்துக்கு எதுக்கு தான் அறிக்கையோ...
திரைப்படம் என்றால் கிளைமேக்ஸ் உண்டல்லவா..? வோட்டு எண்ணிக்கை முடிந்ததும் கூட்டணி மாறுவதும், பணம் குடுத்து சுயேட்சைகளை வாங்குவதும், பிரதமர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் அடித்துக்கொள்வதும் கண்டிப்பாய் உண்டு...
எது நடந்தாலும் சிரி(சகி)த்துக்கொண்டு, பேப்பர் படித்து, நியூஸ் பாத்து, கமெண்ட் மட்டும் அடித்து விட்டு, வோட்டு போடும் கடைமையை மட்டும் மறந்துவிடும் பொதுஜனம் இருக்கையில் படத்தின் வெற்றிக்கு குறைச்சலென்ன...
2 கருத்துகள்:
அபாரமான அங்கதம் . படித்து விட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை. தயவு செய்து இது மாதிரி நிறைய எழுதுங்கள்
நன்றி பீமா அண்ணே...
கண்டிப்பா எழுதறேன்ணே...
Post a Comment