கோலங்கள்...
December 30, 2009
நோ.. இது முடிஞ்சு போன கோலங்கள் தொடரை பத்தின பதிவு இல்லை..
நிஜமான கோலங்கள் பத்தின பதிவு... ஏன்னா இது மார்கழி மாசமாச்சே.. (மார்கழி மாசம் முடியவே போகுதேன்னு ல்லாம் சொல்லப்படாது...)
மார்கழின்னாலே கோலம் தான்.. அதுவும் பெரிய பெரிய கோலம். நெளி கோலமோ, design கோலமோ, இல்ல ரங்கோலியோ.. எல்லாம் பெருசு பெருசா தான் போடணும்... அதுவும் design கோலம், ரங்கோலின்னா ஜாலிதான்.. அப்பத்தான் கலர் கலரா போடலாம். நெளி கோலம் கொஞ்சம் கஷ்ட்டம். ஏன்னா, ஒரு புள்ளி தப்பா போனாலும் சரியா வராது.. சட்டுன்னு போடறதுக்கு ரங்கோலி தான் என் சாய்ஸ்....
இதுல ரோம்ப இம்பார்ட்டன்ட் என்னன்னா.. கலர் பொடி மிக்ஸ் பண்றது தான்... ஏன்னா கடையில வாங்கற பொடி தூவறதுக்கு சரியா இருக்காது.. ஸோ.. மணல் கொஞ்சம், கோல மாவு கொஞ்சம்ன்னு மிக்ஸ் பண்ணா கரெக்ட்டா வரும்.. அப்படி மிக்ஸ் பண்றப்போ, இந்த அடர் கலர் மாற்றது பாக்க சூப்பராயிருக்கும்...
layout design போட்டதுக்கு அப்பறம், காம்பினேஷன் பாத்து கலர் குடுத்து, கொஞ்சம் கூட பிசிறில்லாம outline போட்டதுக்கு அப்பறம் பாத்தா, நாம நினைச்ச டிசைன் வந்திருக்கும்.. அப்ப அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.. இப்படி finishingல்லாம் நல்லா இருந்தாலும், opening தான் நல்லா இருக்காது ...
ஏன்னா கோலம் போட காலைல நடுராத்திரி 4.30 க்கே எந்திரிக்கணும்.. அதாவது விடியக் காலைல 5 மணிக்கே கோலம் போட ஆரம்பிச்சுடணும் ... 5.30 மணிக்கு போட்டால் கொசுக்கள் படையெடுத்து வந்து நம்மை கடிக்கும் அபாயம் இருப்பதாலும், 6 மணிக்கு போட்டால் வீட்டில் உள்ளோர் நம்மையே கடித்துக் குதறிவிடும் அபாயம் இருப்பதாலும் வேறு வழியே இல்லை...
இருந்தாலும் நான் ஒரு நாள் கோலம் போட்டால், வருடம் முழுவதும் போட்டதாய் அர்த்தம்ன்னு சொல்லி, இன்னிக்கி ஒரு நாள் நான் போட்ட கோலம் தான் இது..
இது போன வருஷம் போட்டது... (போட்டோவுக்கு போஸ்ல்லாம் இல்ல.. நானே போட்டது... )
நான் இன்னிக்கு ஒரு நாள் கஷ்ட்டப்பட்டு கோலம் போட்டறேன், மீதி நாள்ல்லாம் (வருஷம் முழுக்க) அதே மாதிரி போட்டுடு என்று பெருந்தன்மையாக அம்மாவிடம் சொல்லிவிட்டேன்....
எப்பூடி...!!!!!
10 கருத்துகள்:
நான் கூட “கோலங்கள்” சீரியல் பத்தி ஒரு டெர்ரர் பதிவா இருக்கும்னு நெனச்சு எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தேன்... நல்ல வேளை... அது வேறு, இது வேறு... இதுக்காகவே ஒரு ஸ்பெஷல் நன்றி ஸ்வர்ணரேக்கா......
//நான் ஒரு நாள் கோலம் போட்டால், வருடம் முழுவதும் போட்டதாய் அர்த்தம்ன்னு சொல்லி, இன்னிக்கி ஒரு நாள் நான் போட்ட கோலம் தான் இது..//
நான் ஒரு நாள் கோலம் போட்டா, அந்த வருஷம் முழுக்க போட்ட மாதிரி... ஹா...ஹா...ஹா...
கோலங்கள் எல்லாம் நீங்களே போட்டதுன்னு சொல்லிட்டீங்க... வாழ்த்துக்கள்....
(பின்குறிப்பு : என்னோட மார்கழி பஜனை பாடல் : மார்கழி பொங்கல், மடி நிறைய பொங்கல், சுடச்சுட பொங்கல், சூடான பொங்கல்...)
வாங்க கோபி...
//என்னோட மார்கழி பஜனை பாடல் : மார்கழி பொங்கல், மடி நிறைய பொங்கல், சுடச்சுட பொங்கல், சூடான பொங்கல்...//
ஆஹா... இதெல்லாம் நெனச்சாலே நாக்குல நீர் ஊறுதே..
அருமையான கோலங்கள். கோலம் போடும் தமிழ் பண்பாடு தாங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை காப்பாற்றப் படும் என இப்போது உறுதியாக நம்புகிறேன் :)
இடுகை ரொம்ப நல்லா இருக்கு ஸ்வர்ணரேகா.
என் அக்கா இப்படித்தான் டைரியில் எல்லாம் கலர்பொடி கலக்கும் விதத்தையும், அதில் வரும் புது கலர்கள் பற்றியும் குறித்து வைப்பார்கள், அதுவும் பொங்கல், வருட பிறப்பு சிறப்பு கோலம் என்றால், அன்று முழுவதும் "காலை தூக்கி தோளில் போட்டுகொண்டு" நடக்க விட்டு விடுவார், யாரும் மிதிக்க கூடாதாம் (தெரு முழுவதும் கோலம் இருந்தால் எப்படி வீட்டிற்க்குள் போவது).
நல்ல இடுகை, புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிகு: உங்க பில்டப் எல்லாம் படிக்கும் போது, அட! ஸ்வர்ணரேகா ஒரு "சூப்பர் ரங்கோலி" கோலத்த போட்டு படத்த கொடுக்க போறாங்கன்னு நினைத்தால், என்ன இது? ஒரு ஒன்பது புள்ளி கோலம் ஒரு பூ கோலம்னு இத போட "விடியக் காலைல 5 மணிக்கே" என்பது கொஞ்சம் ஓவர்...:-)
கோலங்கள் அழகா இருக்கு, நீங்க போட்டதுன்னாலுமே... :)
(ச்சும்மா :)
எனக்கும் கோலம் போட ரொம்பப் பிடிக்கும்.
பகிர்தலுக்கு நன்றி ஸ்வர்ணரேக்கா.
வாங்க பீமா...
//தமிழ் பண்பாடு தாங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை காப்பாற்றப் படும் என இப்போது உறுதியாக நம்புகிறேன்//
அப்பாடா.. நீங்களாவது நம்புறிங்களே... ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி..
(எவ்வளவோ செஞ்சிட்டோம்.. இத செய்ய மாட்டமா..)
வாங்க சிங்கக்குட்டி...
//உங்க பில்டப் கொஞ்சம் ஓவர்...//
நீங்க ஒரு 'வில்லேஜ் விஞ்ஞானி' அண்ணே.. இப்படி பொசுக்குன்னு உண்மையை கண்டுபிடிச்சுட்டீங்களே...
வாங்க கவி..
//கோலங்கள் அழகா இருக்கு, நீங்க போட்டதுன்னாலுமே... //
ஸ்வர்ணரேக்கா போட்டாலே அது அழகாயிடும்ல்ல... (கொஞ்சம் ஓவராதான் போறமோ...???)
புத்தாண்டு வாழ்த்துக்கள் பா...
அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் !!!
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
ength kalathula..summa achu vachu kolam potruvanga mathiella... namella kaliyella enthiruchu kolam podurathu...athu oru thani sugam theri...kalr kotukum pathu.... namairukura santhosam...cha athu chance yae ella.... Thariyella potrukura kolathula.... vandikuda etha manacea varathu....
Post a Comment