காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

பார்க்க / கேட்க பிடிக்காத பாடல்கள்

September 8, 2011

பாடல்கள் --- திரைப்படத்திலோ, விளம்பரங்களிலோ வரும் பாடல்கள் உண்மையில் நமக்கு உற்சாகம் தரக்கூடியவையே… பாடல் வரிகள், இசை, குரல், அதை காட்சி படுத்திய விதம் என பார்கும்போதும், கேட்கும் போதும் நம்மை வசியப்படுத்துபவை, உற்சாகப் படுத்துபவை....  


கர்நாடக சங்கித பாடல்களும், பிற மொழிப்பாடல்களும் புரியாததினால் வரிகளை பற்றி கவலையில்லை.. காதுக்கு இனிமையான இசை இருந்தால் சரி என்பதே என் எண்ணம்...


இதில் சில பாடல்கள் உண்டு.. கேட்கவும் சகிக்காது, பார்க்கவும் தேறாது… அத்தகைய பாடல்களை  பற்றியதல்ல இப்பதிவு…  ஏதோ ஒன்று நன்றாக இருக்கும்.. இன்னோரு வகையில் சொதப்பியிருப்பார்கள்… பெரும்பாலும் படமாக்கப்பட்ட விதம் தான் நம்மை படுத்தியெடுக்கும்.. அந்த சில பாடல்கள்…

1.   1. யாரடி நீ மோகினி படத்தில் வரும் – எங்கேயோ பார்த்த மயக்கம் பாடல்…
  எனக்கு பிடித்த நயன்தாரா, சூடானேன், சுளுக்கெடுத்துருவேன் என்றேல்லாம் அதிகம் பேசாத, சாதாரண தனுஷ், பல பாடல்களில் ஏற்கெனவே எடுத்திருந்தாலும், அலுக்காத சீன்ஸ், (கதாநாயகி அறியாமல், அவள் பின்னாடியே போகும் கதாநாயகன்), நல்ல இசை என்று இருந்தாலும், அந்த குரல் இருக்கிறதே..அடேயப்பா… உதித் நாராயணனாம்.. ஈயத்தை காய்ச்சி, சரி.. ஈயம் என்னன்னு நமக்கு தான் தெரியாதே.. கொதிக்கவெச்ச தண்ணிய எடுத்து காதில் ஊற்றிக்கொண்டதைப் போல் இருக்கும்.. வால்யூமுக்கும், மியூட்டுக்கும் இடையே கரோக்கியை கண்டுபிடித்தவன் வாழ்க என்றே சொல்ல வைக்கும் பாடல்.

அருமையான பாடல் வரிகள், எஸ்.பி.பியின் குரல் எல்லாம் நல்லாதான் இருக்கும், ஆனால் அஜீத்தின் வாயசைப்பும், காட்சியமைப்பும் சகிக்காது.. ஸ்கூல்ல பிள்ளைங்க எக்ஸரசைஸ் செய்யற மாதிரியே இருக்கும்.. ஆனால் கேட்க கேட்க திகட்டாத பாடல் இது… 

அருமையான மெலடி (தமிழ்ல்ல எப்படி சொல்றது இதை!!!) பாடல்.. ஆனால் படு மொக்கையாக படமாக்கியிருப்பார்கள்.. அதிலும் விஜய் தலைமுடி… ஸ்ப்பா… கொண்ணுட்டீங்கண்ணா!!! அனுஷ்க்காவுக்கு ஒரு கேவலமான டிரஸ் வேற..விஷய், அனுஷ்க்கா காம்பினேஷனுக்கு நல்ல சீன்ஸ் வெச்சிருக்கலாம்.. ப்ச்சு… ஆனா ரேடியோல, செல்லுல கேட்பதற்கு நல்ல பாடல்…


சோக கீதம் தான்.. கேட்க நல்லாயிருந்தாலும், பார்க்க அவ்வளவா பிடிக்காது.. ஏன்னு சொல்லத்தெரியல..


5.      5.  புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படம் – மலர்களே
பாம்பே ஜெயஸ்ரீயின் மயக்கும் குரல்… வால்யூம் அதிகமா வெச்சு கண்ணை மூடி கண்ணாபின்னான்னு ரசிக்கலாம்… வரிகளும், இசைன்னு எல்லாமே டாப் டக்கரா இருக்கும்... ஆனால் படமாக்கப்பட்ட விதம் தான்... ம்ஹூம்…

இன்னும் நிறைய இருக்கு இந்த லிஸ்ட்டுல... 


14 கருத்துகள்:

middleclassmadhavi said...

ரொம்ப நாளா ஆளையே காணோம், வந்தவுடன் பிடிக்காத பாடல்களா?!
:-))

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க மாதவி..

ஆமாங்க.. சமீபத்துல யாரடி நீ மோகினி பாட்டு பாத்து கடுப்பாகி, பதிவு போடற அளவுக்கு வந்துடுச்சு.... ஹி.. ஹி..

தக்குடு said...

'ரன்' படத்துல 'பருவாயில்லை பருவாயில்லை'னு காந்தக்குரல்ல உதித் நாராயணன் பாடர்தே ஒரு அழகு தான் ...:PP

middleclassmadhavi said...

வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_30.html -ல் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்

Rizi said...

நல்ல தெரிவுகள்..

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க தக்குடு..

காந்தக்குரலா.. ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு...

வாங்க மாதவி..
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க...

// நடுவில் காணாமல் போயிருந்த(!)//
-- ரசித்தேன்.. பாருங்க இனிமே எப்படி எழுதறேன்னு..

வாங்க raazi..
பின்னூட்டத்திற்கும், வாசகரானதுக்கும் நன்றி...

ரிஷபன் said...

பிடித்த பாடல்கள் பற்றி எழுதுபவர்கள் மத்தியில் வித்தியாசமாய் படமாக்கிய விதம் பிடிக்கல என்று பதிவிட்டது சுவாரசியம்.
சில பாடல்களைக் கேட்கும்போது மனசுக்குள் வரும் காட்சிகள் பட்த்தில் அமையாது போனால் ரொம்ப வருத்தமாகும்.
சரி.. கேட்போம்.. பார்க்கவேணாம்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்..

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க ரிஷபன்..

//கேட்போம்.. பார்க்கவேணாம்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்..//

சரியாச் சொன்னீங்க...

அம்பாளடியாள் said...

//கேட்போம்.. பார்க்கவேணாம்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்..//

இந்த விஷயம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது .மிக்க நன்றி சகோதரி
பகிர்வுக்கு .....வாழ்த்துக்கள் மென்மேலும் எழுதுங்க .

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க அம்பாளடியாள்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க ஆதி...

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..நன்றி...

Anonymous said...

இதுவும் ரசிக்கும் படியாதான் இருக்கு தொடரட்டும் இன்னும் பிடிக்காத பாடல்கள் லிஸ்ட். வாழ்த்துக்கள்.

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க கோவை ரவி...

முதல் வருகைக்கு நன்றி...

/இதுவும் ரசிக்கும் படியாதான் இருக்கு தொடரட்டும//

நன்றிகள் பல...

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்... ரசனையை ரசித்தேன்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்...

நன்றி... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

Once again :-

1. Visit : http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_28.html வாழ்த்துக்கள்...

2. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP