ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no peace of mindன்னு, சிவாஜி பாடறமாதிரி,100 இருந்தும் channelகள் இருந்தும், சிலசமயம் ஒரு சேனல்லையும் பாக்கறதுக்கு ஒன்னியும் உருப்படியாக இருக்காது.
எல்லா சேனலையும் ஒரு ஓட்டு ஓட்டிட்டு, கடைசில பாத்து பாத்து புளிச்சுப்போன ஒரு பாட்டையே, திரும்ப பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படும். இந்த மாதிரி இருக்கப்போ ஒரு நாள், Apocalyptoங்கற படத்தை பாத்தேன். ஒரு சீன் பாத்ததுமே டர் ஆகி அடுத்த சேனலுக்கு ஓடிப்போயிட்டேன்….(படத்துல எல்லாரும் ஆதிவாசி கெட்டப்புல இல்ல இருந்தாங்க)
ஆனா அடுத்த ரவுண்டுல, அந்த சேனலை விட்டு நம்ம ரிமோட்டு நகரமாட்டேன்னு சொல்லிடுச்சு..(அத ரொம்ப தொந்திரவு செஞ்சிட்டேன் போல..) சரி நம்ம ரிமோட்டாண்டவர் சொன்னாரேன்னு அந்த படத்த பாக்க ஆரம்பிச்சேன்… அருமை, அருமை அருமையோ அருமைங்க… ஆனா வன்முறையோ, வன்முறைங்க.
கதை
மாயர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு நாடோடிக்கூட்டம் இன்னோரு நாடோடிக்கூட்டத்தினால் எப்படி அழிக்கப்படுகிறது என்பதே கதை…
இந்த ஒரு வரி கதையை எவ்வளவு நேர்த்தியா சொல்லமுடியுமோ, அவ்வளவு நேர்த்தியா சொல்லியிருக்காங்க.
திரைக்கதை
ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், தாங்கள் இருக்கும் நிலப்பகுதியை ஆண்டுகொண்டும் இருக்கிறார்கள் ஒரு நாடோடிக்கூட்டத்தினர். அப்போது அவ்வழியே போவதற்கு இன்னோரு கூட்டம் அனுமதி கேட்கிறது.. அனுமதி வழங்கிவிட்டு, ஹீரோவின் தந்தை ஹீரோவிடம் சொல்கிறார், இப்போது இங்கே பார்த்ததை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று. ஏனெனில், அவர்கள் கண்களில் பயம் தெரிகிறது, அது ஒரு வியாதி, எல்லோருக்கும் தொற்றிக்கொள்ளும் என்று சொல்கிறார்.
அடுத்த நாள் காலையிலேயே. இவர்கள் வீடுகளுக்கு தீவைத்து, ஆட்களை கொலை செய்கிறது ஒரு கூட்டம். இந்த களேபரத்தில் ஹீரோ, தனது கர்ப்பிணி மனைவியையும், குழந்தையையும் ஒரு ஆழமான குழிக்குள் விட்டு விடுகிறார். சண்டைக்கு பின் மீதமிருப்பவர்களை கைதிகளாக பிடித்துக்கொண்டும் போகிறது அந்த கூட்டம். கைதிகள் எப்படி கொண்டு செல்லப்படுகிறார்கள் தெரியுமா? கைதிகளின் கைகளையும், கழுத்தையும் மூங்கில்களோடு சேர்த்து கட்டிவிடுகிறார்கள்.
ஒரு நீண்ட மூங்கிலில் 4,5 கைதிகள். அப்படியே நடைபயணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான். ஒருத்தர் தவறிவிழுந்தாலும், அடுத்தவரும் சேர்ந்து விழவேண்டியதுதான். இப்படி நடக்கறதே கஷ்ட்டம் அதுல ஒரு காட்டாற்றை வேறு கடக்கின்றார்கள். அப்பவே நமக்கு தெரிஞ்சிடுது இன்னும் எவ்வளவோ இருக்குன்னு…
பெண்களை ஏலம்விட்டபின், ஆண்களை புளு கலர் சாயம் பூசி, பலிகொடுக்க அழைத்துச்செல்கிறார்கள். ஹீரோவின் முறை வரும்போது, கிரகணம் ஏற்பட தப்பிக்கிறார் (தற்காலிகமாகத்தான்).
 |
| இவர் தான் ஹீரோ |
அப்பறம் அப்படி இப்பிடின்னு தப்பிச்சு வந்து தன் குடும்பத்தை மீட்பது தான் கதை. (எல்லாத்தையும் சொல்லிட்டா படம் பாக்கறப்போ நல்லா இருக்காதுங்க)
டச்சிங் சீன்ஸ்
கைதிகளான பின், எல்லோரும் என்னாகுமோ ஏதாகுமோ என்று கவலைப்படும் போது, ஹீரோ மழை பெய்யக்கூடாது என்று வேண்டிக்கொள்வது.
குழிக்குள் இருந்தாலும் மனதைரியத்தை காட்டும், ஹீரோயினும் அவள் குழந்தையும்.
வன்முறை சீன்ஸ்
கைதிகளின் வெட்டியெடுக்கப்பட்ட இருதயத்தை சட்டியில் சுடுவது. அதைவிடக் கொடுமை அந்த சாம்பலை பெண்கள் குழந்தைகளுக்கு பூசுவது.. அடிங்க....
மீதி கைதிகளை இந்த இடத்தை தாண்டி உங்க ஊர் இருக்குன்னு சொல்லி ஓடவிட்டு சாகடிக்கறது.
--- இவ்வளவு வன்முறை இருந்தாலும் விடாமல் படத்தை பார்க்க செய்யும் திரைக்கதை. Making of a film ன்னு ஒண்ணு பாக்கனும்ன்னா அது கண்டிப்பா இந்த படத்தோட making தான்.
படத்தோடு கண்ணாபின்னான்னு ஒன்றிவிடுகிறோமா நடிகர்களை வேறு costumeல் நம்மால் நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.
 |
| இவர் வில்லன் |
 |
| இவர் தான் வில்லனாம் |
ஒரே ஒரு எரிச்சல். பில்லா படத்துல அஜித் நடையோ நடைன்னு நடப்பாரே, அந்த மாதிரி இந்த ஹீரோ ஓடறார், ஓடறார், காட்டின் எல்லைக்கே ஓடுகிறார். இந்த படத்துல பாதி சம்பளம் உங்க டிரஸ்காக (ஹா.. ஹா..), மீதி சம்பளம் நீங்க ஓடறதுக்குன்னு டைரடக்டர் முன்னாடியே சொல்லிருப்பாரு போல…
வன்முறை காட்சிகளெல்லாம் எனக்கு மேட்டரே இல்லன்னு சொல்றவங்க, இந்த படத்தை மிஸ் பண்ணவேண்டாம்…
Apocalypto - ஆயிரம் இருந்தும் வன்முறை இருந்தும் ஒரு அருமையான படம்.