காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

உதிரிப்பூக்கள்

August 14, 2010

மும்பை கப்பல் விபத்து

----------------------------

மும்பை துறைமுகத்தில் இரு கப்பல்கள் மோதல்... 60 - 70 டிகிரில சாஞ்சு நிக்குது MSC Chitra.... எப்படித்தான் இப்படி சாஞ்சு நிக்கற கப்பல நிப்பாட்டுவாங்களோ!!!!

துறைமுகத்துக்கு இவ்ளோ பக்கத்துல வந்து ரெண்டு கப்பலும் மோதிக்கிட்டதால். இந்த கடல் நீரை தான் BARC (Baba Automic Research Centre) யூஸ் பண்ணுவதால், மும்பை துறைமுகத்தை முடக்குவதால்.... கொஞ்சம் டவுட்டாயிருக்கு....

எது எப்படியோ... அந்த இரு கப்பல் நிறுவனங்களும் நஷ்ட ஈடு தரவேண்டியதில்லை... இது இந்தியா தானே!!! அமெரிக்கா அல்லவே!!!!(இந்த போட்டோவ பாத்தா தான் இந்த விபத்தின் முழு பரிமாணமும் விளங்குகிறது....)(Image Courtesy : The Hindu)

..........................................................................................
ஈரோடு புத்தகத் திருவிழாவில் வாங்கிய ஜெயகாந்தன், Chethan Baghat, அசோகமித்திரன் புத்தகங்கள் அனைத்தும் படித்தாயிற்று... இறையன்புவின் 'படிப்பது சுகமே' வைத் தவிர............
..........................................................................................

எம். ஆர். ராதா, எம்.ஜி.ஆர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த 'பாசம்' படம் பார்த்தேன்... கொடுமைக்கார கணவனிடமிருந்து (எம். ஆர். ராதா) பிரிந்து, குழந்தைகளை (எம்.ஜி.ஆர்) வளர்க்கும் கதாபாத்திரம் டி.ஆர்.ராஜகுமாரிக்கு... சந்திரலேகா படத்தில் சர்க்கஸ் ஆடுபவராக நடித்திருப்பார்... அதிலும், சஷாங்கன் (காதலனின் தம்பி) அவரை அணுகும் காட்சியில் செமயாக நடித்திருப்பார்.... அப்படிப்பட்டவருக்கு பாசம் படமெல்லாம்.... சும்மா... ஜஸ்ட் லைக்தட்....

..........................................................................................
சுதந்திரதினத்தன்று சன் டிவியில் - எந்திரன் - இசை வெளியிட்டு விழா - உருவான கதையாம்... என்ன கொடுமைடா சாமி...
..........................................................................................

உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: தமிழக அரசு
- எங்கப்பன் குதிருக்குள் இல்லை
இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன..?
..........................................................................................

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க

Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP