உதிரிப்பூக்கள்
August 14, 2010
மும்பை கப்பல் விபத்து
----------------------------
மும்பை துறைமுகத்தில் இரு கப்பல்கள் மோதல்... 60 - 70 டிகிரில சாஞ்சு நிக்குது MSC Chitra.... எப்படித்தான் இப்படி சாஞ்சு நிக்கற கப்பல நிப்பாட்டுவாங்களோ!!!!
துறைமுகத்துக்கு இவ்ளோ பக்கத்துல வந்து ரெண்டு கப்பலும் மோதிக்கிட்டதால். இந்த கடல் நீரை தான் BARC (Baba Automic Research Centre) யூஸ் பண்ணுவதால், மும்பை துறைமுகத்தை முடக்குவதால்.... கொஞ்சம் டவுட்டாயிருக்கு....
எது எப்படியோ... அந்த இரு கப்பல் நிறுவனங்களும் நஷ்ட ஈடு தரவேண்டியதில்லை... இது இந்தியா தானே!!! அமெரிக்கா அல்லவே!!!!
(இந்த போட்டோவ பாத்தா தான் இந்த விபத்தின் முழு பரிமாணமும் விளங்குகிறது....)
(Image Courtesy : The Hindu)
..........................................................................................
ஈரோடு புத்தகத் திருவிழாவில் வாங்கிய ஜெயகாந்தன், Chethan Baghat, அசோகமித்திரன் புத்தகங்கள் அனைத்தும் படித்தாயிற்று... இறையன்புவின் 'படிப்பது சுகமே' வைத் தவிர............
..........................................................................................
எம். ஆர். ராதா, எம்.ஜி.ஆர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த 'பாசம்' படம் பார்த்தேன்... கொடுமைக்கார கணவனிடமிருந்து (எம். ஆர். ராதா) பிரிந்து, குழந்தைகளை (எம்.ஜி.ஆர்) வளர்க்கும் கதாபாத்திரம் டி.ஆர்.ராஜகுமாரிக்கு... சந்திரலேகா படத்தில் சர்க்கஸ் ஆடுபவராக நடித்திருப்பார்... அதிலும், சஷாங்கன் (காதலனின் தம்பி) அவரை அணுகும் காட்சியில் செமயாக நடித்திருப்பார்.... அப்படிப்பட்டவருக்கு பாசம் படமெல்லாம்.... சும்மா... ஜஸ்ட் லைக்தட்....
..........................................................................................
சுதந்திரதினத்தன்று சன் டிவியில் - எந்திரன் - இசை வெளியிட்டு விழா - உருவான கதையாம்... என்ன கொடுமைடா சாமி...
..........................................................................................
உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: தமிழக அரசு
- எங்கப்பன் குதிருக்குள் இல்லை
இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன..?
..........................................................................................
9 கருத்துகள்:
உதிரிப்பூக்களை பூசலம்பு-வில் கோர்த்து கட்டியமைக்கு நன்றி :-)
தொடர் பதிவிற்கு அழைத்து உள்ளேன். மறுக்காமல் எழுதுங்கள்..http://amuthakrish.blogspot.com/2010/08/1.html
தொடர் பதிவிற்கு அழைத்து உள்ளேன்.மறுக்காமல் எழுதவும்.
வாங்க சிங்கக்குட்டி..
நன்றிங்க...
வாங்க அமுதா....
தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி... நன்றி...
மறுப்பேனா என்ன... அவசியம் எழுதுகிறேன் அமுதா...
//சுதந்திரதினத்தன்று சன் டிவியில் - எந்திரன் - இசை வெளியிட்டு விழா - உருவான கதையாம்... என்ன கொடுமைடா சாமி..//
******
இதுல நீங்க கொடுமைன்னு சொல்லி சலிச்சுக்கற அளவுக்கு என்ன இருக்கு..
அவுங்க ப்ரொட்யூஸ் பண்ணின முதல் படம்... பிரம்மாண்ட படம்... பெரிய அளவிலான இசை வெளியீடு.... அதை பற்றின ஒரு ப்ரோக்ராம் போடறதுல என்ன தப்பு?

வாங்க கோபி...
பிரம்மாண்டமான படம் தான்ங்க.... அதன் இசை வெளியிட்டு விழான்னா ஒகே.... படம் - உருவான கதைன்னா டபுள் ஒகே...
இசை வெளியிட்டு விழா - உருவான கதை ங்கற, வியாபார உத்தி தான் எனக்கு சலிப்பை தருகிறது...
விட்டால் டிரைலர் உருவான கதை கூட போடுவார்கள் போல....
என் முதல் வருகை உதிர்பூக்களில் உள்ள பூசல்ம்பு.
பூசல்ம்பு படித்தேன்.நன்றாக இருக்கு. ?
www.vijisvegkitchen.blogpsot.com
வாங்க விஜி...
முதல் வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றிகள்....
Post a Comment