என்னைப் பற்றி.... (தொடர் பதிவு)
September 15, 2010
இந்த தொடரை என்னை எழுத அழைத்த அமுதாவிற்கு நன்றி.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஸ்வர்ணரேக்கா ....
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
என் பெயர் சத்யா... பதிவுகளை எழுத ஆரம்பிக்கையில் ஏதேனும் புனைப்பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது ஒரிசாவில் ஓர் நதி இருக்கிறது என்றும்... அது தங்க ரேகைகளைப் போல் ஜொலிப்பதால் அதற்க்கு ஸ்வர்ணரேகை என்று பெயர் என்றும் படித்தேன்.... உவமை பிடித்திருந்த்தால் அதையே பதிவுலகில் என் பெயராக்கிக் கொண்டேன்....
.3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....?
முதலில் 2, 3 பதிவுகள் ஆங்கிலத்தில் தான் போட்டேன்... பின்னர் igoogleல் தமிழ் கீபோர்ட் கிடைத்து தமிழில் எழுதினேன்.... அது மிகவும் சிரம்மாக இருந்ததால், வேறு என்ன செய்யலாம் என்று கூகுளாண்டவரிடம் கேட்டபோது தான் தமிழ்மணம், NHM Writer போன்றவற்றை அவர் அறிமுகம் செய்தார்....
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலமா.... என்னுடைய பதிவா...? என்ன கொடுமை சரவணா இது..?
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
அவ்வப்போது பகிர்ந்தது உண்டு... பெரும் விளைவுகள் ஏதும் இல்லை...
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பொழுதுபோக்கு... பொழுதுபோக்கு... பொழுதுபோக்கு மட்டுமே. வேறேதற்கும் இல்லை....
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
2 பதிவுகள்.... அதில் ஒன்று தமிழ்...
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபம் வராது... எரிச்சல் வரும்... அதுவும் dark பின்னனியில் template வைத்திருப்பவர்களை பார்த்தால்.... அதற்காக அவர்களது பதிவை படிக்காமல் போகவேண்டுமே என்று தான் எரிச்சல்....
பொறாமை... கண்டிப்பாக உண்டு... அதுவும் போட்டோ கமெண்ட்ஸ் போடுபவர்களை பார்த்தால் கண்ணாபின்னாவென்று பொறாமை வரும்... குறிப்பா சுகுமார் சுவாமிநாதன் அவர்களை சொல்லனும்... (நானும் அந்த போட்டோக்களுக்கு கமெண்ட்ஸ் யோசிப்பேன்... ஆனா வராது.... அதான் அவ்ளோ fire....)...
அதே மாதிரி... கதைகள் எழுதறவங்கள பாத்தாலும் காதில புகை தான்...
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
அது சுகுமார் சுவாமிநாதன் அவர்கள் தான்... பாராட்டி... இப்பதிவுலகில் எனக்கு முதலில் விருது கொடுத்து அவரே...
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
இதுவே போதுமே. இன்னும் என்னத்தை சொல்வது என்று தெரியவில்லை.இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்...
.1. சுகுமார் சுவாமிநாதன்
.2. கீதா ஆச்சல்
.3. அகல்விளக்கு
11 கருத்துகள்:
nice
ஆஹா... மிக்க நன்றிங்க.. தொடர்ந்து எழுதுங்கள்..
late but cute...
வாங்க LK...
கருத்துக்கு நன்றிங்க...
வாங்க சுகுமார்...
நன்றிங்க...
வாங்க அமுதா...
ஆமாங்க.. கொஞ்சம் லேட்டு தான்... ஹி... ஹி... ஹி...
ahaa... Nanringa...
nalla eluthi irukeenga...
ivvloo naal enga poyiruntheenga....??
பகிர்வுக்கு நன்றி சத்யா.
(என்ன இருந்தாலும் ஸ்வர்ணரேக்கா தான் மனதில் நிற்கிறது)
ஸ்ரீவேணுகோபாலன் சரித்திர நாவல் கூட ‘ஸ்வர்ணரேகா’ என்று நினைப்பு. பதில்கள் சுவாரசியம்.
வாங்க சிங்கக்குட்டி
//என்ன இருந்தாலும் ஸ்வர்ணரேக்கா தான் மனதில் நிற்கிறது//
- அது தான் வேண்டும்...
வாங்க ரிஷபன்...
//ஸ்ரீவேணுகோபாலன் சரித்திர நாவல் கூட ‘ஸ்வர்ணரேகா’ என்று நினைப்பு. //
- அப்படியா... அவரது 'அரங்கன் உலா' மட்டுமே படித்திருக்கிறேன்...
ஸ்வர்ணரேகாவும் படிக்க வேண்டும்..
//பதில்கள் சுவாரசியம்.//
- நன்றிங்க...
குருவரெட்டியூரா....?
மிக்க மகிழ்ச்சி...
வாழ்த்துகள்
வாங்க கதிர்...
ஆமாங்க.. ஈரோட்டுக்கு அக்கம் பக்கத்தில் தான் இருக்கிறேன்...
வருகைக்கு நன்றி...
தோழி, சத்யா வாழ்த்துக்கள். குருவரெட்டியூர் என கூகுளில் கிழிக் செய்தால் தாங்களே வருகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் . நிறைய எழுதுங்கள். அபோக்லிக்டா விமர்சனம் அருமை. முடிந்தால் www.kavithaimathesu.blogspot.com பாருங்கள் .நட்புடன் குரு.பழ.மாதேசு
Post a Comment