காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

சமையலறை என்னும் ஓர் மாய அறை....

July 21, 2010

வெகு சில நாட்களுக்கு முன் வரை சமையலறை என்பது ஓர் மாய அறையாக இருந்தது, என்னை பொறுத்தவரையில்... ஆம்..


"அம்மா... பசிக்குது.. என்ன இருக்கு சாப்பிட..?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்று, இருப்பதை தட்டில் போட்டுக்கொண்டு, சாப்பிட்டு, தட்டைக் கழுவி வைத்துவிட்டு வரும்வரை மட்டுமே என் கண்களுக்கு அந்த அறை தெரியும்...மற்ற சமயங்களில் எல்லாம் அப்படி ஒரு அறை இருப்பதே என் கண்களுக்கு தெரியாது..


அம்மா சமைத்துவிடுவதாலும், அம்மா ஊருக்கு போயிருந்தால் அக்கா, அம்மாவைக்காட்டிலும் அருமையாய் சமைத்து தந்துவிட்டதாலும், இருவரும் வெளியே போயிருக்கும் பட்சத்தில் அப்பாவே சமைத்து விடுவதாலும், அந்த மாய அறையை பற்றியோ, அதில் நிகழ்த்தப்படும் மாயாஜாலங்களைப் பற்றியோ நான் அறிந்ததில்லை...


ஆனால் இப்பொழுதோ...
நான் தங்கமணியாக ஆகிவிட்டதினாலும், நான் செய்வதையும் சாப்பிடுவதற்கென்று ரங்கமணி வந்துவிட்ட காரணத்தினாலும்... எப்போதாவது என் கண்களில் பட்டு வந்த அந்த மாய அறையிலேயே எந்நேரமும் நான் இருக்கவேண்டியதாக இருக்கின்றது...


ஆனாலும்... இப்பொழுதும் சமையலறை, மாய அறையாகவே உள்ளது...
அது என்ன, அம்மாவும், பெரியம்மாவும் செஞ்சா மட்டும் உப்புமா நன்றாக வருகிறது, எனக்கு மட்டும் கட்டி கட்டியாக வருகிறது...
எனக்கு மட்டும் பொரியல் தீய்ந்து போய்விடுகிறது...
சர்க்கரை பாகு கட்டி பிடித்து, பாத்திரத்தோடு பாத்திரமாய் ஒன்றிவிடுகிறது....

என்ன கொடுமை சரவணா, இது....?

7 கருத்துகள்:

அமுதா கிருஷ்ணா said...

இப்ப பிடித்த அறையாகி விட்டதா??

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க அமுதா...

ஆம்.. எனக்கு பிடித்துவிட்டது... ஆனால் அதுக்கு தான் என்னை பிடிக்குமோ என்னமோ..?

jokkiri said...

//அது என்ன, அம்மாவும், பெரியம்மாவும் செஞ்சா மட்டும் உப்புமா நன்றாக வருகிறது, எனக்கு மட்டும் கட்டி கட்டியாக வருகிறது...

எனக்கு மட்டும் பொரியல் தீய்ந்து போய்விடுகிறது...

சர்க்கரை பாகு கட்டி பிடித்து, பாத்திரத்தோடு பாத்திரமாய் ஒன்றிவிடுகிறது....

என்ன கொடுமை சரவணா, இது....?//

********

அதானே... என்ன கொடுமைப்பா...

இதற்கு ஒரு வழி இருந்தா சொல்லேன்...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

அல்வா ட்ரை பண்ணினீங்களா, மேடம்?

ஸ்வர்ணரேக்கா said...

//ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

அல்வா ட்ரை பண்ணினீங்களா, மேடம்?//

வாங்க ராமமூர்த்தி...

ஹி... ஹி... ஆமாம்... அல்வா, குலோப்சாமுக்கும் அதே கதி தான்...

சி.பி.செந்தில்குமார் said...

பூசலம்பு என்றால் என்ன அர்த்தம்? சலம்பு என்றால் பந்தா என அர்த்தம் என என் அரைகுறை அறிவை வைத்துயூகிக்கிறேன்

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க சி.பி.செந்தில்குமார்..

//சலம்பு என்றால் பந்தா என அர்த்தம்....//

ஆம்.. தங்கள் ஊகம் சரியே..

ஆனால்... பெண்களின் கண்களை போரிடும் அம்புகள் ( பூசலம்பு = பூசல் + அம்பு )என்று சொல்கிறான் கம்பன்...

இந்த உவமை நன்றாக இருப்பதால் என் பதிவுப்பக்கத்தின் பெயராக்கிக் கொண்டேன்... அவ்வளவே..

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP