ரயிலடி
July 10, 2010
பஸ்சில் போய்க்கொண்டிருந்தேன். ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது, கண்டக்டர் ரயிலடி வந்தாச்சு…. ரயிலுக்கு போறவங்கல்லாம் இறங்கிக்கங்க என்று சொன்னார்…. ரயிலடி என்று சொன்னது ரொம்ப வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தது கேட்க. நானும் இனி ரயில்வே ஸ்டேஷன் என்று சொல்லாமல், ரயிலடி என்று தான் சொல்லப்போகிறேன்...
பொதுவாக பேருந்து, பேருந்து நிலையம் என்று எழுதினால் தான் தமிழை வளர்க்க முடியும் என்று சொல்வதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை தான்….
மாறாக bus, train, railway staion, bus stand, time என்றெல்லாம் ஆங்கிலத்திலேயே எழுதுவதற்கு பதில் பஸ், ட்ரெயின் என்றெல்லாம் தமிழில் எழுதினாலாவது தமிழை காப்பாற்றலாம் என்று எண்ணுபவள் நான்….
ஆனாலும், இதுபோன்ற சுவையாக இருக்கும் பதங்களை உபயோகப்படுத்தவே தோன்றுகிறது….
ஆனால் – பஸ் ஸ்டாண்டுக்கு என்ன சொல்வது..?
ஆனால் – பஸ் ஸ்டாண்டுக்கு என்ன சொல்வது..?
9 கருத்துகள்:
இதற்கு 'உந்து வண்டி நிலைப்பாடு நிலையம்' என்றும் அன்போடு அழைக்கலாம்.
வாங்க நீச்சல்காரன்...
உங்க அன்புக்கு நன்றிகள் பல...
இப்ப தான் மாநாடு எல்லாம் நடத்துனாங்க...அதுக்குள்ளே ரயிலடி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாங்களா...மிகவும் மகிழ்ச்சி..உங்களையும் உங்கள் பதிவையும் காண...
வாங்க கீதா...
ஒருவழியா பதிவு போட்டுட்டேன்...
இனிமே அடிக்கடி போட முயற்சி பண்றேன்...
கிராமங்களில் படிக்காத, சாதாரண மக்கள் பயன் படுத்தும் வார்த்தை ரயிலுக்கடி.
அழகான பகிர்வு.
வாங்க அம்பிகா...
முதல் வருகைக்கும், பின்னூட்டதிற்கும் நன்றி....
அட.......
பரவாயில்லையே.... செம்மொழி மாநாடு நல்லா தான் வேலை செய்யுது..
ரயிலடியா? சூப்பர்.... பலே...
பஸ் ஸ்டாண்ட்டை பேருந்து நிலையம்
என்றழைக்கலாமோ??
வாழ்க தமிழ்.....
இது போல் தான் சுத்துபட்டு கிராமத்து ஜனங்க, திருச்சிக்குப் போறதை ‘கோட்டைக்குப் போய்ட்டு வரேன்’பாங்க!
ரயிலடி..பஸ் ஸ்டாப்..கோட்டை...சாவடி...சந்தை..திண்ணை..இதெல்லாம் சொல்லும்போதே மனசுக்கு சந்தோஷமாய் இருக்கு(ம்)!!
வாங்க jokkiri...
//பஸ் ஸ்டாண்ட்டை பேருந்து நிலையம்
என்றழைக்கலாமோ??//
ஆம்.. பேருந்து நிலையமும் நன்றாக உள்ளது...
வாங்க ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி...
இந்த கோட்டை மேட்டர் எனக்கு பு்துசு.. தகவலுக்கு நன்றிங்க...
Post a Comment