இறையாண்மை + தனிமனித உரிமை = இயலாமை...
May 8, 2010
26.11.08 அன்று மும்பையில் பலரை(166)க் கொன்ற கசாப்புக்கு தூக்காம்... அதுவும் உடனே நிறைவேறாதாம்... மேற்கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாமாம். ஜனாதிபதிக்கும் கருணை மனு போடலாமாம். அவனுக்கு, இல்லை அவருக்கு அதுக்கெல்லாம் உரிமை உண்டாம்.. இதற்கெல்லாம் இறையாண்மை, தனிமனித உரிமை என்று பெயராம்....
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கு கசாப்புக்கு உரிமை உண்டாம்.. ஆனால் அவனாலும், மற்றவர்களாலும் சுடப்பட்டவர்களுக்கு சாவதற்கு தான் உரிமை உண்டு போலும்... பிறந்தாலும் இந்தியத்திருநாட்டில் குடிமக்களாய் பிறக்கக்கூடாது போலிருக்கிறது...
அதேபோல் 2001ல் பார்லிமெண்ட் தாக்குதல் வழக்கில் பிடித்துவைத்திருக்கும் (ராஜ உபசாரங்கள் செய்யப்படும்) அப்சலுக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லையாம்...
தீவிரவாதிகளுக்கு, அதுவும் பேருக்கு ஒருத்தனை (தப்பு. தப்பு... ஒருத்தரை) பிடித்துவைத்துக்கொண்டு, நீதி, தனிமனித உரிமை என்ற பெயரிலும், இறையாண்மை என்ற பெயரிலும் நடக்கும் கூத்துக்கள், உலக அரங்கில் நமது இயலாமையையே காட்டுகின்றன...
உண்மையில் அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமோ.... ஆனால்.. அந்த வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் இயலாமை... இயலாமை... என்றே என் காதுகள் கேட்கின்றன...
----------------------------------------------------------------------------------------
பி.கு...
பதிவெழுதி சில மாதங்கள் ஆகிவிட்டாலும்.... இன்னும் என்னைத் தொடர்ந்து வந்து ஆதரவு தரும் எனது வாசகர் வட்டத்திற்கு நன்றி... நன்றி...
----------------------------------------------------------------------------------------
13 கருத்துகள்:
iraiyaanmai+thanimanithaurimai=iyalamai...
romba sariyana formula...
:-(
ஸ்வர்ணா, எப்படி இருக்கின்றிங்க...வீட்டில் அனைவரும் நலமா...ரொம்ப நாள் ஆச்சு...பதிவினை அடிக்கடி போடுங்க...
யாரை பற்றி கூறிகின்றிங்க..
வாங்க அகல்விளக்கு...
பின்னூட்டத்துக்கு நன்றிங்க...
வாங்க கீதா..
எல்லாரும் நல்லாயிருக்கோம்.. ஆமாம்.. ரொம்ப நாள் ஆயிடுச்சி.. இனிமே அடிக்கடி வந்திருவேன்...
//யாரை பற்றி கூறிகின்றிங்க..//
புரியலயே!!!
இல்லை. மரண தண்டனை உடனே நிறைவேற்றப்பட்டால் குற்றம் செய்தவன் ஒரு பெருமையுடன் இறப்பான். ஆனால் இம்மாதிரி வழக்கு விசாரணையை முழுமையாக செய்து, தண்டனை அறிவித்து, காலம் கடத்தி தண்டித்தால் தான் தனது தவறை முழுமையாக உணர்வான்.அல்லது அவனது ஆட்கள் உணர்வார்கள். உடனடி தண்டனை என்பது தவறானது. அது வந்துவிட்டால் பிறகு தீவிரவாதிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும் .
இறையாண்மை + தனிமனித உரிமை = நல்லறம்
நான்கு மாதங்களாக பதிவு எழுதாத திருச்சியின் நியூட்டனை கண்டித்து தொடர்ச்சியாக கமெண்ட் எழுதும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவ்த்துக் கொள்கிறோம் . நேரம் ,இடம் முதலியவை விரைவில் அறிவிக்கப்படும் :)
//இம்மாதிரி வழக்கு விசாரணையை முழுமையாக செய்து, தண்டனை அறிவித்து, காலம் கடத்தி தண்டித்தால் தான் தனது தவறை முழுமையாக உணர்வான்//
தண்டித்தால் சரி தான். தண்டிப்பதில்லை என்பது தான் என் ஆதங்கம்...
கண்டன போராட்டம் எப்ப ஆரம்பம்.? நானும் வரேன் அதுக்கு...
hmm enna panna. innum afsal guruvuku tooku confirm agala. muthala kasaboda fateu confirm agala. mumbai high court has to confirm the spl courts judgement then he can appeal to supreme court and president. itha pathi nanum oru post potten time kidacha parunga newton
MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது.
வாங்க ஜெயந்தி விருதுக்கு நன்றிங்க...
வாங்க MinMini.com...ஆஹா.. இதுவரை பாக்கலியே.... உடனே பாக்கரேன்...
வாங்க LK.. அவசியம் பாக்கரேன்..வருகைக்கு நன்றிங்க...
ஒண்ணும் சொல்றதுக்கு இல்லேங்க ஸ்வர்ணரேக்கா....
உங்கள் எழுத்தின் மூலம் வெளிவரும் ஆதங்கம் தான், என்னுடையதும்....
Hi.Nice Blog(blog nandraga erukirathu lol).And we are starting a blog for Bloggers from Trichy.If you are interested please feel free to platform at http://trichybloggers.blogspot.com/
உண்மையில் அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமோ.... ஆனால்.. அந்த வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் இயலாமை... இயலாமை... என்றே என் காதுகள் கேட்கின்றன...
உண்மை..உண்மை..உண்மை..
எடுத்தோம்..கவிழ்த்தோம்...என்று தனி மனிதன் வேண்டுமானால் செய்யலாம்!ஆனால், கலாச்சார பாரம்பர்யமிக்க, ஒரு நாடு செய்ய முடியுமா?
ஸ்வர்ணா எப்படி இருக்கின்றிங்க...ப்ளாக் பக்கம் அடிக்கடி வாங்க...வீட்டில் அனைவரும் நலமா...என்ன இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் பதிவா..வாங்க வந்து ஒரு பதிவு போட்டுவிட்டு போங்க......
Post a Comment