கால் நடை GHல் ஒரு நாள்
January 31, 2010
போன வாரம் எங்கள் ஊர் கால் நடை GHக்கு போக நேர்ந்தது. (உபயம்: எங்கள் வீட்டு நாய்க்குட்டி).
ஆடு மாடுகளுக்கெல்லாம் நம்மைப் போல் உயிரும் உணர்வும் உண்டு என்றெல்லாம் படித்திருந்தாலும், அதன் அர்த்தம் எனக்கு அங்கே தான் விளங்கியது.
‘எங்க கண்ணுக்குட்டிக்கு உடம்பு சரியில்ல, மாத்திரை தாங்க’
‘மாடு ரெண்டு நாளா தண்ணியே குடிக்கல’
‘ஆடு இரையெடுக்கல, கொஞ்சம் பாருங்க டாக்டரே’
‘காளை, காலை சாச்சு சாச்சு நடக்குதுங்க. என்னாச்சுன்னு பாருங்க. இதவெச்சு தான் நான் பொழப்பயே ஓட்டறேன்’
‘கோழிக்கு கால்ல அடி பட்டுருச்சு. கட்டு கட்டிவிடுங்க’
- என்றெல்லாம் தங்கள் கால் நடைச் செல்வங்களை கொண்டுவரும் மக்கள்.
அதிலும் ஒரு சிறுவன், மிஞ்சிப்போனால் 8 வயதிருக்கும், ஆட்டுக்குட்டியை தூக்கிவந்திருந்தான். அவனை பார்த்தவுடன் பார்த்திபன் பாணியில்
ஒரு
ஆட்டுக்குட்டியே
ஆட்டுக்குட்டியை
தூக்கிவருகிறதே (அடடே) ஆச்சர்யக்குறி!!!
என்று கவிதை தோன்றியது.
அந்த ஆட்டுக்குட்டியை படுக்கவைத்து குளுக்கோஸ் ஏற்றுகையில், சோகமாய் நின்றிருந்தான். ‘குட்டிய பனியில விடாதே’ என்று சொல்லி, மாத்திரை தந்து அனுப்பினார்கள்.
இதுபோல் நாய்க்குட்டியை, கோழியை கட்டை பைகளில் தூக்கிவந்த தூக்கிவந்த சிறுவர்களும் உண்டு.
இதேல்லாம் GHல் தான் சாத்தியம். இந்த கால் நடைச் செல்வங்களை வைத்து வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு பெட் & வெட் கிளினிக்குகளில் ஒவ்வொருமுறையும் 200, 300 ரூ தந்து வைத்தியம் பார்க்கமுடியுமா..?
இந்த GH, திருச்சியிலுள்ள எல்லா (62) வார்டுகளுக்கும் சேர்த்து என்று சொன்னார்கள். ஒரு 4-5 வார்டுகளுக்கு சேர்த்து இந்த மாதிரி மாட்டு ஆஸ்பத்திரிகளை கட்டிவிட்டால் தான் என்ன? ஒருவேளை விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந்தால் செய்திருப்பார்களோ, இல்லை அப்பொழுதும் தொழுவத்தில் வைக்க கலர் டீவி தந்து, அதில் ஒளிபரப்பவென்று தனி சேனல் ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ..?
20 கருத்துகள்:
நல்ல கட்டுரை. பிராணிகளை வளர்ப்பவர்கள், அதனை, தன் குடும்ப உறுப்பினராகவே கருதுவார்கள்.
வாங்க பின்னோக்கி..
உண்மை தாங்க... அதற்கு ஏதாவது வந்துவிட்டதென்றால் நாம் பதைபதைத்து போய்விடுகிறோம்...
//ஒருவேளை விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந்தால்//
நல்லா இருக்கே... என்ன கள்ள ஓட்டு போடுவது இன்னும் அதிகமாகும்..:)))
நல்ல பகிர்வு.. ஆனா அந்த பக்கம் போக மட்டும் கொஞ்சம் பயம்... காரணம் ஊசியெல்லாம் பெரிசு பெரிசா வச்சிருபாங்க..
//பார்த்திபன் பாணியில்
ஒரு
ஆட்டுக்குட்டியே
ஆட்டுக்குட்டியை
தூக்கிவருகிறதே (அடடே) ஆச்சர்யக்குறி!!!
என்று கவிதை தோன்றியது//
ஸ்வர்ணரேக்கா... அங்க போயும், இதே விளையாட்டு தானா?? பேஷ்..
//இந்த கால் நடைச் செல்வங்களை வைத்து வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு பெட் & வெட் கிளினிக்குகளில் ஒவ்வொருமுறையும் 200, 300 ரூ தந்து வைத்தியம் பார்க்கமுடியுமா..? //
மிகவும் யோசிக்கவும், கவலை கொள்ளவும் வைத்த கேள்வி...
//ஒரு 4-5 வார்டுகளுக்கு சேர்த்து இந்த மாதிரி மாட்டு ஆஸ்பத்திரிகளை கட்டிவிட்டால் தான் என்ன?//
காசு கிடைக்காது என்று தெரிந்த இடத்தில், என்ன நடக்கும் சொல்லுங்கள்...
//ஒருவேளை விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந்தால் செய்திருப்பார்களோ, இல்லை அப்பொழுதும் தொழுவத்தில் வைக்க கலர் டீவி தந்து, அதில் ஒளிபரப்பவென்று தனி சேனல் ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ..?//
ஹா...ஹா... ஹா... இது போல் சிரித்தாலும், மிகவும் வருத்தத்துடன் சிந்திக்க வைத்த கேள்வி... காசு வாங்கி ஓட்டு போடும் வரை, நாம் அவர்களை எதுவுமே கேட்க முடியாது ஸ்வர்ணரேக்கா...
வாங்க சிம்பா..
//கள்ள ஓட்டு போடுவது இன்னும் அதிகமாகும்//
அது கரெக்ட் தான்..
//ஊசியெல்லாம் பெரிசு பெரிசா வச்சிருபாங்க..//
அதப்பாத்து நானும் பயந்து தான் போனேன்.. மார்க்கர் பேனா மாதிரி பெரிசா இருந்துச்சு..
வாங்க கோபி...
//அங்க போயும், இதே விளையாட்டு தானா//
ஹி.. ஹி.. ஹி..
//காசு வாங்கி ஓட்டு போடும் வரை, நாம் அவர்களை எதுவுமே கேட்க முடியாது//
வாஸ்த்தவம் தான்..
எங்க பக்கத்து வீட்டு பசு, கன்னுக்குட்டி போட்டப்ப கஷ்டப்பட்டது பாத்திருக்கேன். பிராணிகளை நேசிப்பவர்களுக்கு அது படும் வேதனை ரொம்ப கஷ்டம்.
உங்க நாய்க்குட்டி க்யூட்டா இருக்கு.
hm
செஞ்சாலும் ஆச்சரியமில்ல....
//விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந்தால் செய்திருப்பார்களோ//
ஹ ஹ ஹ ஹ..உண்மை உண்மை.
மேலும் மற்ற உயிர்களை பிழைப்புக்க வைத்திருப்பவர்கள்தான் இன்று அதிகம். அன்புக்காக வளர்ப்பவர்கள் மிக குறைவு.
வாங்க சின்ன அம்மிணி..
//உங்க நாய்க்குட்டி க்யூட்டா இருக்கு//
நன்றிஸ்...
வாங்க சக்தியின் மனம்
// hm//
அப்படின்னா...?
வாங்க அண்ணாமலையான்.
//செஞ்சாலும் ஆச்சரியமில்ல//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க சிங்கக்குட்டி,
//மேலும் மற்ற உயிர்களை பிழைப்புக்க வைத்திருப்பவர்கள்தான் இன்று அதிகம்//
ஆமாம்... உண்மை தான்..
அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ...
கதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,
//ஒருவேளை விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந்தால் செய்திருப்பார்களோ, இல்லை அப்பொழுதும் தொழுவத்தில் வைக்க கலர் டீவி தந்து, அதில் ஒளிபரப்பவென்று தனி சேனல் ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ..?
//....:) LOL
வாங்க தக்குடுபாண்டி...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீஸ்....
nalla ulkuththu... :) yaarayo kuththi kaattra maathri irukku ...
Unga Kaalnadai Karuthu nala irunthathu.... kadisula light ta punch mari irku.... Manithani pola murukangalumkum fever,cold ellam varum..athauku marunthu koduthu pathirama pathukanum..ella
ஸ்வர்ணாரேகா, எப்படி இருக்கின்றிங்க...நானே உங்களுக்கு மெயில் அனுப்பனும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்...நான் இந்தியா vacation போய் வந்ததில் இருந்து உங்களை தேடி கொண்டு தான் இருந்தேன்..ஆனால் என்னவோ மெயில் அனுப்ப முடியவில்லை..வீட்டில் அனவரும் நலமா...ஏன் ப்ளாக் பக்கம் அவ்வளவாக வருவதில்லை...அடிக்கடி வாங்க...அன்புடன், கீதா ஆச்சல்
கீதா,
வீட்டில் அனைவரும் நலமே!
கொஞ்சம் லாங் கேப் ஆகிவிட்டது.. இனி ப்ளாக் பக்கம் அடிக்கடி வருகிறேன்...
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி கீதா..
ஆடு மாடுகளுக்கெல்லாம் நம்மைப் போல் உயிரும் உணர்வும் உண்டு என்றெல்லாம் படித்திருந்தாலும், அதன் அர்த்தம் எனக்கு அங்கே தான் விளங்கியது.
சர சரவென எழுத்து ஓடியது.. கால் நடைப் பாய்ச்சலில்..
வாங்க ரிஷபன்...
//சர சரவென எழுத்து ஓடியது.. கால் நடைப் பாய்ச்சலில்..//
நன்றி..நன்றி..
Post a Comment