காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

நெஞ்சுபொறுக்குதில்லையே...,

November 27, 2009

26/11 - ஓராண்டு நிறைவு....

ஓராண்டுக்கு பின் , மாண்புமிகு பிரதமரின் அறிக்கை..

'மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும்/தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாதாம்... '

ஓராண்டு, 365 நாட்கள் ஒரு அரசாங்கத்திற்கு பத்தாதா என்ன...? செய்வதற்கு மனமிருந்தால் தானே.... இப்படியெல்லாம் எதற்கு வீண் அறிக்கை.. பேசாமல் நாம் பதிவில் போடுவது போல் ஒரு டிஸ்கியை போடுவது தானே...

அதாவது - 'இந்திய ராணுவம், பார்டர் செக்யுரிட்டி படை, ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு, 'துணை ராணுவம், கமெண்டோ படை பிரிவு போன்றவற்றில் சேருபவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..' அவர்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கிலேயே இவ்வேலைகளை செய்கிறார்கள்.. அல்லது உயிரை விடுகிறார்கள்..'

'இந்திய இறையாண்மையை காப்பாற்றவும். இன்ன பிற வசதிகளுக்காகவும் தீவிரவாதிகளையோ, நக்சல்களையோ பிடிப்பதற்கு இந்திய அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்காது... எனவே அமெரிக்காவோ, சீனாவோ அவைகளால் தூண்டப்பட்டு பாகிஸ்தானோ இந்தியாவில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்..' என்று போடுவது தானே..

சரி இந்திய அரசாங்கம் கிடக்கட்டும்... இந்த தாக்கரேக்கள் என்ன செய்கிறார்கள்... மும்பை தாக்குதலில் இறந்தவர்களும் பாதிக்கபட்டவர்களும் 'மராத்தி மன்னூஸ்' இல்லையா...?

10 கருத்துகள்:

Shankaran er said...

வந்தே மாதரம் பாடல் மீது பத்வா , அப்சல் குரு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு,லோக்கல் குழுக்களாக இருந்த மாவோயிஸ்ட்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து பெரிய தீவிரவாதிகளாக்கி, பாகிஸ்தானைப்பற்றி நன்கு தெரிந்தும் அது நடவடிக்கை எடுக்கும் என நம்பும் நம் அரசாங்கம் தான் தன்னம்பிக்கையின் சரியான உதாரணம். நாம்தான் இவர்களை தேர்ந்தெடுத்தோம். எனவே நாமே இவற்றிற்கு பொறுப்பாளிகள்

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க பீமா...

//நாம்தான் இவர்களை தேர்ந்தெடுத்தோம். எனவே நாமே இவற்றிற்கு பொறுப்பாளிகள்//

யாரை தேர்ந்தேடுத்தாலும் அவர்கள் இப்படி நம்மை ஏமாற்றுவது வழக்கமாகிவிட்டது... எனவே தேர்ந்தேடுப்பதில் அல்ல நம் தவறு...தேர்ந்தேடுத்தவர்களை நாம் எந்த கேள்வியும் கேட்காதது தான் நம் தவறு என்பது என் எண்ணம்...

Shankaran er said...

உண்மை தான்... ஆனால் கேள்வி கேட்டாலும் பெரிதாக எதுவும் நடந்து விடாது. விளக்கங்கள், அறிக்கைகள் என பிரச்சினை திசை திரும்பி விடும். நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் வாக்களிக்கும் உரிமையே..

சிங்கக்குட்டி said...

நல்ல பதிவு, நல்ல சிந்தனை

இந்த சிந்தனை மற்றும் இப்படி சிந்திக்கும் திறனை வரும் தலைமுறைக்கு கற்று கொடுப்பதே இனி வரும் காலம் இனிதாக இருக்க இப்போது தேவை.

பூங்குன்றன்.வே said...

அட..நீங்க என்னங்க தோழி.நம்ம அரசியல்வாதிகளை நல்லவங்க என்று நினைச்சு எந்த நடவடிக்கையும் எடுக்கல என்று நெஞ்சு பொறுக்காம எழுதி இருக்கீங்க.இன்னும் எத்தனை விசாரணை கமிஷன் ஒழுங்கா முடிந்து இருக்கு? எத்தனை ஊழல் பெருச்சாளிகள் மேல் வழக்கு பதிவு ஆகியும்,ராஜா மாதிரி வெளிய சுத்திகிட்டு இருக்காங்க?
இப்படி எத்தனையோ எத்தனை இருக்குங்க.நம்ம இந்திய அரசியல்வாதிகள் பிரச்சினைய பத்தி பேசிட்டு இருப்பாங்களே தவிர முடிக்க மாட்டாங்க.நாமும் ஓட்டு போட்டுட்டே இருப்போம்;அவங்களும் நமக்கு நாமம் போட்டுட்டே இருப்பாங்க.
POONGUNDRAN2010.BLOGSPOT.COM

Unknown said...

nanum trichy than. srirangam. bheema karuthu repeataiiii

ஸ்வர்ணரேக்கா said...

//ஆனால் கேள்வி கேட்டாலும் பெரிதாக எதுவும் நடந்து விடாது. விளக்கங்கள், அறிக்கைகள் என பிரச்சினை திசை திரும்பி விடும்//

நியாயம் தான். ஆனா.. கேள்வின்னு நான் சொல்றது... ஊழலோ, பிரச்சனையோ வெளியான பின் செய்யப்படும் கோர்ட், பார்லிமெண்ட் சம்பிரதாயங்களை அல்ல...

கவுன்சிலர், வார்டு மெம்பர் போன்றவர்களை கூட நாம் சாதாரணமாய் எந்த கேள்வியையும் கேட்காமல் இருப்பதையே..

கவுன்சிலர், வார்டு மெம்பரை விடுங்கள்.. தவறு என்று தெரிந்தாலும் நம் அலுவலகத்துல கூட யாரையும் எந்த கேள்வியையும் கேட்காமல் இருப்பதையே சொல்கிறேன்..

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க பூங்குன்றன்...

//நம்ம அரசியல்வாதிகளை நல்லவங்க என்று நினைச்சு//

நல்லவங்கன்னு நெனைக்கல.. ஊழல் பண்ணட்டும், அடிப்படை வசதிகள் செய்யாமல் இருக்கட்டும்.. அட்லீஸ்ட் நாட்டின் பாதுகாப்பிலாவது அக்கறை வேணாமாங்கற ஆதங்கம்தான்...

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க சிங்கக்குட்டி...

//இந்த சிந்தனை மற்றும் இப்படி சிந்திக்கும் திறனை வரும் தலைமுறைக்கு கற்று கொடுப்பதே//

ஏதோ நம்மால முடிஞ்சதை செய்வோம்...

வாங்க ஜெய்ஷங்கர்..

நம்மூர் ஆளா நீங்க... ரொம்ப சந்தோஷம்.. அடிக்கடி வாங்க..

பாத்திமா ஜொஹ்ரா said...

நல்ல பதிவு, நல்ல சிந்தனை

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP