காலச்சக்கரம்...
August 4, 2009
திங்கள் கிழமை காலை
"அடடா!!! இந்த பை பிஞ்சிருக்கே... அவசரத்துல தான் எல்லாமே ஞாபகம் வருது... ஈவ்னிங் வரும்போது கண்டிப்பா தைச்சுக்கிட்டு வரணும்..."
திங்கள் கிழமை மாலை
"இன்னிக்கு பாத்து ரொம்ப லேட்டாயிடுச்சு... சரி..பையை அப்பறம் பார்ப்போம்..."
புதன் கிழமை
"மனுசன் அவசரத்துக்கு யூஸ் பண்ணறதுக்கு ஒரு கர்ச்சீப் இருக்கா இந்த வீட்ல... சே..."
"இந்த சண்டேயாச்சும் கடைக்கு போய் வாங்கிட்டு வரணும்..."
வெள்ளிக்கிழமை
"போன மாசம் வாங்கிட்டு வந்த டிரஸ் தைக்ககுடுக்கவே இல்லையே... மறந்தே போச்சுது... சாயந்தரம் டைம் இருக்காதே.. சரி..ஞாயிற்று கிழமை போவோம்..."
ஞாயிற்றுக்கிழமை
"அப்பாடா!! இன்னிக்கு லீவ்... சண்டே புஃல்டே என்ஜாய்மெண்ட் தான்... டிவில நல்ல படம் இருக்கான்னு பேப்பர் வந்ததும் பாக்கணும்... மதியம் சாப்டுட்டு, அப்படியே ஒரு தூக்கம் போட்டு, நம்ம பேட்டரிய ரீசார்ஜ் பண்ணிப்போம்...."
"வீட்ட விட்டு வெளிய காலெடுத்து வெக்ககூடாது... டெய்லி ஒரே அலைச்சல் தான்.. இன்னிக்காவது வீட்ல இருப்போம்..."
திங்கள் கிழமை
"அடச்சே!!! டிரஸ் தைக்ககுடுக்கவே இல்லையே..!!!"
10 கருத்துகள்:
:-(
எனக்கு இந்த அனுபவம் அதிகம் இருக்குது. இது காலச்சக்கரம் இல்லை. சோகச்சக்கரம்!
உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கிறேன்....
http://valaimanai.blogspot.com/2009/08/blog-post.html
இந்த எதையும் 'தள்ளிப் போடுகிற' பழக்கம் மிக மிக ஆபத்தானது. நம்முடைய அனைத்து முன்னேற்றங்களையும் தடைப்படுத்தி பாழ் படுத்தி விடும். சீக்கிரம் அதிலிருந்து வெளி வந்து விடுங்கள் :)
சென்ஷி !! இந்த மாதிரி மத்த ஆட்களும் இருக்காங்கன்னு நெனைக்கறபோ... கொஞ்சம் சந்தோஷமா தான் இருக்கு....
ஐயோ!! சொக்கா!!!
பட்டாம்பூச்சி விருதா!!
எனக்கே எனக்குன்னு பட்டாம்பூச்சி விருதா!!
என்ன செய்யறதுன்னு ஒன்னும் புரியலயே!!!
சொக்கா!!!
Bheema - கரெக்ட் தான்...
வாழ்க்கையில் உயிரோடு இருப்பதை தவிர்த்து ஒன்றும் சாதிக்காதற்கு இந்த பழக்கமே காரணம்....
என்னங்க இது? ரொம்ப நல்ல பழக்கம் :-)) ....மேலும் விருது பெற வாழ்த்துக்கள்.
எல்லாருக்குமே இது பொருந்தும் ரேகா.. :)
நல்லா இருக்கு.
U have been Tagged...
http://geethaachalrecipe.blogspot.com/2009/08/tag.html
இங்கே வந்து பார்க்கவும்..
http://geethaachalrecipe.blogspot.com/2009/08/blog-post_27.html
Post a Comment