உள்ளூரில் வேலை பார்ப்பது கொலைக் குற்றமா???
July 23, 2009
நான் வாக்கிங் போகும்போது, தம்பதி சகிதமாக இருவர் வாக்கிங் வருவார்கள்... தினமும் பார்கிறோமே என்று குட் மார்னிங் சொல்ல ஆரம்பித்தேன்... வந்தது வில்லங்கம்... ரெண்டு நாள் கழித்து, எனக்கும் அவருக்குமான உரையாடல்...
அவர்: ஏம்மா, படிக்கிறியா..?
நான்: இல்ல சார்.. வேலை பாக்கறேன்..
அவர்: என்ன படிச்சிருக்க?
நான்: பி.இ...
அவர்: பி.இ ல?
நான்: ECE சார்..
அவர்: இங்க என்ன வேலை பாக்கற..?
நான்: Patent related வேலை...
அவர்: ஏன் இங்கயே இருக்க, சென்னை, Bangaloreன்னு போகலயா..?
நான்: இங்கயே வேலை இருக்கப்ப நான் ஏன் சார் போகணும்...?
அவர்: என் பையன், MCA படிச்சிட்டே சென்னைல, MNCல வேலை பாக்கறானேம்மா... நீ பி.இ.ECE படிச்சிட்டு ஏன் இங்கயே இருக்க..?
நான்: ?????
அவர்: இன்ட்ர்னெட்ல அப்ளை பண்ணிட்டே இரும்மா... கண்டிப்பா கிடைக்கும்...
நான்: ?????
உள்ளூரில் வேலை பார்த்தால், அது வேலை பார்க்கும் கணக்கில் சேர்த்தி இல்லை போலிருக்கிறது... உள்ளூரில் ஒருகம்பெனி இருந்து, அதில் எனக்கு வேலையும் இருக்கையில் சென்னை, Bangalore என்று எதற்காக போக வேண்டும் என்ற என் நியாயம் எடுபடவே இல்லை...!!!!
இதே நான் அவரிடம் 'சார், உங்க பையன் கிட்ட சொல்லி சென்னைல ஒரு reference வாங்கி தாங்க என்று சொல்லியிருந்தால்...' எங்கம்மா... அவனுக்கே ஒரு வருஷமா இன்கிரிமென்ட் இல்லை, recession வேற, ப்ராஜெக்ட் இல்லை என்றும், இன்ன பிற இத்தியாதிகளை கூறியும், தெரித்து ஓடியிருப்பார்....
ஆனால், என் ஆதங்கம் எல்லாம், என்னவோ என்னை கேள்வி கேக்கணும்னே, காலையில் எழுந்து வந்தது மாதிரி, இத்தனை கேள்வி கேட்ட அவர் கடைசிவரை என் பெயரை கேட்கவேயில்லை என்பதே....
15 கருத்துகள்:
எனக்கும் இதே பிரச்சனைதான்.... என் அண்ணன் துபாயில் இருப்பதால் நீயும் போ நீயும் போனு ஆளாளுக்கு படுத்துறாங்க.....உங்க கோவம் எனக்கு புரியுது...
( உங்க பதிவை தமிழ்மணம் தமிலிஷ் திரட்டிகளில் இணையுங்கள் .. உங்கள் site traffic அதிகரிக்கும்.....
www.tamilish.com www.tamilmanam.net )
இப்படி ஒரு ஆறுதல்க்கு தான் எழுதினேன் சுகுமார் சார்..
தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.. தமிலிஷ்லும் இணைத்து விடுகிறேன்....
அவசியமான ஆதங்கம்..
வாழ்க்கைக்காகதான் வேலையே தவிர.. வேலைக்காக வாழ்க்கை இல்லை ..
சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வராதுங்க...:-)
வெளிநாட்டு சம்பளம்,வெளிநாட்டு வாழ்க்கையைத்தான் மதிக்கிறார்கள் மக்கள்!!
வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு கிடைக்கும் மரியாதையே வேறு.... என்ன செய்வது,......
ஸ்வர்ணரேக்கா சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வர்ராதுங்க...ஏர்கனவே சொன்ன நியாபகம்???.
வாங்க சிங்கக்குட்டி..
நீங்க சொல்றது சரிதான்..
வாங்க தேவன் மாயம்..
//வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு கிடைக்கும் மரியாதையே வேறு.... என்ன செய்வது,......//
உண்மை தான்...
:))
உடனே உள்ளூர்ல வெலை போகாத மாடுதான் அசலூர்ல போகுமாம். அப்படின்னு சொல்லியிருந்தீங்கன்னா அட்வைஸ் செஞ்சுருக்க மாட்டாங்க போல..
உள்ளூர்ல வேலை இல்லாம அவனவன் வெளிநாட்டுக்கு வந்து கஷ்டப்படுறோம். இதுல டாக்டர் சார் சொல்றது அக்கரைப்பச்சை கணக்காத்தான் இருக்குது.
அப்படில்லாம் டக்குன்னு பதில் சொல்லதெரியாம தான் ரொம்ப சங்கடமா போச்சு சென்ஷி...
இனிமே கத்துக்கறேன்....
வருகைகும், ஆறுதலுக்கும் ரொம்ப நன்றிங்க... தொடர்ந்து ஆதரவு தாங்க...
//உள்ளூர்ல வெலை போகாத மாடுதான் அசலூர்ல போகுமாம்//
wonderful :)
நாங்கெல்லாம் பிறந்த ஊர்ல சுத்திக்கிட்டு இருக்கற ஆட்கள்
"அய்யோ பாவமே, ஏன் மார்க் எதுவும் கம்மியா எடுத்துட்டாரா, நான் வேணும்னா என் கம்பெனில try பண்றேன்", னு சொல்லி இருக்கணும் நீங்க. உங்களுக்கு இதுல உடன்பாடு இருக்கா தெரியல...ஆனா நம்ம ஊர்ல, வயசுல பெரியவங்கனா அவங்க நாலும் தெரிஞ்சவங்கன்னு ஒரு தப்பான எண்ணம் இருக்கு.
தப்ப சுட்டி காட்டினா,"அகம் புடிச்ச கழுதை" னு ஒரு பட்டம் தான் மிஞ்சும்:(
btw (இதுக்கு இணையான தமிழ் வார்த்தை என்னனு தெரியல:(...) உங்க "வாங்க பதிவரே"னு சொல்லி கமெண்ட்ஸ் ஆரம்பிக்கற விதம் அருமை:)
வாங்க அனு..
ஹய்.. பழைய பதிவெல்லாம் கூட படிச்சிட்டீங்க போலிருக்கே...
அப்படில்லாம் பதில் சொல்லத்தெரிலீங்க... திரு திருன்னு முழிச்சுட்டு பதிவு தான் போட தெரிஞ்சுது..
// உங்க "வாங்க பதிவரே"னு சொல்லி கமெண்ட்ஸ் ஆரம்பிக்கற விதம் அருமை //
நம்ம கடையையும் நம்பி வர்றீங்கள்ல... அதான்ங்க..
Post a Comment