திருப்பதி - ஒரு Spiritual vacation
July 9, 2009
போன வாரம் திருப்பதி போயிருந்தேன்... அதை பத்தி எழுதணும்னா ஒரு பிளாக் ஃபுல்லா வேணும்... அதனால நான் ரசிச்ச சிலது மட்டும் இங்கே...
- மலை ஏற்றப்போ (படி வழியா) மக்களின் நம்பிக்கைகளை, செய்கைகளை கண்டிப்பா சொல்லணும்.. ஒரு 5000 படி இருக்கும்.. எல்லா படிக்கும் மஞ்சளும், குங்குமமும் வெச்சுக்கிட்டே போவாங்க(எல்லாரும் இல்ல, வேண்டிக்கறவங்க மட்டும்)... படியில்லாத இடத்துல அங்க இருக்கற போஸ்ட் கம்பத்துக்கு கூட மஞ்சளும், குங்குமமும் வெச்சுக்கிட்டு போயிருப்பாங்க... அதே மாதிரி சிலர் எல்லா படிலயும் விளக்கு ஏத்திட்டு போவாங்க.. ஒருத்தர் படில சூடம் வெச்சுக்கிட்டு போக, இன்னொருத்தர் candleல அதை ஏத்திக்கிட்டே போவாங்க... மலை ஏறதே கஷ்டம், இதுல முட்டி போட்டு சிலர் ஏறுவாங்க...
- மலை ஏற்றப்போ எனக்கு புடிச்ச இன்னோரு விசயம் தரிசன டிக்கெட் வாங்கற லய்னுக்கு பக்கத்துல இருக்கற கடைங்க... ஒரு 30 - 40 கடைங்க வரிசையா இருக்கும்.. எல்லா கடையும் ஒரே மாதிரி இருக்கும்.. ரெண்டே ரெண்டு கேஸ் அடுப்பு வெச்சுக்கிட்டு, அதுலயே மிளகாய் பஜ்ஜி, டீ, தோசை, இட்லி ன்னு பரபரப்பா வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருப்பாங்க...ஒட்டுமொத்த குடும்பமும் அந்த கடைல வேலை பாக்கும்.. இந்த கடைங்களை வேடிக்கை பாத்ததுல நேரம் போனதே தெரியல எனக்கு...
- மேல் திருப்பதில (திருமலை) தேவஸ்தானம் சார்பா அன்னதானம் போடுவாங்க... பெரிய பெரிய ட்ராலில கொண்டு வந்து சுடச்சுட சாப்பாடு போடுவாங்க.. குழம்பு, ரசம் எல்லாமே ட்ராலில தான்...வெளி கடைல ஆர்டர் செஞ்சு வெய்ட் பண்ற நேரத்துல இங்க சுடச்சுட சாப்பாடு போட்டு ..இலைய இழுத்து நம்ம வெளிலயும் தள்ளிடுவாங்க...ருசியா இருக்குமோ இல்லியோ, பசிக்கு அப்படியே கப கபன்னு சாப்பாடு உள்ள போகும் பாருங்க... ஆஹா... அந்த சுவையே தனி தான் போங்க...
- திருப்பதில தமிழ் படற பாடு இருக்கே... ரொம்ப கஷ்டங்க... அந்த ஊர் காரத்துக்கு கூட நம்ம கண்ல தண்ணி வராதுங்க ஆனா, தமிழ அவங்க படுத்தற பாட்ட பாத்தா கண்டிப்பா வருங்க... சில example.. திருடர்கள் உள்ளவர் ஜாக்கிரதை இலவச வுணவு வழங்குமிடம்
- சாமி பாத்துட்டு கீழ வரும்போது பஸ்ல வந்தோம்... கண்ணுக்கெட்டின வரை மனிதனின் காலடி படாத, பச்சை போர்வைகள்.... பாக்க கண் கோடி வேணும்.. ஒவ்வோரு திருப்பத்திலும், பஸ் டயர் கிரிச்சிடும் சத்தம் கூட அருமைங்க...
- இன்னிக்கு போனோம் சாமி கும்பிட்டோம், நாளைக்கு திரும்பி வந்தோம்ன்னு இல்லாம, ட்ராவல்க்கு (போக, வர) ரெண்டு நாள், மலை ஏறதுக்கு ஒரு நாள், மேல் திருப்பதில ஒரு நாள், கீழ் திருப்பதில ஒரு நாள்ன்னு போய்ட்டு வந்தா, இந்த Spiritual vacation ஒரு அருமையான அனுபவங்க.... நம்ம battery அப்படியே ஃபுல் recharge தான்....
3 கருத்துகள்:
பதிவு அருமை.
திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் வரும் அப்படின்னு எங்க பாட்டி சொல்லுவாங்க..
வாழ்த்துகள்.
வண்ணத்துபூச்சியாரின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல...
பயணங்கள் எப்போதுமே -செய்ய உதவவே செய்கின்றன. நானும் இதே போல் உணர்வதுண்டு. இந்த வருடம் நாங்களும் செப்டம்பர் மாதம் குற்றாலம் சென்றிருந்தோம். We enjoyed to the core.
எனது blog-ல் ஏலகிரி மற்றும் வேலூர் தங்க கோயில் பற்றி நானும் பயண கட்டுரைகள் எழுதி உள்ளேன். முடிந்தால் வாசிக்கவும்.
ஏன் தங்களின் பெரும்பாலான பதிவுகள் மிக சிறியவையாக உள்ளன? நீளத்தை சற்றே கூட்டலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
Post a Comment