காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

காக்கைக்கும்.....

October 24, 2009

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு - ரொம்ப சாதாரணமா, நாம அடிக்கடி சொல்ற இல்ல கேக்கற ஒரு வார்த்தை தான்...

மேம்போக்கா பார்த்தா... 'எப்படி இருந்தாலும் தாய்க்கு தன் குழந்தை உசத்தி தான்' ங்கற அர்த்தம் வந்தாலும், 'அவங்க அவங்க பொருள் (குழந்தையோ, பொம்மையோ, வேறு எதுவோ...)அவங்க அவங்களுக்கு உசத்தி தான் ' ங்கறதும் அர்த்தம்....

இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்... ஆனா...
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு - ன்னு சொல்லாம, காக்கை க்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ன்னு ஏன் சொல்றாங்க - ன்னு போன வாரம் தான் எனக்கு தெரிஞ்சுது...

இதுக்கு நான் ரூம்லாம்போட்டு யோசிக்கலங்க... எங்க வீட்டு மரத்த சும்மா அண்ணாந்து பாத்துட்டு இருந்தேன்.. அதில ஒரு காக்கா கூடு இருந்துச்சு.. என்னமோ தெரியுதேன்னு கொஞ்சம் எட்டி பாத்தப்ப தான்...இந்த அரிய சிந்தனை எனக்கு வந்துச்சு....

சாதாரணமா நாய்க்குட்டி, ஆட்டுக்குட்டி, மாட்டுக்குட்டி... சாரி .. கன்னுக்குட்டி, புலிக்குட்டி, கரடிக்குட்டி, ன்னு விலங்குகளின் குட்டிகளை பார்த்தாலே தூக்கிவெச்சு கொஞ்ச தோணும், குறைஞ்சபட்சமாய் தடவியாவது கொடுக்க தோணும்... ஆனா... இந்த காக்கா குஞ்ச பார்த்தா... அய்ய.. ச்சீ..ச்சீ.. உவ்வே... என்றேல்லாம் சொல்லி முகத்தை திருப்பிக்கொள்வோம்.....

நிஜமா சொல்றேன்ங்க... அவ்வளவு மோசம்... ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... காக்காய் கொள்ளை அழகுங்க....

உவமான உவமேயத்தையும் நம்ம முன்னோர்கள் நல்லாதான் சொல்லியிருக்காங்க....ன்னு அப்பத்தான் எனக்கு தோணுச்சு.... அத அப்படியே உங்ககிட்ட பகிர்ந்துக்கலாமேன்னு....

8 கருத்துகள்:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு:)!

சிங்கக்குட்டி said...

//மரத்த சும்மா அண்ணாந்து பாத்துட்டு//

அம்மாடி... நம்ம திருச்சில இப்படி ஒரு "நியுட்டன்" இருக்கத கண்டுகாம இந்த மீடியா எல்லாம் என்னங்க பண்ணுது?

//கன்னுக்குட்டி, புலிக்குட்டி, கரடிக்குட்டி, ன்னு விலங்குகளின் குட்டிகளை பார்த்தாலே தூக்கிவெச்சு கொஞ்ச தோணும்//

என்னங்க இது சிங்கக்குட்டிய விட்டுடிங்க :-) சும்மா :-) சும்மா :-)

பதிவு நல்லா இருக்கு, நல்லா சிந்தனை ஸ்வர்ணரேக்கா.

R.Gopi said...

//நிஜமா சொல்றேன்ங்க... அவ்வளவு மோசம்... ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... காக்காய் கொள்ளை அழகுங்க....//

மெய்தானுங்கோ ஸ்வர்ணரேக்கா...

நீங்கள் பார்த்து அறிந்ததை இங்கு பகிர்ந்ததில், நாங்கள் படித்து அறிந்தோம்...

பகிர்தலுக்கு நன்றி....

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க ராமலக்ஷ்மி....

நன்றிங்க...

ஸ்வர்ணரேக்கா said...

//அம்மாடி... நம்ம திருச்சில இப்படி ஒரு "நியுட்டன்" இருக்கத கண்டுகாம இந்த மீடியா எல்லாம் என்னங்க பண்ணுது?//

பரவால்ல விடுங்க சிங்கக்குட்டி... எனக்கு புகழ்ச்சி பிடிக்காது... சிம்பிளிகுட்டி தான் பிடிக்கும்... அதான் இந்த மீடியா எல்லாம் தள்ளி இருக்காங்க...

//என்னங்க இது சிங்கக்குட்டிய விட்டுடிங்க//

அடடா... மறந்தே போயிட்டேன் பாருங்க... சரி விடுங்க.. அதுக்கு ஒரு பதிவு போட்ருவோம்...

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க கோபி...

//நீங்கள் பார்த்து அறிந்ததை இங்கு பகிர்ந்ததில், நாங்கள் படித்து அறிந்தோம்...//

அதாங்க... அதாங்க... யான் வேண்டுவதும் அதே....

அகல்விளக்கு said...

//காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு - ன்னு சொல்லாம, காக்கை க்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ன்னு ஏன் சொல்றாங்க //

Semmayana Kandupidippu.

Nobal-ku sibarisu pandrean

thanks for sharing.

Vazhga kakkais..

Shankaran er said...
This comment has been removed by the author.

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP