வடை போச்சே!!!!
October 16, 2009
கொஞ்சம் (ஒரு மூட்டை) பட்டாசு, கொஞ்சூண்டு (ஒரு கூடை) பலகாரம், எண்ணை குளியல், ஒரு 5 - 6 புது டிரெஸ்ன்னு தீபாவளி சாதாரணமாதான் போகும்.... ஆனா தீபாவளிக்கு முந்தைய பிரப்பரேசன்கள் எல்லாம் பார்த்தா .. அப்பப்பா...
துணிக்கடை, நகைக்கடை, ப்ளாட்பாரக்கடைகள், ட்டெய்லர் கடைன்னு ஆரம்பிச்சு காய்கறி கடை, ஸ்வீட் கடை, மிக்ஸி ரிப்பேர் கடை, இன்னும் உலகில் எத்தனை வகை கடைகள் உண்டோ, அத்தனையிலும் கூட்டம், கூட்டம், கூட்டமோ கூட்டம்... ரயில், பஸ்ல எல்லாம் அந்த வாகனங்கள் கொள்ளாத கூட்டம்....
என்னவோ ஒரு பெரிய economic turn over போன்று, மக்கள் கூட்டம் கூட்டமாய் பொருட்களை வாங்குவதும், பார்ப்பதும்.... அடடே... தீபாவளிக்கு அடுத்து வரும் நாட்களில் அந்த கடைகளும், தெருக்களும் வெறிச்சோடி (அவ்வளவாய் கூட்டம் இல்லாமல்) இருப்பதும்....
இதுவல்லவோ பண்டிகை.....
இதையெல்லாம் விட பெரிய சந்தோசம் லீவ் தான்...
தீபாவளி அன்னிக்கு ஒரு நாள் லீவ்.. அதுக்கு முன்னாடி ஒரு நாள் லீவ்ன்னு... அப்படி இப்படின்னு ஒரு வாரம் 'இந்த வாரம் தீபாவளி வாரம்' ன்னு ஜாலியா இருக்கும்... ஆனா இந்த வருஷம் சனிக்கிழமையில வந்ததுல ' தீபாவளி வாரம் ' போய் 'வீக்எண்ட் தீபாவளி' ஆனதுல வடை போச்சே!!!! பாணியில் லீவ் போச்சே!!!! என்று எண்ணவே தோன்றுகிறது.....
சரி.... வீக்எண்ட் தீபாவளியோ, தீபாவளி வாரமோ.... வாசகர்களுக்கும், அனைத்து பதிவர்களுக்கும்....
8 கருத்துகள்:
Vaazhthukkal Ungalukkum.........
Tamil font work agala
Athan thanligh. Sorry........
ஸ்வர்ணா, எப்படி இருக்கிங்க...ரொம்ப நாளாக ஆளயே கானும்..
உங்களுக்கு எங்களுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி
வாழ்த்துக்கள்
ஸ்வர்ணரேக்கா
ரொம்ப நாள் கழிச்சு பதிவு எழுதி இருக்கீங்க... ஆனாலும், ஒரு இனிய பதிவோடு வந்து இருக்கீங்க...
உங்களுக்கும், குடும்பததார்க்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
என் தீபாவளி சிறப்பு பதிவு வந்து பாருங்கள்... உங்களுக்கான சிறப்பு பரிசினை பெற்று செல்லுங்கள்...
நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஸ்வர்ணரேக்கா.
ஒரு கூடை பலகாரம் கம்மியா இருக்கே? :-)
நன்றி... அகல் விளக்கு
வாங்க கீதா.... ஹி.. ஹி... திடீர்ன்னு புடுங்க வேண்டிய ஆணிகள் அதிகமாயிட்டதால...கொஞ்ச நாள் வர முடியல....
நன்றி SUREஷ் அண்ணே....
வாங்க கோபி...
// ரொம்ப நாள் கழிச்சு பதிவு எழுதி இருக்கீங்க... ஆனாலும், ஒரு இனிய பதிவோடு வந்து இருக்கீங்க.//
நன்றிங்க...
வாங்க.. சிங்கக்குட்டி... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
நான் டயட்டில் இருக்கிறேனாக்கும்...அதான்... ஒரே ஒரு கூடை பலகாரம் மட்டும்.... ஹி.. ஹி...
தீபாவளி சிறப்பு பதிவு சிறப்பாக இருந்தது......... தீபாவளி வாழ்த்துக்கள்
வாங்க ஊடகன்...
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
Post a Comment