காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

ஒண்ணுமே புரியலயே....!!!

September 5, 2009

என்னதான் தமிழ் தாய் மொழியா இருந்தாலும், தமிழ்ல பேசவும் எழுதவும் தெரிந்திருந்தாலும்... தினமும் நியூஸ் கேட்கும் போதும், பேப்பர் படிக்கும் போதும் நிறைய வார்த்தைகள் எனக்கு புரியவேமாட்டேங்குதுங்க... சில சமயம் வாக்கியங்களே கூட புரிய மாட்டேங்குது... சில சாம்ப்ள் குடுத்திருக்கேன்... பாருங்க...

  • நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது... (உத்து உத்து பார்த்தாலும், உன்னிப்பாக பார்த்தாலும் அதனால் விளையும் பயன் என்னவென்று யானறியேன் பராபரமே!! )

  • ABC விஷயத்தை செயல்படுத்த வேண்டுமென்று XYZ மாநாட்டில் வலியுறுத்தபட்டது

  • ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை, விலைவாசி ஏற்றத்தை கண்டித்து எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தின..

  • YYY கட்சி தலைவர் ஆனா ஊனா விஷயத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்...

  • இதுகாறும் அவர் மக்களுக்கு சேவை செய்த்தை பாராட்டி Mr. XXX / Ms. ZZZ க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது..

  • வறுமையை ஒழிப்பதற்கு, கட்சியில் / சபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது..

  • சபாநாயகராக / பிரதமராக / ஜனாதிபதியாக / ஊராட்சி தலைவராக, கட்சி தலைவராக இவர் பதவியேற்றதால் பெண் குலமே / குறிப்பிட்ட சமுதாயமே பெருமை படுகிறது..
இந்த லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு... இதுல உங்க யாருக்காவது ஏதாவதோ, இல்ல முழுசாவோ புரிஞ்சா... தயவு செஞ்சு சொல்லுங்க சாமி...

13 கருத்துகள்:

Sukumar said...

Nice analysis.... keep rocking...!

அகல்விளக்கு said...

அதெல்லாம் ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

சிங்கக்குட்டி said...

இவுங்க அவுங்களுக்கு செய்றதும், அவுங்க இவுங்களுக்கு செய்றதும், மத்தவுங்க எல்லாம் யாரோ இதுக்காக எதுவோ செய்யுறாங்கன்னு நினச்சுகிட்டு, அவுங்களுக்கும் இவுங்களுக்கும் மாத்தி மாத்தி குத்தத்தான்.

இவுங்க "ஆக"
அவுங்க "எக"
மத்தவுங்க "இவா" ஸாரி "பொம".

இப்ப முழுசா புரிஞ்சுதா?

ப்ரியமுடன் வசந்த் said...

எல்லாமே கண்கட்டிவித்தைகள்தாம்......

R.Gopi said...

//தினமும் நியூஸ் கேட்கும் போதும், பேப்பர் படிக்கும் போதும் நிறைய வார்த்தைகள் எனக்கு புரியவேமாட்டேங்குதுங்க... சில சமயம் வாக்கியங்களே கூட புரிய மாட்டேங்குது//

அதே அதே... நமக்கு தமிழ் மறந்து போச்சா?? இல்லேன்னா, அவங்க பேசற தமிழ் வேறயா?? ஒண்ணுமே புரியல...

//ABC விஷயத்தை செயல்படுத்த வேண்டுமென்று XYZ மாநாட்டில் வலியுறுத்தபட்டது.//

சூப்பர்.... ஹா...ஹா...ஹா....

//இதுகாறும் அவர் மக்களுக்கு சேவை செய்த்தை பாராட்டி Mr. XXX / Ms. ZZZ க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது..//

ஆ...ஹா... ரீஜண்டா எங்க இளைய தளபதிக்கு கூட குடுத்தாங்க....

//இந்த லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு... இதுல உங்க யாருக்காவது ஏதாவதோ, இல்ல முழுசாவோ புரிஞ்சா... தயவு செஞ்சு சொல்லுங்க சாமி...//

ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு... ஏற்கனவே இத படிச்சு, படிச்சு நீங்க சொன்ன மாதிரி "காதுல புகை" வர்றது இதுவரைக்கும் நிக்கல.... இதுல இன்னுமா?/ அய்யோ..

ஸ்வர்ணரேக்கா said...

ரொம்ப நன்றி சுகுமார் அண்ணே!!!

கரெக்டா சொன்னீங்க அகல்விளக்கு....

வாங்க வசந்த்...
// எல்லாமே கண்கட்டிவித்தைகள்தாம்...... //
உண்மை.. உண்மை...உண்மையை தவிர வேறில்லை...

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க சிங்ககுட்டி..
இப்ப முழுசா புரிஞ்சுதாவா?

இதெல்லாம் நியாயமா..? சாமி சத்தியமா புரியலங்க...

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க கோபி...

//அதே அதே... நமக்கு தமிழ் மறந்து போச்சா?? இல்லேன்னா, அவங்க பேசற தமிழ் வேறயா?? ஒண்ணுமே புரியல...//

ஆமாங்க ஒண்ணுமே புரியல...


//ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு...//

ஏதோ.. என்னால முடிஞ்ச ஒரு சின்ன சேவைங்க...


ஹி.. ஹி.. ஹி..

GEETHA ACHAL said...

ஸ்வர்ணா,
இதுவரை எனக்கு இதான் இப்படியோ என்று நினைத்து கொண்டு இருந்தேன்..

இப்ப தான் நிம்மதி...எனக்கும் துணையாக நீங்களும் இருக்கின்றிங்க...அப்ப...

Shankaran er said...

இதெல்லாம் உங்களுக்கு புரியலையா .... அவ்வளவு அப்பாவியா நீங்க..

பரவாயில்ல.. உங்கள மாதிரி சில பேர் இருக்கிறதுனாலதான் மழையே பெய்யுது ..

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க பீமா அண்ணே!! என்ன ரொம்ப நாளா காணோம்..

//அவ்வளவு அப்பாவியா நீங்க.. //

நான் ரொம்ப நல்லவ............. அண்ணே!!

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க கீதா...

//இதுவரை எனக்கு இதான் இப்படியோ என்று நினைத்து கொண்டு இருந்தேன்..

இப்ப தான் நிம்மதி...எனக்கும் துணையாக நீங்களும் இருக்கின்றிங்க...அப்ப..//

அப்பாடா இப்பத்தான் நிம்மதியா இருக்கு...

சிங்கக்குட்டி said...

ஹலோ ஒரு மாசத்துக்கு மேல ஆகிரிச்சு இன்னுமா "ஒண்ணுமே புரியலயே....!!! "???!!

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP