உதிரிப்பூக்கள் – டிசம்பர் 21, 2010
December 21, 2010
யானைக்குட்டி
கோவை வனச்சரகத்தில் பிறந்த சில மணிநேரங்களிலேயே யானைக்குட்டி ஒன்று கைவிடப் பட்டுள்ளதாம்.. அதை அதன் தாயுடன் சேர்க்க நடந்த முயற்சிகள் (மனித வாசனை பட்டால், யானைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், யானையின் சாணத்தை பூசிக்கொண்டு, அந்த குட்டியை பராமரித்துள்ளார்கள்) தோல்வியடைந்து, அந்த குட்டி வண்டலூரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது..
இது எல்லாருக்கும் தெரிஞ்ச செய்திதான்… ஆனால் எனக்கு எரிச்சல் வந்தது தினமலர் பாத்து தான். அந்த யானை குட்டி ‘சொகுசாக’ காரில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டதாம். என்ன ‘சொகுசு’!!! தாயை பிரிந்து, வாழ போராடும் ஒரு குட்டி, வண்டியில் ஏற்றி அனுப்பபட்டால், அதுக்கு பேரு சொகுசா???
விஜயகுமார், வனிதா நியூஸ் கவர் பண்றதைக் காட்டிலும், இந்த மாதிரி செய்திகளையாவது இந்த பத்திரிக்கைகள் அதிகம் போடலாம்… அந்த வகையில ஹிந்து பத்திரிக்கை பரவாயில்லை…
-----------------------------------------------------------------------------------------------------------------------------
வந்தார்கள் வென்றார்கள்
மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ படித்தேன். நல்லாயிருந்தது. (1995ல வந்த புத்தகம். இப்பத்தான் படிக்கமுடிஞ்சது… இவ்வளவு நாளா எப்படித்தான் மிஸ் செய்தேனோ!!!)
பெட்டி செய்திகள் ஸ்வாரஸ்யமாக இருந்தது…
அரச பதவிக்கு போட்டியாக இருப்பவர்களின் கண்களை நோண்டியெடுப்பார்களாம்… இல்லைன்னா பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பிய கண்ல விட்டு கண்ணைக் குருடாக்குவார்களாம் என்ன கொடுமை சார் அது?
அதில் போரில் வென்ற பின், பிடிபட்ட ஆயிரக்கணக்கான கைதிகளை பார்த்து தைமூர் சொல்லும் ஒரு டயலாக்…
‘இதில் கட்டடக் கலைஞர்களையும், ஓவியர்களையும், சிற்பிகளையும் நம்முடன் கொண்டு செல்வோம். எதற்கும் உபயோகமில்லாத
க(ம)ற்றவர்கள் தலைகள் வழக்கம்போல் சீவப்படலாம்’
க(ம)ற்றவர்கள் தலைகள் வழக்கம்போல் சீவப்படலாம்’
அந்த காலத்தில் அவர்களுக்கு தான் மவுஸ்… இந்த காலத்தில் ஓவியர்களையும், சிற்பிகளையும் நாம் மதிப்பதேயில்லை…
-------------------------------------------------------------------------------------------------------------------------------
தெளிவு, திறமை, நேர்மை ஆகியவற்றின் மொத்த உருவமாக பிரதமர் மன்மோகன் சிங் இருக்கிறார்
--- இப்படி இந்த வார காமெடியை சிரிக்காமல் சீரியசாக சொல்லியிருப்பவர் வேறு யாருமில்லை… சோனியா காந்தி தான்..
மன்னன் படத்தின் இந்தி பதிப்பு பார்த்தேன். தனுஷ், ஜெயம் ரவி மட்டும் இல்லை, ரஜினி, கமல், MGR, சிவாஜி ஆகியோரின் படங்களும் பெரும்பாலும் காப்பி தான். என்ன ஹிந்தியில இருந்து இருக்கும்.
கொஞ்சம் ZEE cinema, Star Gold சேனல்கள் பார்த்தால் தெரிந்துபோய்விடும்.
என்னதான் ஸீன் பை ஸீன் எடுத்திருந்தாலும் ஒருவர் செய்ததை இன்னோருவரால் செய்யவே முடிவதில்லை…
எங்க வீட்டுபிள்ளை படம் கன்னடத்தில் விஷ்ணு வர்த்தன் செய்திருப்பார். அவர் நல்ல நடிகர் தான். சந்தேகமில்லை. ஆனால் அந்த சாட்டையை சுழற்றிக்கொண்டு MGR பாடும் ‘நான் ஆணையிட்டால்’ பாட்டை நின்ற இடத்திலேயே நின்று கொண்டு விஷ்ணு வர்த்தன் செய்யும் போது, கை தன்னியல்பாக சேனலை மாற்றவே செய்யும்.
Back to மன்னன் ஹிந்தி பதிப்பு.. ஸ்ரீதேவி தான் விஜயசாந்தி கேரக்டரில். அந்த மிடுக்கும், அகங்காரமும் ஸ்ரீதேவிக்கு வரவில்லை… கண்ணில் கோபம் வந்தாலும், body language சரியாக வரவில்லை அவருக்கு…
ரஜினியை அப்பாயிண்ட் செய்யும் சீனில்
‘நீங்க ஜிஜிபாய் கம்பெனில வேலை பாத்தீங்களோ, இல்லை பாஜிபாய் கம்பெனில வேலை பாத்தீங்களோ எனக்கு கவலையில்லை என்று ஆரம்பித்து நெத்தியில பட்டை, உத்திராட்ச கொட்டை’ என்று instruction கொடுப்பதாகட்டும், செக்ரட்டரி எங்கே என்று கேட்கும் ரஜினியிடம் கை சொடுக்குவதாகட்டும், இல்லை தியேட்டரில் ரஜினிக்கும் கவுண்டமணிக்கும் மோதிரத்தையும், செயினையும் அப்படி அலட்சியமாக கொடுக்கும் (போடும்) ஸீனாகட்டும் விஜயசாந்தி தான் டாப்பு.. சான்சேயில்லை அவ்வளவு நல்லா செய்திருக்கிறார்..
8 கருத்துகள்:
உதிரிப்பூக்கள் அருமை.. தொடந்து நிறைய தகவல்களை தொகுத்து கொடுங்க...
வருகிற 26.12.2010 அன்று ஈரோட்டில் வலைப்பதிவர் சங்கமம் நடக்கிறது உங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்...
தினத்தந்தியிலும் கிட்டத்தட்ட இது மாதிரி தான் ந்யூஸ். யானைக்குட்டிக்கு இரங்கும் மனித நேயத்தை தான் நாம் பாராட்ட வெண்டும். வண்டலூர் ஜுவில் இன்னொரு யானைக்குட்டி உரிகம் இதை வரவேற்றதைப் பார்த்தீர்களா? (யானை நேயம்!!)
வாங்க சங்கவி,
நன்றிங்க...
ஈரோட்டில் வலைப்பதிவர் சங்கமத்துக்கு அழைத்ததுக்கு ரொம்ப நன்றிங்க...
வர்றதுக்கு முயற்சி பண்றேங்க...
வாங்க மாதவி,
//யானைக்குட்டிக்கு இரங்கும் மனித நேயத்தை தான் நாம் பாராட்ட வெண்டும்//
ஆமாங்க.. வாஸ்த்தவம் தான்..
//வண்டலூர் ஜுவில் இன்னொரு யானைக்குட்டி உரிகம் இதை வரவேற்றதைப் பார்த்தீர்களா?/
--ஆமாம்.. படித்தேன்..
அந்த யானை நேயம் தான் குட்டியை காப்பாத்துது...
யானைக்கு இருக்கும் யானைநேயம்?! போல் மனிதனுக்கு மனிதநேயங்கள் இல்லையே :(
அதென்னமோ சரிதான் நம்ம எம்ஜிஆர் , ரஜினி இவங்கல்லாம் தனி தான்
சுப்பர்
நல்லா தொகுப்பு. மன்னன் சுட்ட படமா இருந்தா என்னங்க. நாங்கல்லாம் ஹிந்தி படம் பாக்க போறோமா என்ன. தலைவரு அம்மாவை ரெண்டு கையாலையும் தூக்கிட்டு போனதை பாத்ததுக்கு அப்புறமா தான் நெறைய பேரு. அம்மாவை மதிக்க ஆரம்பிச்சாங்க.
சுவாரசியமான தொகுப்பு..
Post a Comment