காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

காதலும் கத்திரிக்காயும்

December 3, 2010

‘சுபத்ராம்மா…’
‘பேஃன் ரிப்பேர் பண்ணியாச்சும்மா’
‘செக் பண்ணிக்கோங்க’
‘இதோ வர்றேன்… ப்பா..’
‘சீக்கிரம்மா.. இன்னும் ரெண்டு வீட்டுக்கு போகணும்மா.. நீங்க அவசரமா சரி செய்யணும்ன்னு கூப்பட்டதால தான் வந்தேன்..’
‘இதோ ஆச்சுப்பா… ஐயா இன்னிக்கு ஊர்லிருந்து வந்துருவாரு.. அதான் அவசரமா சரி செய்ய சொன்னேன். சரி நல்லா ஒடுது.. ஓகேப்பா..’
‘சரி வரேம்மா…’


அப்பா… பேஃன் ரிப்பேர் பாத்தாச்சு.. பாவம்… ஒரு வாரம் ஆபிஸ் விஷயமா டூர் போயிட்டு இன்னைக்குத்தான் அவர் வர்றார்.. வந்ததும் கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா டிவி பாப்பாரு.. அப்ப போயி பேஃன் ஓடலன்னா.. அதான் எப்படியோ ஆளைக் கூப்பிட்டு சரி செஞ்சாச்சு…

ஐய்யயோ!!! அடுப்புல தீயுதே!!!

வெண்டைக்காய் பொறியல்ன்னா ரொம்ப இஷ்ட்டம் அவருக்கு.. ஆனா இப்படி சட்டிய தீச்சிட்டமே… சரி வேற பாத்திரத்தில் செய்வோம்..
அப்படியே கொஞ்சம் கொள்ளு ரசமும் வைப்போம்.. அவருக்கும் பெரியவ திவ்யாவுக்கும் புடிச்ச ஐட்டம்..

பாவம் மனுசன்… ஒரு வாரமா ஹோட்டல் சாப்பாடு சாப்ட்டு அலுத்து போயிருப்பாரு.. ஒரு புடி பிடிக்கறமாதிரி செஞ்சு வெக்கணும்..

--------
சீக்கிரம் சமையலை முடிச்சிட்டு வீட்டை க்ளீன் செஞ்சு
வைக்கணும்.. நியூஸ் பேப்பர்ல்லாம் எடுத்து வெக்கணும்.. ஒரு வாரத்துக்கும் சேர்த்து ஏதோ எக்ஸாமுக்கு படிக்கறாப்ல பேப்பர படி படின்னு படிப்பாரு..

வீட்ல பேப்பர் படிக்கறத தவிர வேற ஒண்ணும் செய்யறதில்லைன்னாலும், இன்னிக்கு அவர ஒண்ணுமே சொல்லக்கூடாது.. 

நமக்கும் வாய் கொஞ்சம் நீளம் தான்.. டக்குன்னு டக்குன்னு சண்டை போடறேன்.. பாவம் அவரு..



ரெண்டு மணிக்கு வரேன்னு சொன்னாரே.. மணி மூன்றை ஆச்சே.. இன்னும் காணமே…
போஃன் பண்ணி பாப்பமா…
வெளியில போன மனுசன் வீடு வந்து சேர்ற வரைக்கும் பயமாத்தான் இருக்கு.. தினமும் நியூஸ் பேப்பர் பாத்தாலே டென்ஷனாகுது…
காலிங்பெல் சப்தம் கேட்குதே.. வந்துட்டாரு போல..

‘சுபா’
‘ஏங்க… இவ்வளவு லேட்டு..?’
‘பஸ் கிடைக்கலம்மா…’
'வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதாங்க?'
'ம்.. ஆச்சும்மா'
‘இந்தா.. இதை உள்ள வை..’
‘என்னங்க இது…?’
பிள்ளைங்களுக்கு ஸ்நாக்ஸா?
‘இல்லை மா.. வர்ற வழியில கத்திரிக்காய் வித்துட்டு இருந்தான்.. நல்லாயிருந்துச்சு.. அதான் ஒரு கிலோ வாங்கினேன்’
‘ஏங்க.. எதுக்கு இப்ப கத்திரிக்காய் வாங்கிட்டு வந்திருக்கீங்க.. ?’

‘ஏற்கனவே பிஃரிட்ஜ்ல அரை கிலோ கத்திரிக்காய் இருக்கு.. ஒரு வாரம் கழிச்சு வர்றீங்களே!!! பிள்ளைங்களுக்கு சாப்பிட ஒண்ணும் வாங்கிட்டு வராம… இத வாங்கிட்டு வந்திருக்கீங்களே!!!’
‘எப்படித்தான், இப்படி ஏற்கனவே இருக்கற காயா கரெக்ட்டா பாத்து வாங்கிட்டு வருவீங்களோ!!!!’
‘கொஞ்சமாச்சும்………………….’
‘---------------------------------------‘
‘------------------------------------------------------------------------------‘
‘-----------------------------------------------------------------------------------'
(Thanks to Ifood.tv for the image)

9 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com said...

நல்லா இருக்குங்க உங்க கத்திரிக்காய்...

இன்னும் எதிர்பார்க்கிறோம்...

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க சங்கவி...

//நல்லா இருக்குங்க உங்க கத்திரிக்காய்//

நன்றிங்க..

//இன்னும் எதிர்பார்க்கிறோம்//

நிஜமாவா...?

எஸ்.கே said...

எழுத்து நடை நன்றாக உள்ளது! பதிவும் நன்று!

கத்திக்காய் ரொம்ப பளபளப்பா புதுசா இருக்கு!:-)

எல் கே said...

ஹிஹி வீட்டுக்கு வீடு வாசப்படி. இதுக்குதான் போன் பண்ணி கேட்டுகிட்டு வாங்குவேன் நான்

சிங்கக்குட்டி said...

பெண் மனசை பெண்ணால்தான் புரிந்து கொள்ள முடியும் என்று அடிக்கடி கேள்வி பட்டு இருக்கேன், அது உண்மைதான் போல :-).

அதெப்படி எல்லாருமே ஒரேரேரேரே... மாதிரி இருக்கீங்க?

ஆனாலும் பகிர்வு நல்லா இருங்குங்க, நன்றி :-)

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க SK...

//எழுத்து நடை நன்றாக உள்ளது! பதிவும் நன்று! //

--- நன்றிங்க..

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க LK...

//இதுக்குதான் போன் பண்ணி கேட்டுகிட்டு வாங்குவேன் நான்//

-- எதை? பாட்டு வாங்கறதையா? இல்ல காய் வாங்கறதையா??
ஹி... ஹி...

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க சிங்கக்குட்டி...

//அதெப்படி எல்லாருமே ஒரேரேரேரே... மாதிரி இருக்கீங்க? //

நீங்கள்லாம் ஒரேரேரேரே மாதிரி இருக்கப்ப... நாங்க மட்டும் என்ன செய்யறதாம்...?

ஹா... ஹா... ஹா...

Kavinaya said...

ரசித்தேன் :)

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP