காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

வந்தார்கள்... சுரண்டினார்கள்

January 6, 2011

சமீபத்தில் தான் மதனின் வந்தார்கள் வென்றார்கள்படிக்க முடிந்தது. ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொன்னா அதுசூரியனுக்கே டார்ச்அடிக்கற மாதிரி

குட்டி குட்டிப் பெட்டி செய்திகளுடனும், சுவையான எழுத்து நடையுடனும் இருக்கும் அந்த புத்தகத்தை விமர்சனம் பண்ணப்போறதில்லை நான்.

அந்த காலத்துல நடந்த சம்பவங்களையே இப்படி சுவையா எழுதமுடியும்ன்னா இந்த காலத்துல நடக்கறத எழுதினா!!! அதாவது கி.பி 2100ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்ததை கி.பி.3500 ல் எழுதினால் எப்படியிருக்கும்ங்கற ஒரு கற்பனை தான் இந்த பதிவு

வந்தார்கள்.. வென்றார்கள்’ – அதாவது படையெடுத்து வந்தார்கள், போரில் வென்றார்கள். இங்கே நான் எழுதப்போவதுவந்தார்கள்.. சுரண்டினார்கள்’, அதாவது, ஆட்சிக்கு வந்தார்கள், பணத்தை சுரண்டினார்கள்.

ரெடி ஸ்டார்ட் மியூசிக்… !!!! (imagine கவுண்டமணி வாய்ஸ்)
-------------------------------------------------------------------------------------------
மன்னராட்சி மக்களை கஷ்ட்ப்படுத்துகிறது என்று சொல்லிகி.பி. 2000மாம் ஆண்டுகளில் இந்தியாவில் மக்களாட்சி என்ற ஒன்றை கொண்டுவந்தார்கள்அதாவது மன்னருக்கு பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியே மக்களை ஆள்வது என்பது தான் அது.. 

ஆனால் மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தது மாறி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் பரம்பரையில் வந்தவர்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தது தான் நடந்ததே தவிர வேறோன்றும் வித்தியாசமில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியே ஆனாலும் அவர்கள் செய்த அட்டூழியங்களை மக்களால் தட்டிக்கேட்க முடியாமல் இருந்தது தான் மக்களாட்சியின் துரதிருஷ்ட்டமாக இருந்தது..
-------------------------------------------------------------------------------------------
இதில் 10 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, தனது உழைப்பு அனைத்தையும் தனது குடும்பத்திற்காகவே செலவிட்டார். குடும்பம் என்றால் மகள், மகன் மட்டுமல்ல, மகள் வயிற்று கொள்ளு பேத்தி, மாமன் மகள் பெற்ற எள்ளு குழந்தைகள், அவர்தம் செல்ல வளர்ப்பு பிராணிகள் எல்லாம் அடங்கும்…

அவரை பற்றி சில தமாஷ் செய்திகள்
10 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, பாராட்டுக்கு என்றுமே மயங்குபவராக இருந்துள்ளார்அவர் எந்தவொரு செயல் செய்தாலும், பாராட்டி விழா எடுத்து, விருது வழங்குவதை, அவரிடம் காரியம் சாதித்து கொள்பவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இப்படி எதற்கெடுத்தாலும் விழா எடுத்து எடுத்து கடைசியில் அவர் தினமும் காலையில் இட்லியும், தாளிக்காத சட்னியும் சாப்பிடுவதை கொண்டாடி பிரம்மாண்ட விழா எடுத்து, அவருக்கு
இட்லி சாப்பிடும் இளந்தலைவர்!!!’ (அப்போது அவருக்கு வயது 120)
என்றும்
தாளிக்காத சட்னி சாப்பிடும் தன்மான சிங்கம்’ 
என்றும் விருதுகள் வழங்கப்பட்டன என்று குறிப்புகள் சொல்கின்றன

மக்களை உழைக்கும் வர்க்கமாக்காமல், அடிப்படை வசதிகள் செய்து தராமல், இலவசங்கள் அள்ளித் தந்து, மண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த பெருமையும் அவரையே சாரும் என்று வரலாற்று ஆசிரியர் சோ என்பவர் தெரிவிக்கிறார்.

ஆம் அவரது ஆட்சியில் மக்களுக்கு டிவி என்கிற சாதனத்தில் ஆரம்பித்து, அன்றாட சமையலுக்கு தேவையான கருவேப்பிள்ளை, கொத்துமல்லி வரை இலவசமாக தரப்பட்டது

யாரையும் (எந்த கட்சியையும்) எளிதில் பகைத்து கொள்ளாததும், சலுகைகளை வாரி இறைத்ததும், அதை அடிக்கடி விளம்பரப்படுத்திக் கொள்வதும், ஜெயலலிதா கட்சியைக் காட்டிலும், நல்ல கட்டுக்கோப்பான கட்சியை நடத்தியதும், அவரது ப்ளஸ்கள்..

ஆனால் அவர் பார்த்து பார்த்து வளர்த்த குடும்பத்தாலேயே அவரது ஆட்சி சரிந்தது என்பது தான் வேதனையான தமாஷ்..
----------------------------------------------------------------------------------------------------------------------------------
விருது வாங்கி கருணாநிதி தான் அப்படி என்றால், அவருக்கு சக்கிவாய்ந்த எதிரியாளியாக கருணாநிதியாலேயே கருதப்பட்ட ஜெயலலிதா என்பவர் தான் இமாலய ஊழல்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட அம்மையார்.

மேலும் அவர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம், பேரணி, அறிக்கை என்று தனது இருப்பைக் காட்டிக்கொண்டவர். அதன் பயன் என்னவெனில் குழந்தைகள் வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் கூட பெற்றவர்கள் அந்த குழந்தையை பார்த்து

‘ஏன்டா இப்படி அழுது போராட்டம் செய்யற’ என்று சொல்லும் அளவுக்கு போய்விட்டது…

7, 8 மொழிகள் அறிந்திருந்தும், நல்ல ஆளுமைத் திறன் இருந்தும், கட்சியில் யாரையும் வளரவிடாமல் இருந்ததும், தான் செய்த ஊழலை மறைக்க தெரியாததும், மக்களிடமும், மீடியாக்களிடமும், தன்னை சுற்றியிருப்போரிடமும் நீக்குபோக்கு காட்டத்தெரியாமல் இருந்ததும் அவரது சரிவிற்கு முக்கிய காரணம்… என்று 2025ல் தான் எழுதிய நூலில், வரலாற்று ஆசிரியர் மதன் கூறுகிறார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ராஜா காலத்தில் ஆட்சிகள் மாறியதும், பழுக்க காய்ச்சிய வாளை அரசியல் எதிரிகளின் கண்களில் பாய்ச்சி, அவர்கள் மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்வார்கள். அது கி.பி.1600களில். 

ஆனால் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட கி.பி. 2100களில் அரசியல் எதிரிகளை வழக்கு போட்டு அவர்கள் மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்வார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னும் இப்படி நிறைய எழுதிக்கொண்டே போகலாம்.. 


15 கருத்துகள்:

அமுதா கிருஷ்ணா said...

ஆகா இங்க பாருங்கப்பா புது வரலாற்று ஆசிரியர் நம்மிடையே..சபாஷ்.

அகல்விளக்கு said...

யப்பே....

சூப்பரு போங்க....

:-)

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க அமுதா...
//புது வரலாற்று ஆசிரியர் நம்மிடையே//

என்ன வெச்சு காமெடி பண்ணலியே!!!

//சபாஷ்//
நன்றிங்க..


வாங்க அகல்விளக்கு..
நன்றிங்க..

middleclassmadhavi said...

'நான்' ஆட்சி செய்த போது என்று ஆரம்பிக்கும் அறிக்கை ராணிக்கும், பதிலுக்கு- அடுத்தவருக்கு கேள்வி கேட்கும் சுதந்தரம் கூடக் கொடுக்காமல் தானே ஒரு 'கேள்வி - பதில்' அறிக்கை தரும் நிதி குடும்பத் தலைவருக்கும் யார் ஊழல் பெரியது என்ற போட்டியை வேடிக்கை பார்த்த மக்களும் வரலாற்றில் வருவார்கள் தானே?

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க மாதவி...
//கேள்வி கேட்கும் சுதந்தரம் கூடக் கொடுக்காமல்//
-- கரெக்ட்டுங்க. அத கூட நமக்கு தரமாட்டேங்கராரே இந்த தாத்தா..


//வேடிக்கை பார்த்த மக்களும் வரலாற்றில் வருவார்கள் தானே//
-- கண்டிப்பாக வருவார்கள். அவர்களால் தானே இது எல்லாம் சாத்தியமாயிற்று

எல் கே said...

வந்தார்கள் சுரண்டினார்கள் . மிக அருமை. இது எப்ப புத்தகமா போடப் போறீங்க ?

ரிஷபன் said...

வந்தார்கள் (மக்கள்) நொந்தார்கள் என்றுதான் எழுதணும்
ஆனாலும் உங்க கற்பனை அபாரம்

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க எல்.கே.

//மிக அருமை.//

நன்றிங்க...

//இது எப்ப புத்தகமா போட போறீங்க//

அடுத்த புத்தக கண்காட்சிக்கு போட்ரலாம்... விடுங்க..

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க ரிஷபன்...

//ஆனாலும் உங்க கற்பனை அபாரம்//

நன்றிங்க... என்ன இருந்தாலும் 99% உண்மையிருக்கில்ல அதுல..

கே. பி. ஜனா... said...

//ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொன்னா அது ‘சூரியனுக்கே டார்ச்’ அடிக்கற மாதிரி…//
TOP HUMOUR!

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க ஜனா...

ஏன்... அந்த புத்தகம் உங்களுக்கு பிடிக்காதா..?

சிவகுமாரன் said...

வரலாறு எனக்கு புடிச்ச பாடங்க. பத்தாவதோடு போச்சு. தொடருங்க சூப்பர்.

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க சிவகுமாரன்...

ஆமாங்க.. 1884, 12ம் தேதி அந்த போர் நடந்துச்சுங்கற நினைவில் வைத்துக்கொள்ளும் கஷ்ட்டத்தை தவிர வரலாற்று அருமையான பாடங்க...

வருகைக்கு நன்றிங்க...

இராஜராஜேஸ்வரி said...

‘இட்லி சாப்பிடும் இளந்தலைவர்!!!’ (அப்போது அவருக்கு வயது 120)
என்றும்//
அபாரம்.

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க ராஜேஸ்வரி...
நன்றிஸ்..

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP