காரணப் பெயர்கள்....
April 3, 2009
எங்க வீட்ல எங்களுக்கு செல்லப்பெயர் வெச்சுக்கரமோ இல்லையோ.... பக்கத்து வீட்டுக்கு, தெரிந்த மனிதர்களுக்கு காரணப் பெயர்(காரணப் பெயர் தான்.... பட்டப் பெயர்ல்லாம் இல்லை...... ) வெச்சுடுவோம்.....
"டேய்... வாய்க்கா வீட்டுக்கு போய் இதை குடுத்துட்டு வா... "ன்னு அம்மா சொன்னா... இது ஏதோ செல்விக்கா, ராணிக்கா மாதிரி.... வாய்க்கான்னு தப்பா நெனச்சிடக்கூடாது..... அந்த aunty வீட்டுக்கு பக்கத்தில வாய்க்கால் என்று அழைக்கப்படும் வாய்க்கா ஓடறதுனால அவங்களுக்கு அந்த பெயர்.....
இன்னொரு வீட்டுக்கு பேரு... தேவர் மகன் வீடு..... "தேவர் மகன்" படம் வந்த புதுசுல ஒரு பெரிய ஆளுயர poster அவங்க வீட்டு வரவேற்ப்பறையில் ஒட்டியிருந்ததால..... அவங்களுக்கு அந்த பெயர்.....
இதாவது பரவால்ல..... பக்கத்து கடையையும் விட்டு வைக்கவில்லை நாங்க.... ஒரு மளிகைக் கடையோட பக்க சுவற்றில் ஆலா liquid (சொட்டு நீலம் ன்னு நெனைக்கிறேன்...) விளம்பரம் இருந்துச்சு..... so, அது ஆலாக்கடை ஆயிடுச்சு..... வீட்டுக்கு வந்த சொந்தக்காரர்ட்ட ஆலாக்கடையில சாமான் வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல(வேற கடையில வாங்க வேணாம்ன்னு bit வேற....) அவர் பாவம்....... ரொம்ப நேரம் தேடிட்டு வந்து.... அப்படி ஒரு கடையே இல்லன்னு சொல்ல... ஒரே நாள்ல கடைய மூடிட்டாங்களா? ன்னு comment அடிச்சுட்டு போய் பாத்தா..... அந்த கடை board ல 'பாலாஜி stores' ன்னு.... கொட்டக்கொட்டயா எழுதியிருந்துச்சு...... அப்பறம் என்ன... as usuala... வந்தவர் காதில புகை.... நம்ம முகத்துல அசட்டு புன்னகை.......