காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

கும்பகோணம் கோவில்கள் - ஒரு terror பயணம்

November 21, 2010

திருப்பதியில தடுக்கி விழுந்தா மொட்டைகள்...
கும்பகோணத்துல தடுக்கி விழுந்தா கோவில்கள்... 

ஏகப்பட்ட கோவில்கள்... ஏற்கனவே ரெண்டொரு முறை சென்றிருக்கிறேன்... எல்லாம் பரிகார பூஜைகளுக்காகத்தான்...

இந்த முறை சென்றது திருநாகேஷ்வரம்.... அதுவும் ஞாயிறு ராகுகால பூஜைக்கு...  நாக கன்னிக்கு பாலபிஷேகம் செய்யணும்ன்னு (வேற யாரு., ஜோசியர் தான்) சொல்லிட்டதால, பெத்தவங்க அதை நம்பறதால... escape ஆகவே முடியல(நான் அவ்வளவு நல்ல பொண்ணு... பெத்தவங்க  சொன்னா அப்படியே கேப்பேன்...  ஆனா எப்ப கேப்பேன்னு தான் ... ஹி... ஹி.. )


ஏகப்பட்ட ஞாயிறு escape ஆகிட்டேன்.  இப்படியே போனா இவ இந்த ஜென்மத்துல போகமாட்டான்னு தெரிஞ்சுக்கிட்டவங்க, போன ஞாயிறு  கட்டியிழுக்காத குறையா கூட்டிட்டு போயிட்டாங்க... ஆனாலும் வடிவேலு மாதிரி வாண்டடா வந்த மாதிரியே ஸீன் போட்டுட்டே போனேன்... 

ரயிலேறி, பஸ் மாத்தி, அந்த புண்யஸ்தலத்தில் கால் வைக்க போறேன்... 

பாலபிஷேகமா... இப்படி வாங்க...  சீக்கிரமா வாங்க... பையை இங்க வைங்க.. ன்னு ஒரே நேரத்துல ஒரு நாலஞ்சு பேரு சுத்தி நின்னுகிட்டாங்க....  விட்டா கைய பிடிச்சு கூட்டிட்டு போயிடுவாங்க போல... இதேன்னடா இது கும்பகோணத்துல நமக்கு வந்த சோதனைன்னு நினைச்சு உள்ள போனா... பாலபிஷேகம் டோக்கன் ரூ. 100. ன்னு போட்ருந்த்து... அதுக்கு அடுத்தது  500 ருபாய் டோக்கன் தான் இருந்தது..  சரி 100 ரூபாய் தான் கம்மின்னு அந்த சீட்ட வாங்கினோம்..


4.30 - 6.00  தான் ராகு காலம்... அப்ப தான் பூஜை பண்ணுவோம்... எதுக்கும் நீங்க 2.30க்கே வந்துடுங்கன்னு சொன்னாங்க... சரி.. இன்னும் தான் டயம் இருக்கேன்னு பக்கத்துல இருக்கற உப்பிலியப்பன் கோவிலுக்கு போயிட்டு 2 மணிக்கு வந்தோம்...

அடடா... 2.30 வர சொன்னதுக்கு நாம 2 மணிக்கே (!!!!) வந்துட்டமே... பரவாயில்ல... முன்னாடியே போயி வரிசையில நின்னுட்டமின்னா சீக்கிரமா வந்தர்லாம்ன்னு நெனச்சி அங்க போனா....

அங்க ஒரு 500 பேர் ஏற்கனவே (!!!!) நின்னுட்டு இருந்தத பாத்து எனக்கு மயக்கமே வந்துருச்சு... 

இது ஆகற விஷயமில்லை... பேசாம 500 ரூபாய் சீட்டுக்கே போயிடலாம்ன்னு பாத்தா... அதுக்கும் ஒரு பெருங்கூட்டம் இருந்தது...இத்தனைக்கும் ஒரு சீட்டுக்கு ஒருத்தர தான் விடறாங்க..

சரி... நடக்கறது நடக்கட்டும் ன்னு 100 ரூபாய் கூட்டத்திலேயே ஜக்கியமானேன்...


நமக்கும் பின்னாடி வந்தவர்களின் ரியாக்ஷனயும், மற்ற பெண்களின் புடவைகள், அதன் நிறங்கள், வேலைப்பாடுகள்,  அவங்க வளையல், தோடு, பொட்டு டிசைன்கள், அவர்கள் குழந்தைகள்,(எத்தனை ஆண் குழந்தைகள், எத்தனை பெண் குழந்தைகள்), யார் யார் என்னேன்ன செல்போன் வெச்சிருக்காங்க, எத்தனை பேர் மொட்டை போட்டிருக்காங்கஎத்தனை பேர் கண்ணாடி போட்ருக்காங்க, என்ன சட்டை போட்ருக்காங்க, அதுல எத்தனை கட்டம் இருக்குது ன்னெல்லாம் லிஸ்ட் எடுத்து, மேலே வானம், கீழே பூமி, சைடுல தூண்கள்ன்னு எல்லாத்தையும் வேடிக்கை பாத்து அந்த இரண்டரை மணி நேரத்தை கடத்தினேன்...


மடை திறந்த வெள்ளம் எப்படியிருக்கும்ன்னு எனக்கு தெரியாது... ஆனா வாசல் திறந்த கூட்டம் எப்படியிருக்குன்னு நான் அனுபவப்பட்டேன்....  திபு திபுன்னு ஒடி, மோதி, இடித்து, உட்கார்ந்து,  நிமிர்ந்து பார்த்தால் எனக்கு முன்னாடி உட்காந்திருந்தவரின் தலை தான் தெரிந்தது...

இன்டு, இடுக்கில் எட்டி பார்த்து, மேலே தவ்வி,, கீழ குனிஞ்சி, ஒரு வழியா அபிஷேகம் பார்த்து, முடிவேயில்லாத இன்னும் இரண்டு வரிசைகளைக் (அபிஷேகப் பாலை வாங்க ஒன்று, தேங்காய் பழ பை வாங்க ஒன்று) கடந்து, மீண்டும் பஸ் ஏறி, ரயிலடிக்கு வந்தால் அங்க இருந்த நிறைய பேர் கையில அதே பாலபிஷேகப் பை (சேம் பிளட்...)

கண்ணாபின்னான்னு கூட்டம்... அதுல கஷ்டப்பட்டு ரயில் ஏறியது இன்னோரு பதிவிற்கானது...

பேசாம நம்ம சுற்றுலாத்துறை கும்பகோணத்தை பரிகார zone என்று அறிவித்து, சலுகை வகைகளில் நிலம் ஒதுக்கீடு செய்து, ரூம்கள், கழிப்பிடங்கள் கட்டித் தரலாம், கும்பகோணம் முழுவதும்...  மேலும் எல்லா ஊர்களில் இருந்தும் ரயில்களும், பஸ்களும் விடலாம்...

சுற்றாலாத்துறைக்கு நல்ல லாபம் தரும் ஊர் இது... ப்ரொப்சனலாக செய்தால்...

அப்படி செய்யாததினால் நஷ்ட்டம்  சுற்றாலாத்துறைக்கு,
எரிச்சல் நமக்கு,
லாபம் யாருக்கோ.....

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP