பார்க்க / கேட்க பிடிக்காத பாடல்கள்
September 8, 2011
பாடல்கள் --- திரைப்படத்திலோ, விளம்பரங்களிலோ வரும் பாடல்கள் உண்மையில் நமக்கு உற்சாகம் தரக்கூடியவையே… பாடல் வரிகள், இசை, குரல், அதை காட்சி படுத்திய விதம் என பார்கும்போதும், கேட்கும் போதும் நம்மை வசியப்படுத்துபவை, உற்சாகப் படுத்துபவை....
கர்நாடக சங்கித பாடல்களும், பிற மொழிப்பாடல்களும் புரியாததினால் வரிகளை பற்றி கவலையில்லை.. காதுக்கு இனிமையான இசை இருந்தால் சரி என்பதே என் எண்ணம்...
Read more...
கர்நாடக சங்கித பாடல்களும், பிற மொழிப்பாடல்களும் புரியாததினால் வரிகளை பற்றி கவலையில்லை.. காதுக்கு இனிமையான இசை இருந்தால் சரி என்பதே என் எண்ணம்...
இதில் சில பாடல்கள் உண்டு.. கேட்கவும் சகிக்காது, பார்க்கவும் தேறாது… அத்தகைய பாடல்களை பற்றியதல்ல இப்பதிவு… ஏதோ ஒன்று நன்றாக இருக்கும்.. இன்னோரு வகையில் சொதப்பியிருப்பார்கள்… பெரும்பாலும் படமாக்கப்பட்ட விதம் தான் நம்மை படுத்தியெடுக்கும்.. அந்த சில பாடல்கள்…
1. 1. யாரடி நீ மோகினி படத்தில் வரும் – எங்கேயோ பார்த்த மயக்கம் பாடல்…
எனக்கு பிடித்த நயன்தாரா, சூடானேன், சுளுக்கெடுத்துருவேன் என்றேல்லாம் அதிகம் பேசாத, சாதாரண தனுஷ், பல பாடல்களில் ஏற்கெனவே எடுத்திருந்தாலும், அலுக்காத சீன்ஸ், (கதாநாயகி அறியாமல், அவள் பின்னாடியே போகும் கதாநாயகன்), நல்ல இசை என்று இருந்தாலும், அந்த குரல் இருக்கிறதே..அடேயப்பா… உதித் நாராயணனாம்.. ஈயத்தை காய்ச்சி, சரி.. ஈயம் என்னன்னு நமக்கு தான் தெரியாதே.. கொதிக்கவெச்ச தண்ணிய எடுத்து காதில் ஊற்றிக்கொண்டதைப் போல் இருக்கும்.. வால்யூமுக்கும், மியூட்டுக்கும் இடையே கரோக்கியை கண்டுபிடித்தவன் வாழ்க என்றே சொல்ல வைக்கும் பாடல்.
அருமையான பாடல் வரிகள், எஸ்.பி.பியின் குரல் எல்லாம் நல்லாதான் இருக்கும், ஆனால் அஜீத்தின் வாயசைப்பும், காட்சியமைப்பும் சகிக்காது.. ஸ்கூல்ல பிள்ளைங்க எக்ஸரசைஸ் செய்யற மாதிரியே இருக்கும்.. ஆனால் கேட்க கேட்க திகட்டாத பாடல் இது…
அருமையான மெலடி (தமிழ்ல்ல எப்படி சொல்றது இதை!!!) பாடல்.. ஆனால் படு மொக்கையாக படமாக்கியிருப்பார்கள்.. அதிலும் விஜய் தலைமுடி… ஸ்ப்பா… கொண்ணுட்டீங்கண்ணா!!! அனுஷ்க்காவுக்கு ஒரு கேவலமான டிரஸ் வேற..விஷய், அனுஷ்க்கா காம்பினேஷனுக்கு நல்ல சீன்ஸ் வெச்சிருக்கலாம்.. ப்ச்சு… ஆனா ரேடியோல, செல்லுல கேட்பதற்கு நல்ல பாடல்…
சோக கீதம் தான்.. கேட்க நல்லாயிருந்தாலும், பார்க்க அவ்வளவா பிடிக்காது.. ஏன்னு சொல்லத்தெரியல..
5. 5. புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படம் – மலர்களே
பாம்பே ஜெயஸ்ரீயின் மயக்கும் குரல்… வால்யூம் அதிகமா வெச்சு கண்ணை மூடி கண்ணாபின்னான்னு ரசிக்கலாம்… வரிகளும், இசைன்னு எல்லாமே டாப் டக்கரா இருக்கும்... ஆனால் படமாக்கப்பட்ட விதம் தான்... ம்ஹூம்…
இன்னும் நிறைய இருக்கு இந்த லிஸ்ட்டுல...