காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

விருந்தோம்பலும் திணறலும்...

February 15, 2009

வந்தவர்களை (விருந்தினர்களை) வா என்று அழைப்பதும், அவர்களுக்கு வயிறார உணவு படைப்பதும், விருந்தோம்பலில் முக்கியமானவை. வயிறார உணவு படைப்பதில் தான் நாம் நம் வேலையை காட்டுகிறோம்.

இன்னும் ஒரே ஒரு இட்லி வெச்சுக்கோங்க, கொஞ்சம் சாதம் போட்டுக்கோங்க, இன்னும் ஒரே ஒரு sweet எடுத்துக்கோங்க என்றெல்லாம் கூறி வந்தவர்களை திணறடிக்கிறோம். கூச்சப்படாம சாப்பிடுங்க, இது நம்ம வீடு மாதிரி நெனச்சுக்கோங்க என்று சொல்லி அள்ளி அள்ளி வைக்கிறோம். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், இன்னும் கொஞ்சம்... என்று உபசரிக்காவிடில், கொஞ்சம். அள்ளி வைக்காவிடில், மரியாதை தெரியவில்லை என்று சொல்கிறோம்...

இன்று பெரும்பாலானோர்க்கு Pressure, Sugar உள்ளது. அவர்கள் உணவில் கட்டுப்பாடு காப்பது முக்கியம்.. அப்படியிருக்க, கட்டாயப்படுத்துவதை நாம் தவிர்க்கலாமே!!! 40, 50 வயதில் இருப்பவர்களை, கட்டாயப்படுத்தாமல் இருப்பது, sweet சாப்பிடுவீங்களா? என்று கேட்டுவிட்டு பரிமாறுவது , இன்று ஒரு நாள் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று சொல்லாமல் இருப்பது என்று நம் விருந்தோம்பல் முறையை மாற்றிக் கொண்டால் என்ன?

3 கருத்துகள்:

" உழவன் " " Uzhavan " said...

//Swarnarekha has left a new comment on your post "தமிழரின் விருந்தோம்பல் - அன்றும், இன்றும்":

தினமும் ஒருவர்க்கு extraவாக சமைத்து யாரும் வரவில்லை என்றால், அந்த உணவு வீணாகத்தானே போகும்.. உணவு உற்ப்பத்தி குறைந்து, மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் அது சாத்தியம் அல்லவே...மேலும் cellphone யுகத்தில் தகவல் சொல்லிவிட்டு வருவது ஒன்றும் கஷ்ட்டமல்லவே!!! //

Very Thx for ur comment.
veetirku vanthavarkalukku avarkal viruppathirku etravaravathu, parimaruverkal allava.. athuthan virunthoompal!

Uzhavan
http://tamizhodu.blogspot.com

Swarnarekha said...

கண்டிப்பாக அவர்கள் விருப்பத்திற்க்கேர்ப்ப பறிமாருவோம்.. தங்கள் பதிவுக்கும் வருகைக்கும் நன்றி...

Ram said...

pidathamanathai manam mahilthu kuduthal athu than tamilaren virunthobal panbhu.... Alavaga alga vanthori mahizvithu namau serpu peruvathu than viruthombal alga etha nevena eugathu thu thanguthapla .. solli irukenga..

Very nice

Neoplean.

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP