ஒண்ணுமே புரியலயே....!!!
September 5, 2009
என்னதான் தமிழ் தாய் மொழியா இருந்தாலும், தமிழ்ல பேசவும் எழுதவும் தெரிந்திருந்தாலும்... தினமும் நியூஸ் கேட்கும் போதும், பேப்பர் படிக்கும் போதும் நிறைய வார்த்தைகள் எனக்கு புரியவேமாட்டேங்குதுங்க... சில சமயம் வாக்கியங்களே கூட புரிய மாட்டேங்குது... சில சாம்ப்ள் குடுத்திருக்கேன்... பாருங்க...
- நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது... (உத்து உத்து பார்த்தாலும், உன்னிப்பாக பார்த்தாலும் அதனால் விளையும் பயன் என்னவென்று யானறியேன் பராபரமே!! )
- ABC விஷயத்தை செயல்படுத்த வேண்டுமென்று XYZ மாநாட்டில் வலியுறுத்தபட்டது
- ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை, விலைவாசி ஏற்றத்தை கண்டித்து எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தின..
- YYY கட்சி தலைவர் ஆனா ஊனா விஷயத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்...
- இதுகாறும் அவர் மக்களுக்கு சேவை செய்த்தை பாராட்டி Mr. XXX / Ms. ZZZ க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது..
- வறுமையை ஒழிப்பதற்கு, கட்சியில் / சபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது..
- சபாநாயகராக / பிரதமராக / ஜனாதிபதியாக / ஊராட்சி தலைவராக, கட்சி தலைவராக இவர் பதவியேற்றதால் பெண் குலமே / குறிப்பிட்ட சமுதாயமே பெருமை படுகிறது..