இறையாண்மை + தனிமனித உரிமை = இயலாமை...
May 8, 2010
26.11.08 அன்று மும்பையில் பலரை(166)க் கொன்ற கசாப்புக்கு தூக்காம்... அதுவும் உடனே நிறைவேறாதாம்... மேற்கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாமாம். ஜனாதிபதிக்கும் கருணை மனு போடலாமாம். அவனுக்கு, இல்லை அவருக்கு அதுக்கெல்லாம் உரிமை உண்டாம்.. இதற்கெல்லாம் இறையாண்மை, தனிமனித உரிமை என்று பெயராம்....
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கு கசாப்புக்கு உரிமை உண்டாம்.. ஆனால் அவனாலும், மற்றவர்களாலும் சுடப்பட்டவர்களுக்கு சாவதற்கு தான் உரிமை உண்டு போலும்... பிறந்தாலும் இந்தியத்திருநாட்டில் குடிமக்களாய் பிறக்கக்கூடாது போலிருக்கிறது...
அதேபோல் 2001ல் பார்லிமெண்ட் தாக்குதல் வழக்கில் பிடித்துவைத்திருக்கும் (ராஜ உபசாரங்கள் செய்யப்படும்) அப்சலுக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லையாம்...
தீவிரவாதிகளுக்கு, அதுவும் பேருக்கு ஒருத்தனை (தப்பு. தப்பு... ஒருத்தரை) பிடித்துவைத்துக்கொண்டு, நீதி, தனிமனித உரிமை என்ற பெயரிலும், இறையாண்மை என்ற பெயரிலும் நடக்கும் கூத்துக்கள், உலக அரங்கில் நமது இயலாமையையே காட்டுகின்றன...
உண்மையில் அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமோ.... ஆனால்.. அந்த வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் இயலாமை... இயலாமை... என்றே என் காதுகள் கேட்கின்றன...
----------------------------------------------------------------------------------------
பி.கு...
பதிவெழுதி சில மாதங்கள் ஆகிவிட்டாலும்.... இன்னும் என்னைத் தொடர்ந்து வந்து ஆதரவு தரும் எனது வாசகர் வட்டத்திற்கு நன்றி... நன்றி...
----------------------------------------------------------------------------------------