சமையல் – ஒரு mix and match
October 14, 2010
தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ சமையல் குறிப்புன்னு நினைச்சு உள்ளே வந்திருந்தீங்கன்னா….. sorry… fate plays….
Actuala இது என்ன சாப்பாட்டுக்கு என்ன side dish நல்லாயிருக்குங்கற பதிவு தான்…
ஒரு தங்கமணி எப்படி சமையல் செய்வதுன்னு தான் பதிவு போடணும்… அது தான் பதிவுலகின் எழுதப்படாத விதி….
but சமையல் எனக்கு வரும்……………… ஆனா வராது… So… எப்படில்லாம் சமையல் செய்வதுங்கறதுக்கு பதிலா,எப்படில்லாம் சமையலை சொதப்புவது என்று தான் பதிவு போட வேண்டியிருக்கும்… (எப்படியும் அதையும் ஒரு நாள் எழுதுவேனாலும்… இப்பவே (இன்னிக்கு) உங்களுக்கு அந்த கஷ்ட்டத்த தரவேணாம்ன்னு ஒரு நல்ல எண்ணம் தான்….)
So… எனக்கு நல்லா தெரிஞ்ச டாபிக்கான சாப்பிடறதப் பத்தி பாப்பம்….
1. தயிர் சாதம்…
தயிர் சாதத்துக்கு தயிர் கெட்டியா இருக்கணும்… எடுத்தா.. (note the point… எடுத்தா… ஊத்தினா இல்ல..) ஜஸ் கட்டி மாதிரி வரணும்…(ஸ்வீட் பிரியரா இருந்தா அல்வாத்துண்டு மாதிரி ன்னு நினைச்சுக்கங்க….) அந்த தயிர சுடு சாத்தஃதுல போட்டு உப்பில்லாம சாப்பிட்டா என்ன டேஸ்ட் தெரியுமா….
அதுக்கு பருப்பு உசிலி… கொத்தவரை இல்லன்னா வாழைப்பு போட்டு செய்வாங்க….. அது சரியான matchங்க…
இல்லன்னா அப்படியே பூந்தூறலாய் தேங்காயை தூவி போட்ட பீட்ரூட்… இதுல தயிரும், பீட்ரூடும் கலந்து ஒரு கலர் வருமே…. செம காம்பினேஷன்….
அதுவும் இல்லன்னா நல்லா கரு கருன்னு வருத்த மோர்மிளகாய்….. கொஞ்சம் பிரவுன் கலர்ல வருத்திருந்தாலும் போச்சு…. நாக்கு ஓட்டையாவது நிச்சயம்… அப்பறம் குண்டா குண்டாவாயில்ல அண்டா அண்டாவாதான் தண்ணி குடிக்கணும்…
Point to note: நீளமான மோர்மிளகாயா தான் இருக்கணும் அப்போதான் டேஸ்ட்டி….
அப்பறம் எல்லா ஊறுகாயும்… மாங்காய்… தக்காளி… பூண்டு.. நார்த்தங்காய்… மாவடு..etc.. etc…
2. ரசம் சாதம்…
தக்காளி பிழிஞ்சு, மிளகு , பூண்டு தட்டி போட்ட ரசத்துக்கு
- First choice அப்பளம் தான்…
- அடுத்தது மெல்லிய துண்டா நறுக்கி, இரும்பு சட்டியில செஞ்ச உருளைக்கிழங்கு வறுவல்….
- இல்லன்னா. கொத்தவரை பருப்பு உசிலி… இது தொட்டு சாப்பிட்டா ஒரு 4 கை சாதம் எக்ஸ்ட்ராவா உள்ளே போகும்… டயட்ல இருக்கறவங்க இதையெல்லாம் பாக்காம இருக்கறது நல்லது…(என் ப்ளாக்க சொல்லல உசிலிய சொன்னேன்….)
3. இட்லி…
மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை கலர்ல இருக்கற, பஞ்சு மாதிரியான மென்மையான இட்லிக்கு பொட்டுக்கடலை சட்னியவிட
- கை நிறைய சிகப்பு மிளகாய அள்ளி போட்டு, நிறைய எண்ணை விட்டு செஞ்ச மிளகாய் சட்னி தொட்டு சாப்ட்டா… ஸ்… அப்படியே ருசி அள்ளிக்கிட்டு போகும்….
- அப்பறம் இருக்கவே இருக்கு தக்காளி, வெங்காய சட்னிகள்….
இதுல அந்த கலர் மேட்ச் தான் ஸ்வாரஸ்யமே…..
4. எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்ற கிளறின சாதங்கள்…
- வேற optionனே கிடையாது… அப்பளம், வடகம் தான்….
- உருளைக்கிழங்கு வறுவலும் கூட ok தான்…
அவ்… இதையெல்லாம் எழுதினதும் பசி வந்திருச்சு…. போய் சாப்பிட போறேன்…. டாடா…. பை.. பை…
Point to Note: இந்த பதிவை படிச்சிட்டு, பின்னூட்டம் போடாமல் போகும் அன்பர்களுக்கு, என்னுடைய சமையல் பார்சல் அனுப்பி வைக்கப்படும் என்பதை அன்புடன் சொல்லிக்கொள்கிறேன்…..
Read more...