காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

சமையல் – ஒரு mix and match

October 14, 2010

தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ சமையல் குறிப்புன்னு நினைச்சு உள்ளே வந்திருந்தீங்கன்னா….. sorry… fate plays….
Actuala இது என்ன சாப்பாட்டுக்கு என்ன side dish நல்லாயிருக்குங்கற பதிவு தான்
ஒரு தங்கமணி எப்படி சமையல் செய்வதுன்னு தான் பதிவு போடணும்அது தான் பதிவுலகின் எழுதப்படாத விதி….
but சமையல் எனக்கு வரும்……………… ஆனா வராது… So… எப்படில்லாம் சமையல் செய்வதுங்கறதுக்கு பதிலா,எப்படில்லாம் சமையலை சொதப்புவது என்று தான் பதிவு போட வேண்டியிருக்கும்… (எப்படியும் அதையும் ஒரு நாள் எழுதுவேனாலும்இப்பவே (இன்னிக்கு) உங்களுக்கு அந்த கஷ்ட்டத்த தரவேணாம்ன்னு ஒரு நல்ல எண்ணம் தான்….)
So… எனக்கு நல்லா தெரிஞ்ச டாபிக்கான சாப்பிடறதப் பத்தி பாப்பம்….

1.   தயிர் சாதம்… 
தயிர் சாதத்துக்கு தயிர் கெட்டியா இருக்கணும்எடுத்தா.. (note the point… எடுத்தாஊத்தினா இல்ல..) ஜஸ் கட்டி மாதிரி வரணும்…(ஸ்வீட் பிரியரா இருந்தா அல்வாத்துண்டு மாதிரி ன்னு நினைச்சுக்கங்க….) அந்த தயிர சுடு சாத்தஃதுல போட்டு உப்பில்லாம சாப்பிட்டா என்ன டேஸ்ட் தெரியுமா….

அதுக்கு பருப்பு உசிலிகொத்தவரை இல்லன்னா வாழைப்பு போட்டு செய்வாங்க….. அது சரியான matchங்க

இல்லன்னா அப்படியே பூந்தூறலாய் தேங்காயை தூவி போட்ட பீட்ரூட்இதுல தயிரும், பீட்ரூடும் கலந்து ஒரு கலர் வருமே…. செம காம்பினேஷன்….

அதுவும் இல்லன்னா நல்லா கரு கருன்னு வருத்த மோர்மிளகாய்….. கொஞ்சம் பிரவுன் கலர்ல வருத்திருந்தாலும் போச்சு…. நாக்கு ஓட்டையாவது நிச்சயம்அப்பறம் குண்டா குண்டாவாயில்ல அண்டா அண்டாவாதான் தண்ணி குடிக்கணும்
 
    Point to note: நீளமான மோர்மிளகாயா தான் இருக்கணும் அப்போதான் டேஸ்ட்டி….

அப்பறம் எல்லா ஊறுகாயும்மாங்காய்தக்காளிபூண்டு.. நார்த்தங்காய்மாவடு..etc.. etc…


2.   ரசம் சாதம்
தக்காளி பிழிஞ்சு, மிளகு , பூண்டு தட்டி போட்ட ரசத்துக்கு
-    First choice அப்பளம் தான்

- அடுத்தது மெல்லிய துண்டா நறுக்கி, இரும்பு சட்டியில செஞ்ச  உருளைக்கிழங்கு வறுவல்….

- இல்லன்னா. கொத்தவரை பருப்பு உசிலிஇது தொட்டு சாப்பிட்டா ஒரு 4 கை சாதம் எக்ஸ்ட்ராவா உள்ளே போகும்டயட்ல இருக்கறவங்க இதையெல்லாம் பாக்காம இருக்கறது நல்லது…(என் ப்ளாக்க சொல்லல உசிலிய சொன்னேன்….)

3.   இட்லி
மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை கலர்ல இருக்கற, பஞ்சு மாதிரியான மென்மையான இட்லிக்கு பொட்டுக்கடலை சட்னியவிட

 - கை நிறைய சிகப்பு மிளகாய அள்ளி போட்டு, நிறைய எண்ணை விட்டு செஞ்ச மிளகாய் சட்னி தொட்டு சாப்ட்டாஸ்அப்படியே ருசி அள்ளிக்கிட்டு போகும்….

- அப்பறம் இருக்கவே இருக்கு தக்காளி, வெங்காய சட்னிகள்….
இதுல அந்த கலர் மேட்ச் தான் ஸ்வாரஸ்யமே…..

4.   எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்ற கிளறின சாதங்கள்
  - வேற optionனே கிடையாதுஅப்பளம், வடகம் தான்….
   - உருளைக்கிழங்கு வறுவலும் கூட ok தான்


அவ்இதையெல்லாம் எழுதினதும் பசி வந்திருச்சு…. போய் சாப்பிட போறேன்…. டாடா…. பை.. பை

Point to Note: இந்த பதிவை படிச்சிட்டு, பின்னூட்டம் போடாமல் போகும் அன்பர்களுக்கு, என்னுடைய சமையல் பார்சல் அனுப்பி வைக்கப்படும் என்பதை அன்புடன் சொல்லிக்கொள்கிறேன்…..

10 கருத்துகள்:

சுந்தரா said...

உங்களுக்கு சமையல் வருமோ வராதோ, பதிவைப் படிக்கிறவங்களுக்கு பசி கட்டாயம் வரும் :)

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க சுந்தரா...

அதுக்கு தானே இந்த பதிவை போட்டேன்...

முதல் முறையா வந்திருக்கீங்க... நம்ம சாப்பாட்டு வகைகள்ல ஒண்ண எடுத்துக்குங்க....
(விருந்தோம்பல்.... ஹா... ஹா..)

சிங்கக்குட்டி said...

என்ன இது?

அதெல்லாம் சரி, திருமணத்திற்கு பின் எத்தனை கிலோ எடை குறைந்து விட்டார் ? பாவம் அந்த மனுஷன் :-(.

அடிச்சு நண்டு காடை கவுதாரின்னு பட்டை கிராம்பு வாசத்த தூள் பறக்க விடனும் அம்மணி...!

sathishsangkavi.blogspot.com said...

உங்க சாப்பாடு சூப்பர்...

நானும் உங்க பக்கத்து ஊர்தாங்க... முடிஞ்சா என் பதிவையும் பாருங்க...

இன்னும் நிறைய எழுதுங்க.. வாழ்த்துக்கள்...

Unknown said...

Hello.Really nice blog. I have posted a post about your Blog on www.trichytalks..com . Check it out and tell me if you are fine with it and link back if you would like .

Regards

GSV said...

உங்க "Cheenu" சூப்பர் ....ரொம்ப நேரம் விளையாடியாச்சு அது கூட.....இன்னொரு நாள் வந்து இண்டுக்கைய படிக்கிறேன் .

Unknown said...

Hi. can u link back to a post about your blog .. http://www.trichytalks.com/2010/10/for-those-tamil-moms-at-home.html

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நான் கூட சூப்பரா வென்னீர் வைப்பேன்!


ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

எல் கே said...

இதற்குப் பிறகு எதுவும் எழுத வில்லையா

Pavithra Elangovan said...

Nice one .. lovely write up.

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP