காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

அட்வர்டைஸ்மெண்ட் அபத்தங்கள்

October 22, 2011


 டிவில அரைமணிநேரம் ஒரு நிகழ்ச்சிய பார்த்தோம்ன்னா அதுல எப்படியும் ரெண்டு விளம்பர இடைவேளை வந்துடுது… பாட்டு படறது, சீரீயல், பாடல்கள், ஆடல் நிகழ்ச்சிகள்ன்னு ஒரே மொக்கை நிகழ்ச்சிகளா தான் இருக்கும்.. படங்களைத் தவிர உண்மையிலேயே நான் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சின்னு ஒன்னு டிவில கிடையவே கிடையாது. டைம் பாஸ், கொஞ்சம் ரிலாக்ஷேஷன் அப்படி இப்படின்னு வேற வழியில்லாம தான் டிவி பார்க்க வேண்டியிருக்கு…

ஆனாலும் அதுல வர்ற விளம்பர இடைவேளைங்கறது அடுத்த சேனலை மாற்றுவதற்கே… பல சமயத்துல நிகழ்ச்சிகளைவிட விளம்பரங்களே அருமையாக இருப்பதும் உண்டு. சிலது கொஞ்சம் மொக்கையாகவும், சிலது ரொம்ப அபத்தமாகவும் இருக்கும்.. அதுல சிலவற்றை பற்றி…
  • பொம்மிஸ் நைட்டீஸ்
ஒரு குடும்பத்தலைவி எதிரில் வந்தா சூடான விவாதமெல்லாம் மாறிடுமாம்… என்ன கொடுமை சார்… அது கூட பரவாயில்லை.. அதுக்கும் நைட்டீக்கும் என்னப்பா சம்பந்தம்… ஸ்.. ப்பா…
  • Johnson & Johnson Baby wipes
துணி உபயோகித்து குழந்தையை துடைத்தால் rashes வருமாம்.. அதனால இதை உபயோகியுங்கள்ன்னு…

பிறந்த குழந்தைகளுக்குன்னு ஒரு துணி இருக்கும் பாருங்க அந்த வீடுகள்ல்ல.. அப்பா.. அவ்வளவு மென்மையா இருக்கும்.. குழந்தை மென்மையா இல்ல அந்த துணி மென்மையான்னு தாராளமா பட்டிமன்றமே வைக்கலாம்… பிறந்த குழந்தைக்கான எல்லா விஷயங்களுமே இவர்களிடம் வாங்கவைப்பதற்கான தந்திரமே இது…

  • Baby Diapers

குழந்தைகள் வீட்டில் உலர்ந்த உடைகளோடு ஆடவும் பாடவும் செய்வார்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.. இது தவறல்லவா.. குழந்தைகளை வெளியில் அழைத்துப் போகும் போது தான் diaper போடவேண்டும்… பஸ்ல குழந்தையை எடுத்து செல்கிறோம்… அப்போ அவசரம்ன்னா என்ன செய்வோம்… அந்த மாதிரியான சமயங்களிலே தான் நாம diaper உபயோகிக்க வேணும்.. அதைவிடுத்து வீட்டிலிருக்கும் சமயங்களிலே கூட செய்வதென்பது குழந்தையை படுத்தியெடுப்பதே ஆகும்..

ஆனால் அந்த விளம்பரங்களில் எல்லாம் வீட்டில் இருக்கும் போதும், இரவிலும் பயன்படுத்துங்கள் என்றே சொல்கிறார்கள்… அது அபத்தத்தை தவிர வேறேன்ன.. 
  • Sanitary pad விளம்பரங்கள்…
ஸ்..ப்பா… நாசூக்கு… அது எப்படி இருக்கும்.. எத்தனை கிலோங்கற மாதிரி தான் இருக்கும்…
  • Toothpaste விளம்பரங்கள்
அந்த flavor இருக்கு, உப்பு இருக்கு, அது இருக்கு, இது இருக்குன்னு சொல்றாங்க.. அதனால தான் germs போகும்ன்னு சொல்றாங்க… உண்மையில் டூத்பேஸ்ட் உபயோகிப்பதே ஒரு வாசனைக்குத் தான்… மற்றபடி தினமும் இரண்டு வேளையும் முறையாக பல்விளக்கி, சாப்பிட்ட பின் (3 வேளையும்) வாய் கொப்பளித்தால் தான் அந்த கிருமிகள் போகும்… 

அந்த விளம்பரங்களில் இரண்டு வேளையும் முறையாக பல்விளக்கவேண்டும் என்று சின்ன எழுத்தில் போட்டிருப்பார்கள்…

டூத்பிரஷ் விளம்பரங்களும் அவ்வாறே….

இந்த வரிசையில் இன்னும் கொஞ்சம் இருக்கு… முடிந்தால் இன்னொரு பதிவாக போடுகிறேன்…

சித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்

October 19, 2011



பாலமலை என்றும், சித்தேஸ்வரன் கோவில் இருப்பதால் சித்தேஸ்வரன் மலை என்றும் சொல்லப்படும் அந்த மலை ஈரோடு மாவட்டம், பவானி அருகே (1/2 மணி நேரப் பயணம்) உள்ள குருவரெட்டியூர், ஊமாரெட்டியுர் அருகே உள்ளது.. இதை மலை என்று சொல்வதைக் காட்டிலும் மலைத்தொடர் என்று சொல்வதே சரி. மேட்டூர் அணையில் தேக்கப்படும் நீர் இந்த மலைத் தொடர்களின்  அரவணைப்பில் தான் இருக்கின்றது... குருவரெட்டியூரில் இறங்கி மலைக்கு எப்படி போகணும் என்று கேட்டாலே சொல்லிவிடுவார்கள்... அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் யாரையும் கேட்கவே வேண்டாம்.. கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று கொண்டிருப்பார்கள்...

வருடத்தில் புரட்டாசி மாத சனிக்கிழமைகள், (3வது வாரம் ரொம்ப விஷேஷம்), சித்திரை 1ம் தேதி, அமாவாசை போன்ற நாட்களிலேயே மக்கள் வருவார்கள்... மற்ற நாட்களில் ஆள் நடமாட்டமில்லாத, அடர்ந்த ஒரு வனமாக காட்சியளித்து நம்மை பயமுறுத்தும்..

அடிவார பிள்ளையார் கோவிலையும், அங்கே இருக்கும் சிவனையும் வணங்கிவிட்டு, படிகளில்லாத, கற்களும், பாறைகளுமாய் இருக்கும் அந்த தடத்தில் நடக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.. அவரவர் உடல் வலிமையை பொறுத்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறையோ, அல்லது 20 நிமிடங்களுக்கு ஒரு முறையோ சற்று உட்கார்ந்து, தண்ணீர் அருந்தி இளைப்பாறிவிட்டு பயணத்தை தொடரலாம்...நேரம் ஆக ஆக... அடர்ந்த காட்டுக்குள் நீங்கள் சென்று கொண்டிருப்பதை உணர்வீர்கள்.. கீழே கிராமங்களில் வெயில் வருவதையும் உங்களால் பார்க்க முடியும்..

இது தான் ஆரம்பம்

அப்படியே சென்று கொண்டிருந்தால், முதலில் வருவது வெத்தலைப்பாறை என்ற இடம்... பாறைகள் பார்ப்பதற்கு வெத்தலை போல இருக்காது.. ஆனா நல்ல நீநீநீ….நீளமாக இரண்டு, மூன்று பாறைகள் உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கு வசதியாக இருக்கும்... முன்பெல்லாம் மக்கள் அங்கே உட்கார்ந்து வெத்தலை போட்டுக் கொண்டு, சிரமபரிகாரம் செய்து கொண்டு பயணத்தை தொடர்வார்களாம்அதனால் வெத்தலைப்பாறை என்று பெயராம்

அடுத்து வருவது திம்மம் பொதி.. அங்கே சிமெண்டினால் கட்டப்பட்ட நல்ல அகலமான ஒரு தளம் இருக்கும்.. தானியங்களை காயவைக்கவும், பயணிகள் ஒய்வெடுப்பதற்கும்.. அங்கே 2, 3 கடைகளும் உண்டுசுக்கு காப்பி, டீ, கம்மங்கூழ், அங்கே விளையும் கொய்யா, மாதுளை, சீதாப்பழங்களையும் விற்பார்கள்…  பச்சை படிக்கட்டுகள் போன்ற விளைநிலங்கள், சினிமாவில் பார்த்திருக்கும் ஊட்டி எஸ்ட்டேடுகளைப் போன்ற அமைப்பை பார்க்குப் போதே தெரியும், நாம் திம்மம்பொதியை நெருங்கிட்டோம்ன்னு சொல்லும்..

இந்த இடத்தில் தான் சில வீடுகளை பார்க்க முடியும்.. அடிவாரத்திலிருந்து திம்மம்பொதிக்கு வர்றதுக்கு எங்களுக்கு 2 மணிநேரம் ஆச்சு.. ஒட்டுமொத்தமாக 2 மணிநேரத்திலேயே கோவிலை அடைந்துவிடுபவர்களும் இருக்கின்றார்கள்பொதுவில் மலை ஏற ஏற, கால்கள் கெஞ்சும்… 10 நிமிடங்களுக்கு ஒரு முறை உட்காரச் சொல்லி அழும்.. அதிலும் சின்ன குழந்தைங்கல்லாம்.. அப்பா.. கால் வலிக்குதுப்பா.. கொஞ்ச நேரம் உக்காரலாம்ப்பா.. என்று சொல்வார்கள்அவ்வளவு தாண்டா.. கோவில் வந்துருச்சுடா.. இப்படி போயி, அப்படி வந்தா ஆச்சு.. வா.. வா.. என்று இழுத்துக்கொண்டு போவார்கள்.. இத்தனைக்கும் 1 மலை கூட வந்திருக்கமாட்டார்கள்.. (பாலமலை 7 மலைகளை கொண்ட தொடர்).. பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும்.. பார்த்துக் கொண்டு மட்டும் இல்லாமல், எட்டி நடை போட்டால் தான் நாமும் சூரிய வெளிச்சம் மறையும் முன் வீடு வந்து சேரலாம்..

ஆனால் சூரிய வெளிச்சம் மறைந்த பின் ( மாலை 6, 7 மணிக்கு ) பயணத்தை ஆரம்பித்து, விடிவதற்குள் மலை இறங்கி வருபவர்கள் தான் அதிகம் இங்கேஅதை நினைத்தாலே சிலிர்க்கின்றது எனக்குபட்ட பகலில் மலை ஏறுவதில் கால்கள் தான் வலிக்குமே அன்றி, வேறு சிரமங்கள் இல்லை.. இரவில் ஏறுவதானால்அடேயப்பா…!!! ஆனால் இரவில் தான் அதிக கூட்டம் இருக்கின்றது.. டயர்களை கொளுத்திக் கொண்டும், டார்ச்சு லைட்டுகளை ஏந்திக்கொண்டும் சாரி சாரியாய் மக்கள்

அடுத்த இடம் பெரியகுளம்வருஷந்தோறும் வருபவர்கள், அடிவாரத்தில் ஏற ஆரம்பித்த பின் பெரியகுளம் வந்து தான் நீண்ட ஒய்வெடுப்பார்களாம்.. (அதிகபட்சமாய் 1/2 மணி நேரம்..) பெரியகுளத்தையும் தாண்டி வந்துகொண்டிருக்கையில் ஓரிடத்தில் பாறைகளுக்கிடையில் நீரோடை உண்டு.. அதில் தண்ணீர் எடுத்து கொண்டு, சர்வ சாதாரணமாய் போய்க்கொண்டிருப்பார்கள் மலைக்காரர்கள் என்ற உள்ளூர்வாசிகள்.. தண்ணி பாட்டிலையும், இட்லி, சாப்பாட்டு பொட்டலங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு செல்லும் நாம் தஸ்ஸு புஸ்ஸு என்று மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, தண்ணிக் குடம், மூங்கில் கட்டுகள், விற்பதற்கு பெரிய பெரிய மூட்டைகள் என்று மலைக்காரர்கள் தூக்கிக் கொண்டு போவதை பார்த்தாலே பக்குன்னு இருக்கும் நமக்கு…  

நாங்கள் பார்த்த போது வீடு கட்டுவதற்கு கருங்கல்லையும், சிமெண்ட்டு மூட்டைகளையும் சுமந்து கொண்டு போனார்கள்நல்லா ஸ்ட்ராங்கா இருக்காங்க என்று சொல்லிக்கொண்டாலும்ஒரு அவசர ஆபத்துக்கு கூட அவர்கள் இவ்வளவு பெரிய மலைத்தொடரை தாண்டித்தான் வரவேண்டும் என்பது ரொம்ப கொடுமையான விஷயமே!!!! இப்பொழுதும் பிரசவ வலி கண்டுவிட்டால், மூங்கிலில் தொட்டில் கட்டித்தான் அடிவாரம் வரை அழைத்து வர வேண்டுமாம்.. நினைத்தாலே மயங்கிவிழுந்துவிடுவோம் நாம்..


மலைத் தொடர்
இப்படியாக ஒருவழியாக இஷ்டப்பட்டு கஷ்ட்டப்பட்டு சித்தேஸ்வரரை தரிசித்தோம்... கோவில் சிறிது தான்.. அதிலும் ஒரு பக்கமே தடுப்புகள் உண்டு.. இன்னொறு பக்கம் சற்றே எட்டுப் பார்த்தால், கிடு கிடு பள்ளம்... கோவிலின் முன்புறம் நின்று பார்த்தால் குட்டியாக மேட்டூர் அணையும், அந்த கூண்டுகளில் இருந்து வரும் புகையும் தெரியும்... 

ஒருவழியாக சித்தேஸ்வரரை வணங்கியாச்சு.. ஏறது தான் கஷ்ட்டம்.. இறங்கறது சுலபம்ன்னு நினைச்சீங்க.... ம்ஹீம்... தப்பு... இறங்குவது தான் சிரமம்.. மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது.. ஆனால் கால்கள் நிற்காமல் இறங்கிக் கொண்டிருக்கவே சொல்லும்... தப்பித் தவறி நின்றால் நடுங்கும்... ஆனால் ஏறியதை விட வேகமாக இறங்கிவிட முடியும்... பத்திரமாய் இறங்கிவிட்டதற்கு அடிவார பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வீட்டுக்கு ஓடி வந்து விடலாம் சந்தோஷமாய்... ஏனெனில் சித்தேஸ்வரன் மலைக்கு செல்வது என்பது ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம் மட்டும் அல்ல, சற்றே சிரமமான பயணமும் கூட.. மனமென்னும் பேட்டரி ஃபுல் சார்ஜ் ஆகிவிட்டாலும், உடலில் உள்ள பேட்டரி  ரொம்ப கீழிறங்கிவிடும்... ரெண்டு நாட்களாகும் மீண்டும் சார்ஜ் ஏற... 

பலர் பக்தியின் காரணமாகவும், சிலர் உடலுக்கு ஒரு பயிற்சி என்று சொல்லிக்கொண்டும் செல்வார்கள்.. எது எப்படியோ.. ஓரளவு உடல் வலிமை உள்ளவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் சித்தேஸ்வரர் கோவில்...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP