அட்வர்டைஸ்மெண்ட் அபத்தங்கள்
October 22, 2011
டிவில அரைமணிநேரம் ஒரு நிகழ்ச்சிய பார்த்தோம்ன்னா அதுல எப்படியும் ரெண்டு விளம்பர இடைவேளை வந்துடுது… பாட்டு படறது, சீரீயல், பாடல்கள், ஆடல் நிகழ்ச்சிகள்ன்னு ஒரே மொக்கை நிகழ்ச்சிகளா தான் இருக்கும்.. படங்களைத் தவிர உண்மையிலேயே நான் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சின்னு ஒன்னு டிவில கிடையவே கிடையாது. டைம் பாஸ், கொஞ்சம் ரிலாக்ஷேஷன் அப்படி இப்படின்னு வேற வழியில்லாம தான் டிவி பார்க்க வேண்டியிருக்கு…
ஆனாலும் அதுல வர்ற விளம்பர இடைவேளைங்கறது அடுத்த சேனலை மாற்றுவதற்கே…
பல சமயத்துல நிகழ்ச்சிகளைவிட விளம்பரங்களே அருமையாக இருப்பதும் உண்டு. சிலது கொஞ்சம்
மொக்கையாகவும், சிலது ரொம்ப அபத்தமாகவும் இருக்கும்.. அதுல சிலவற்றை பற்றி…
- பொம்மிஸ் நைட்டீஸ்
- Johnson & Johnson Baby wipes
பிறந்த குழந்தைகளுக்குன்னு ஒரு துணி இருக்கும் பாருங்க அந்த
வீடுகள்ல்ல.. அப்பா.. அவ்வளவு மென்மையா இருக்கும்.. குழந்தை மென்மையா இல்ல அந்த துணி
மென்மையான்னு தாராளமா பட்டிமன்றமே வைக்கலாம்… பிறந்த குழந்தைக்கான எல்லா விஷயங்களுமே
இவர்களிடம் வாங்கவைப்பதற்கான தந்திரமே இது…
- Baby Diapers
குழந்தைகள் வீட்டில் உலர்ந்த உடைகளோடு ஆடவும் பாடவும் செய்வார்கள்
என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.. இது தவறல்லவா.. குழந்தைகளை வெளியில் அழைத்துப் போகும்
போது தான் diaper போடவேண்டும்… பஸ்ல குழந்தையை எடுத்து செல்கிறோம்… அப்போ அவசரம்ன்னா
என்ன செய்வோம்… அந்த மாதிரியான சமயங்களிலே தான் நாம diaper உபயோகிக்க வேணும்.. அதைவிடுத்து
வீட்டிலிருக்கும் சமயங்களிலே கூட செய்வதென்பது குழந்தையை படுத்தியெடுப்பதே ஆகும்..
ஆனால் அந்த விளம்பரங்களில் எல்லாம் வீட்டில் இருக்கும் போதும்,
இரவிலும் பயன்படுத்துங்கள் என்றே சொல்கிறார்கள்… அது அபத்தத்தை தவிர வேறேன்ன..
- Sanitary pad விளம்பரங்கள்…
- Toothpaste விளம்பரங்கள்
அந்த விளம்பரங்களில் இரண்டு வேளையும் முறையாக பல்விளக்கவேண்டும்
என்று சின்ன எழுத்தில் போட்டிருப்பார்கள்…
டூத்பிரஷ் விளம்பரங்களும் அவ்வாறே….
இந்த வரிசையில் இன்னும் கொஞ்சம் இருக்கு… முடிந்தால் இன்னொரு
பதிவாக போடுகிறேன்…
6 கருத்துகள்:
விளம்பரப் படங்கள் சில அதன் கதை பிளஸ் கவிதைத் தன்மையில் கட்டிப் போடுவதை மறுக்க முடியாது..
//பல சமயத்துல நிகழ்ச்சிகளைவிட விளம்பரங்களே அருமையாக இருப்பதும் உண்டு//
உண்மைதான்..
//
டிவில அரைமணிநேரம் ஒரு நிகழ்ச்சிய பார்த்தோம்ன்னா அதுல எப்படியும் ரெண்டு விளம்பர இடைவேளை வந்துடுது…//
எனக்கென்னவோ விளம்பரங்களுக்கிடையே நிகழ்ச்சிகள் போடறாங்கன்னு தோணுது! ஆனா நீங்க சொன்னது போல சில விளம்பரங்கள் நல்லாயிருக்கு என்பது உண்மை!
வாங்க ஹேமா..
ஆமாம்... விளம்பரங்களுக்கிடையில் ஏதோ போனா போகுதுன்னு தான் நிகழ்ச்சிகளையும் போடறாங்க...
வருகைக்கு நன்றி...
Nice interesting observation
தினமும் இரண்டு வேளையும் முறையாக பல்விளக்கி, சாப்பிட்ட பின் (3 வேளையும்) வாய் கொப்பளித்தால் தான் அந்த கிருமிகள் போகும்…
அந்த விளம்பரங்களில் இரண்டு வேளையும் முறையாக பல்விளக்கவேண்டும் என்று சின்ன எழுத்தில் போட்டிருப்பார்கள்…
டூத்பிரஷ் விளம்பரங்களும் அவ்வாறே…
அருமையான பூசலம்புப் பார்வைகள்.. பாராட்டுக்கள்..
Superb post . first time here. Romba interesting aa, correct aa solli irukeenga.. keep up this gr8 job ..Vazhthugal:)
Post a Comment