கடுப்பேற்றிய புலி
August 17, 2012
பிரயாணத்துக்கு தயாராகும் போது முதலில் ஒரு புத்தகத்தை எடுத்துவைத்துக்கொள்வது, பின்னரே டிக்கெட்டு, துணிகள் போன்றதை அடுக்குவது, ஹேண்ட் பேக் வாங்கும் போது ஒரு புத்தகமாவது வைக்கும்படி கொஞ்சம் பெரியதாக வாங்குவது, அனுமார் வாலைப்போல் நீளமான, வாங்கவேண்டிய புத்தக லிஸ்ட்டை வைத்திருப்பது, அதை பொழுதனைக்கும் update வேறு செய்வது, பின்னாடி வீடு கட்டும் போது வரவேற்பறையுடன் கூடிய நூலகம் ஒன்றையும் கட்டவேண்டும் என்று நினைத்துக் கொள்வது... இப்படி ஒரு புத்தக பிரியர்க்கு உண்டான அத்துணை விஷயங்களும் உண்டு என்னிடத்தில்...
இப்போது தான் புத்தக பிரியை, ஆரம்ப காலத்தில் எல்லாம் புத்தக வெறியை தான் நான்.. பாடபுத்தகத்தை தவிர ஏதேனும் ஒரு கதைபுத்தகத்தை படித்துக் கொண்டேயிருப்பது, அதனால் எப்போதும் வீட்டில் வாங்கிக் கட்டிக்கொள்வது, பரிட்சையில் மார்க் கம்மியாக வாங்கி முதுகில் டின் வாங்குவது என்று... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..
புடவை கடைக்கும் வளையல் கடைக்கும் போய் ஏதும் வாங்காமல் வந்த நாட்கள் கூட உண்டு, ஆனால் புத்தக கடைக்குப் போய், கையை வீசிக்கொண்டு வந்ததேயில்லை.. அப்படிப்பட்ட என்னை 'புத்தகங்கள் என்பதே பொய்களடா... வெறும் டைப் அடிக்கப்பட்ட வரிகளடா... என்று புலம்ப வைத்துவிட்டது ஒரு புத்தகம்...
2008க்கான Man Booker பரிசை அரவிந்த் அடிகாவின் 'The White Tiger' என்னும் நாவல் வென்றிருக்கின்றது என்று படித்தவுடன் என்னுடைய லிஸ்ட்டில் mark செய்து வைத்துக் கொண்டேன்... இத்தனை வருடங்களுக்கு பிறகு 10 நாட்களுக்கு முன்னாடி விதி என்னை mark செய்தது... அதோடு விடாமல் பர்ஸில் இருந்து 300 ரூபாய்க்கு வேட்டும் வைத்தது.
ஒருவழியாக நேற்று தான் கஷ்டப்பட்டு படித்து முடித்தேன்... கதை என்கிற வஸ்த்து/வெங்காயம்/புடலங்காய்/புண்ணாக்கு என்பது கூட தேவையில்லை... குறைந்த பட்சம் வர்ணனைகளாவது ஸ்வாரஸ்யமாக இருக்க வேண்டாமா... அதுவும் இல்லை...
உண்மையில் சேத்தன் பகத் நாவல்களில் கதை என்பதில் புதிய விஷயம் ஒன்றும் இருக்காது... ஆனாலும் அந்த நக்கல்கள், நையாண்டிகள் ரசிக்க கூடியவையாக இருக்கும்.. அது கூட இதில் இல்லை..
ஒற்றனில் வரும் பிராவோ போல் ஸ்கெட்ச் போட்டு, சார்ட்டு போட்டுக் கொண்டு கதை எழுத வேண்டாம்... ஆனால் ஒரு characterizationஆவது இருக்க வேண்டாமா...
இந்த நாவல் முழுவதும் இந்தியாவில் உள்ள - ஏற்றத்தாழ்வுகள், லஞ்ச லாவண்யங்கள், சீர்கேடுகள் இவைகள் (மட்டும்) தான் உள்ளது... யார் சொன்னது இந்தியாவில் இதெல்லாம் இல்லையென்று... அதையெல்லாம் பட்டியல் மட்டும் போட்டால், அதற்க்கு பெயர் நாவலா..? அதற்க்கு பரிசு வேறா... கதை, நாவல் என்று சொல்லி பரிசு தந்திருக்கக் கூடாது... ஒரு article, coverage என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்... ஆனால் அப்போதும் பரிசு தருவதற்க்கெல்லாம் இல்லை.
321 பக்கம் இருக்கும் 300 ரூபாய் விலையுள்ள இந்த புத்தகத்தில் சற்றேனும் ஆறுதல் அளித்த ஒரே வரி இது தான்... "One fact about India is that you can take almost anything you hear about the country and turn it upside down and then you will have the truth about that thing"
இந்த.. இந்தியாவில் பிறந்துவிட்டு, வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு, அல்லது வெளிநாடுகளில் பிறந்து அங்கேயே வளர்ந்து, வாழ்ந்து கொண்டு.. ஆனால் அதே சமயம் இந்தியாவில் உள்ள மார்க்கெட்டையும் விட்டு விட முடியாமல், இந்தியா தான் என் வேர், கிளைகள் இருப்பது மட்டும் இங்கிலாந்து, அமெரிக்காவில் என்று சொல்லிக்கொண்டு, நம்மை தொல்லை செய்யும் வியாபார நோக்குடையவர்களை கண்டால்..... கொலைவெறி தான் வருகிறது...
Slumdog millionaire, The White tiger போன்றவையெல்லாம் வெளிநாடுகளில் புகழ் பெறுவதற்கு காரணமே அவை இந்தியாவின் இருண்ட பக்கங்களை மட்டுமே காட்டுவது தான் போலிருக்கின்றது..
கொட்டாவி விட்டுக் கொண்டு, மணியை பார்த்துக் கொண்டு, தூங்கி வழிந்து கொண்டு, வேண்டாவெறுப்பாக படித்த முதல் நாவல் இது தான்...
"Blazingly Savage And Brilliant" - Sunday Telegraph
"A Master Piece" - The Times
இப்போது Sunday Telegraph, The Times பத்திரிக்கைகளை பற்றியும், Man Booker விருதைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து போய்விட்டது எனக்கு...
இந்த அழகில், இந்த கதையைப் படமாக எடுத்தால் அந்த ஹீரோ(!!!!!) வேடத்துக்கு பொருத்தமானவர் ரஜினி தான் என்று அடிகா சொல்லியிருக்கிறார்... ரஜினிக்கு இதைவிட மோசமான வேஷமே கிடைக்காது..
ஒன்று மட்டும் நிச்சயம்... அந்த பரிசு வாங்கியிருக்கு, இந்த பத்திரிக்கையில் நல்லதாக போட்டிருக்கிறார்கள் என்று நம்...பி... எதையும் வாங்கப்போவதில்லை நான்...
உண்மையில் இது புலி கூட இல்லை.. கழுதைப்புலி...
கடுப்பேற்றிய கழுதைப்புலி ....

5 கருத்துகள்:
இந்தியாவில் பிறந்துவிட்டு, வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு, அல்லது வெளிநாடுகளில் பிறந்து அங்கேயே வளர்ந்து, வாழ்ந்து கொண்டு.. ஆனால் அதே சமயம் இந்தியாவில் உள்ள மார்க்கெட்டையும் விட்டு விட முடியாமல், இந்தியா தான் என் வேர், கிளைகள் இருப்பது மட்டும் இங்கிலாந்து, அமெரிக்காவில் என்று சொல்லிக்கொண்டு, நம்மை தொல்லை செய்யும் வியாபார நோக்குடையவர்களை கண்டால்..... கொலைவெறி தான் வருகிறது...
நன்றி.. எனக்கு 300 ரூ சேமித்துக் கொடுத்ததற்கு !
ரொம்ப நாளாச்சு.. உங்க பதிவுகள் பார்த்து.. மீண்டும் பார்க்க மகிழ்ச்சி :)
//Slumdog millionaire, The White tiger போன்றவையெல்லாம் வெளிநாடுகளில் புகழ் பெறுவதற்கு காரணமே அவை இந்தியாவின் இருண்ட பக்கங்களை மட்டுமே காட்டுவது தான் போலிருக்கின்றது..//
ஆயிரம் சதம் உண்மை. ஸ்லம் டாக் வந்த பொழுது நான் சொன்னது, இந்தியாவின் ஏழ்மையை காட்டி பணம் பண்ணுகிறார்கள்
வாங்க ரிஷபன்...
//எனக்கு 300 ரூ சேமித்துக் கொடுத்ததற்கு //
அப்பாடா.. பதிவுக்கு பலன் கிடைத்துவிட்டது... நன்றி.. நன்றி...
வாங்க எல்.கே...
உண்மைதான்... இந்தியாவின் ஏழ்மையை காட்டி பணம் பண்ணுபவர்கள் இவர்கள்... அன்னை தெரசா பிரபலமானதற்கு இது தான் காரணம் என்ற எண்ணமும் எனக்கு உண்டு...
//அன்னை தெரசா பிரபலமானதற்கு இது தான் காரணம் என்ற எண்ணமும் எனக்கு உண்டு.../
நான் ஒருத்தன்தான் இப்படி நினைக்கறேன்னு பார்த்தா இன்னொரு சப்போர்ட் இருக்கா ... இதை சத்தமா சொல்லிடாதீங்க சண்டைக்கு வருவாங்க.. அவங்க பிரபலம் ஆக மற்றொரு காரணம் மத மாற்றம்
Post a Comment