காணி நிலம் வேண்டும் பராசக்தி - அதுவும் சென்னையில் தான் வேண்டும்
June 24, 2009
சென்னைமா நகர்... பெரிய பெரிய கட்டிடங்கள், எந்நேரமும் விழித்துக் கொண்டிருக்கும் சாலைகள், சீறிச் செல்லும் வண்டிகள், இவங்களுக்கெல்லாம் மெதுவாகவே போகத்தெரியாதா.... ன்னு நினைக்க வைக்கும் மக்கள் கூட்டம், பெரிய பெரிய விளம்பர பேனர்கள் ன்னு சென்னை எப்போதும் பிரமிப்பு தான்... பாக்க பாக்க இந்த அசுர ஓட்டத்தில கலந்துக்க மாட்டமான்னு தான் தோணுது....
ஆனா.... ladies hostel ங்கற பேர்ல அங்க இருக்கற rooms ல்லாம் பாத்தா ஆணியே புடுங்க வேணாம்ன்னு தோணுது...
roomங்கற பேர்ல ஒரு குடோன், compulsoryயா அது இருட்டா தான் இருக்கும்.. ஒரு ரூம்ல கொறஞ்சது4-5 பேர் , சூரிய வெளிச்சம்ன்ற ஒரு வஸ்துவே உள்ள வராத ஒரு அமைப்பு.. ஒரு ரூம்ன்னு சொல்லிக்கிட்டாலும், அந்த ரூம்ல ஒரே ஒரு கட்டில் தான் சொந்தம்.. அந்த கட்டில் கீழயே suitcase, செருப்பு, bucket. இருக்கற ஒரு shelfல, தட்டு, டம்ளர், creams, ஊறுகாய் இத்தியாதிகள்... அதுக்குள்ளயே சாமி படத்துக்கு ஒரு சின்ன இடம்... பாதுகாப்புங்கறது பேருக்கு கூட கிடையாது... யார் வேணா, எப்ப வேணா, உள்ள (திருட) வரலாம்ன்ற மாதிரி ஒரு அமைப்பு .. இதெல்லாம் சேந்தது தான் சென்னை ladies hostel..
சென்னையில சொந்தமா, சின்னதா ஒரு வீடு (வீடு, அபார்ட்மெண்ட் இல்லை) இருந்தா, அதுல ரெண்டு மாடி கட்டி, 10, 12 அறைகள் கட்டி, ஒரு மெஸ் வெச்சு, அந்த மெஸுக்குள்ளயே ஒரு டிவி வெச்சு.. 10க்கு 10 அறையை 10,000 ரூபாய்க்கு(மாசத்துக்கு) வாடகைக்கு விட்டு சம்பாதிச்சுருக்கலாம்...
சென்னைக்கு பிழைக்கவரும் கூட்டத்தை வைத்து ஒரு கூட்டம் பிழைக்குது பாருங்கள், அவர்கள் தான் உண்மையிலேயே பிழைக்கத் தெரிந்தவர்கள்...
இப்படி பிழைக்க தெரியாததினால் தானே
அதில் 10, 12 அறைகள் வேண்டும், அதை நான் வாடகைக்கு விட்டு சம்பாதிக்க வேண்டும் என்று கேட்காமல்,
காணி நிலம் வேண்டும் பராசக்தி - அதில் பத்து பன்னிரண்டு தென்னைமரம் வேண்டும் என்று கேட்டான் அந்த முண்டாசு கவிஞன்...
0 கருத்துகள்:
Post a Comment