மைக்கேல் ஜாக்சன் இந்தியாவில் இருந்திருந்தால்...
June 28, 2009
மைக்கேல் ஜாக்சனின் மரணம் ஈடுகட்ட முடியாத ஒண்ணு தான்... ஆனா அவரு அமெரிக்காவில் இருந்திருக்க வேண்டியவரே இல்ல... இந்தியாவில் இருந்திருக்க வேண்டியர்... நெஜமாத்தாங்க சொல்றேன்...
ஒருவேளை மைக்கேல் ஜாக்சன் இந்தியாவில் இருந்திருந்தா..., பாலியல் குற்றச்சாட்டுகள் வரும்போது அதை அப்படியே அமுக்கியிருக்கலாம், அப்பவும் அத ஒண்ணும் பண்ண முடியலன்னா.. ஒரு 5 - 6 வருஷம் கழிச்சு ஒரு கட்சியில சேந்து எம்.எல்.ஏ, எம்.பி ன்னு ஆகிருக்கலாம்... அவர கட்சியில சேத்துக்கிட்டா... கருப்பின வோட்டுக்களை அப்படியே அள்ளிடலாம்ன்னு கட்சிகளும் அவர சேத்துக்கிட்டு இருக்கும்... அப்பறம் அப்படியே மந்திரியாகி 400 மில்லியன் சொத்து சேத்திருக்கலாம்.... அதவிட்டு இப்படி 400 மில்லியனுக்கு கடனாளியாகி இறந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது....
கட்டுக்கடங்காத புகழ், பணம், உலகெங்கும் தன்மீது வெறி கொண்ட ரசிகர்கள் என்று புகழின் உச்சாணிக்கொம்பில் யார் இருந்தாலும், என்ன செய்யறோம் ன்னு தெரியாம, தலைகுப்புற விழுவது இயல்புன்னே எனக்கு தோணுது... இதுக்கு நிறைய உதாரணங்கள் இருக்கு... சாதாரணமா நம்ம யாராவது கவனிக்கறமாதிரி தெரிஞ்சாலே, நம்மால இயல்பா இருக்க முடியாது... அப்படி இருக்கப்போ.. உலகமே நம்மள தான் கவனிக்குதுங்கறப்ப.... ஒரு மனிதன் வேறு எப்படித்தான் இருக்க முடியும்....
7 கருத்துகள்:
//இந்தியாவில்இருந்திருந்தா...............அவசியம் ஏற்பட்டிருக்காது//
நாலைந்து பஸ் எரிந்திருக்கும், கடைகள் மூடப்பட்டு பள்ளி,கல்லூரிகள் விடுமுறை.
விட்டு விட்டீர்களே
சகாதேவன்
அட ஆமாம்ல.... மறந்தே போய்ட்டேன்... விட்ட பாய்ண்ட எடுத்துக் கொடுத்த்துக்கு நன்றி சகாதேவன் சார்...
//மைக்கேல் ஜாக்சனின் மரணம் ஈடுகட்ட முடியாத ஒண்ணு தான்... ஆனா அவரு அமெரிக்காவில் இருந்திருக்க வேண்டியவரே இல்ல... இந்தியாவில் இருந்திருக்க வேண்டியர்... நெஜமாத்தாங்க சொல்றேன்...//
ஆனாலும் இது ரொம்ப அதிகம். மைக்கேல் ஜாக்சன் இந்தியாவில் இருந்திருந்தால், இந்த அளவுக்கு கீழ்த்தரமா போயிருக்கவே மாட்டார். ஏன்னா இது இந்தியா
வித்யாசமான சிந்தனை...
அடிக்கடி எழுதுங்கள்
வாங்க பீமா அண்ணே... என்னையும் மதிச்சு பின்னூட்டம் போட்டதுக்கு ரொம்ப நன்றிண்ணே..
//ஏன்னா இது இந்தியா//
மாயாவதி மாதிரி ஆளுங்க இருக்கப்போ எப்படிண்ணே... அப்படி சொல்றது....
வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க, சுகுமார்...
கண்டிப்பா எழுதறேன்....
மாயாவதி மாதிரி ஆளுங்கள மட்டும் ஏன் பார்க்கணும். நல்லவங்களும் நெறைய பேர் இருக்காங்களே. அப்துல் கலாம், சுவாமிநாதன், நம்மாழ்வார், மன்மோகன் சிங் .. ஏன் நீங்க கூட இருக்கீங்களே :)
நான் சொல்ல வந்தது, மைக்கேல் ஜாக்சன் இந்தியாவில இருந்திருந்தார்னா ரஹ்மான் மாதிரி 'நல்லபடியா' முன்னேறி இருப்பார். கண்டத பண்ணி பேர கெடுத்திருக்க மாட்டார்.அவர் கெட்ட நேரம் அங்க வாழ்ந்து கடைசில 'எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்' கதைதான்.
Post a Comment